லேபிள்கள்

புதன், 23 ஏப்ரல், 2025

பாதங்களின் வலியைப்போக்க எளிய வழி முறைகள்.

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத் தேய்க்க வேண்டும்.

இதனால் பாதங்களில் ஏற்படும் வலி குறையும்.

பிறகு மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவ வேண்டும். பாதங்களுக்கு மசாஜ் செய்யும் போது உடலின் முக்கிய நரம்புகள் தூண்டப்படுகிறது. இதனால் மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மிதமான சுடுநீரில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

இரவு நேரத்தில் பாதங்களைக் கழுவி பராமரித்து வந்தால் இறந்த செல்கள் நீங்கும். இரத்த ஓட்டம் தூண்டப்படும். மூட்டு வலிகள், தசை வலிகள் குணமாகும். மூளையும் மனதும் அமைதி ஆவதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் அழுக்குகளை நீக்கி, பாதக் கிருமிகளை ஒழிக்கும்.

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.



--

சனி, 19 ஏப்ரல், 2025

வெயில் காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

பொதுவாக கரும்பு ஜூஸை எல்லோரும் அருந்தும் ஒரு அற்புத பானமாகும்.

இதில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம்.

குறிப்பாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய உள்ளன. இதனை குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றது.

அந்தவகையில் கரும்பு ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.

கரும்பு சாறு உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

நீங்கள் செரிமான பிரச்சினை யால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும்.

உங்கள் தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் உணர்ந்தால், கரும்பு சாற்றை ஒரு குவளையும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு ஒரு குவளையுடன் குடிக்க வேண்டும்.

கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது, இது எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம். நம் எடையை நிர்வகிக்க உதவும் வகையில் இதுவும் ஒன்றாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கரும்பு சாறு அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.

கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.

உடல் எரிச்சல் இருந்தால் கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

குழந்தைகளுக்கு அடிக்கடி விளையாடும் போது கீழே விழுவதன் காரணமாக புண்கள் உண்டாகும். இதற்கு கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.

முகப்பரு க்களை போக்க நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.



--

புதன், 16 ஏப்ரல், 2025

நரைமுடிபிரச்சினை வராமல் இருக்க செய்ய வேண்டியதுஎன்ன?

கருப்பாக மாறுதோ இல்லையோ

இருக்கும் முடி நரையாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதற்கு நரைமுடி என்ன காரணத்தினால் வந்தது என்பதை முதலில் அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் மரபணுவால் வந்த நரையை தவிர மற்ற அனைத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

உடலில் தைராய்டு சுரப்பி உடலின் அனைத்து முக்கிய செயல்பாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. தைராய்டு ஹைப்பர் தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டிசம் முன்கூட்டிய வெள்ளைமுடி ஏற்படலாம். அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம். இது உங்கள் தலைமுடியில் நிறமி இழப்பை ஏற்படுத்த காரணம் தைராய்டா என்பதை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

நரைமுடி தீவிரமாகாமல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் பார்க்கலாம். வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளில் பால் மற்றும் பால் தயாரிப்புகள், முட்டைகள், விலங்குகளில் கல்லீரல், மீன், டுனா மீன், சால்மன், தயிர்,நண்டு போன்றவற்றில் வைட்டமின் பி 12 உள்ளன. வைட்டமின் பி 5 முடி நரைப்பதை தடுக்கவும் அதன் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கவும் பயன்படுகிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. உச்சந்தலை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் பி5 காளான்கள், முழு தானியங்கள், ப்ரக்கோலி, சூரியகாந்தி விதைகள் போன்ற வைட்டமின் பி5 நிறைந்த உணவுகளை சேருங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை பெண்களும் கொண்டிருக்கிறார்கள். தலைமுடியின் ஆரோக்கியத்திலும் முடியின் நிறத்திலும் புகைப்பிடிக்கும் பழக்கம் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. இது உடலில் பாதகாமான விளைவுகளை உண்டாக்குவது போன்று கூந்தலுக்கு வெள்ளை நிறத்தையும் உண்டாக்கும். ஏனெனில் புகைபிடிக்காதவர்களை கட்டிலும் புகைப்பிடிப்பவர்கள் வேகமாக தலைமுடி நிறம் இழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு சொல்கிறது.

வெள்ளை முடியை குறைக்க எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் பி 12 குறைபாட்டால் நீங்கள் நரைமுடி பெற்றிருந்தால் கடல் உணவுகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.

பால் மற்றும் சீஸ் போன்றவை நல்ல ஆதாரங்கள் ஆகும். சைவ உணவை எடுத்துகொள்பவர்கள் மருத்துவரை அணுகிய பிறகு வைட்டமின் பி 12 உணவுகளை தேர்வு செய்யலாம். பெர்ரி வகைகள், திராட்சை, பச்சை இலை கொண்ட காய்கறிகள், க்ரின் டீ போன்ற ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். பெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இறைச்சிகல் இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை எதிர்த்து போராடுகிறது.

கேரட் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் கறிவேப்பிலை வைட்டமின்கள் பி மற்றும் செலினியம், அயோடின், துத்தநாகம் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்தவை.



--

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

முட்டைகளின் மஞ்சள்கரு எந்த நிறத்தில் இருந்தால் நல்லது?

முட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது என்றால், அது ஆரஞ்சு நிறமுள்ள மஞ்சள் கரு தான்.

ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லது ஏன்?

முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து, சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

மேலும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மஞ்சள் கரு இருந்தாலும், அது நல்லது. ஏனெனில் அது ஆர்கானிக் முட்டை என்று கூறலாம்.

மஞ்சள் நிறத்தில் உள்ள மஞ்சள் கரு ஆபத்தா?

முட்டையின் மஞ்சள் கருமஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நல்லதல்ல. ஏனெனில் அவை முற்றிலும் குறைவான தரம் கொண்டவை. அந்த முட்டை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கப்பட்டதாகும்.

தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?

தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். அதுவே மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் 1 முட்டை சாப்பிட்டால் போதும்.

கடுமையான ஜிம் பயிற்சி செய்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 4 முட்டை சாப்பிடலாம். ஆனால் கணிணி முன் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடக் கூடாது.

முட்டையை தரமானதாக இருந்தால் பச்சையாக சாப்பிடலாம். அதைவிட வேக வைத்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கும்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

இதய நோய் மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மட்டும் முட்டையை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு

முட்டையை அதிக நேரம் வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடக் கூடாது. ஆனால் காய்கறிகளை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிடலாம்.



--

புதன், 9 ஏப்ரல், 2025

பழங்கள் சாப்பிட சிறந்த நேரம் எது? நிபுணர் கருத்து.

பழங்கள் என்று வரும்போது,     அவற்றை உண்பதற்கு ஒரு சிறந்த மற்றும் மோசமான நேரம் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

உதாரணமாக, காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லது என்று மக்கள் கூறுகிறார்கள்; அதேநேரம் சிலர், ஒவ்வொரு உணவிற்கும் முன்னும், பின்னும் பழங்களை உண்ண வேண்டும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால்: உண்மையில் பழங்களை சாப்பிட சிறந்த நேரம் இருக்கிறதா? அவற்றைத் தவிர்க்க வேண்டிய நேரம் ஏதேனும் உண்டா?

இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மருத்துவர் அச்யுதன் ஈஸ்வர், இன்ஸ்டாகிராமில் பழங்களை' நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்று விளக்கினார்.

'இரண்டு விஷயங்கள் மட்டுமே முக்கியம்' என்று மருத்துவர் ஈஸ்வர் விளக்கினார்:

1. தினமும் குறைந்தது மூன்று பழங்களாவது சாப்பிடுகிறீர்களா ?

'இதை விட குறைவாக சாப்பிட்டால், பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். நீங்கள் இதை விட அதிகமாக சாப்பிட்டால், கூடுதல் பலன் இல்லை''

2. நீங்கள் நாள் முழுவதும் பழங்கள் சாப்பிடுகிறீர்களா ?

'காலையில் பழங்கள் சாப்பிட்டால், காலையில்தான் அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாலைக்குள், உங்கள் ஆக்ஸிஜனேற்ற நிலை குறையலாம்.

'நீங்கள் தாவர அடிப்படையிலான உணவில் (plant-based diet) புதியவராக இருந்தால், இதோ ஒரு சூப்பர் சிம்பிள் டிப்ஸ்: ஒவ்வொரு உணவையும் ஒன்று அல்லது இரண்டு பழங்களுடன் தொடங்குங்கள். இது ஒவ்வொரு உணவையும் உடனடியாக ஆரோக்கியமாக்குகிறது.

'பழங்கள்' உங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்,' என்று மருத்துவர் முடித்தார்.



--

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? உங்களுக்கு இருக்கும் ஆபத்து தெரியுமா?

நம்மில் பலர் மிகவும் நேரம் கழித்து தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் நடு இரவில் தான் தூங்க செல்கின்றனர்.

இது பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இரவில் மிகத் தாமதமாக தூங்கி காலையிலும் தாமதமாக விழிக்கும் பழக்கம் உள்ளவர்களா? நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம்.

மிகத் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக விழிக்கும் இளைஞர்களுக்கு, தூக்கத்தில் சுரக்கும் ஹர்மோன் ஆன மெலெடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படுவதால், பல விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன மெலட்டோனின் இரவு நேரத்தில்தான் சுரக்கின்றன. இதனை எந்த மருந்தின் மூலமும் சுரக்க வைக்க முடியாது.

பதின்ம வயதில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தாமதமாக தூக்கி, தாமதமாக எழுபவர் என்றால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முறையற்ற தூக்க பழக்கத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இன்றைய இளைஞர்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தூக்கப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.



--

வியாழன், 3 ஏப்ரல், 2025

தூங்கும் போது இந்தபிரச்சினை எட்டிப் பார்க்கிறதா?

தூக்கம் என்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. தூக்கம் உங்கள் உடலைத் தானே சரிசெய்ய உதவுகிறது.

போதுமான நல்ல தூக்கம் பகலில் சாதாரணமாக செயல்பட உதவுகிறது.

தூக்கத்தின் போது இப்படி ஆகுதா?

தூக்கத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தூக்கத்தின் போது உங்கள் சுவாசப்பாதை மீண்டும் மீண்டும் தடுக்கப்படும்போது தூக்க மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, இதனால் நீங்கள் குறுகிய காலத்திற்கு சுவாசத்தை நிறுத்துவீர்கள்.

உடல் பருமன் மற்றும் இதய செயலிழப்பு போன்ற சில உடல்நலப் பிரச்சனைகளால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம். நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது என்பதைப் பாதிக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால்

பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணிநேரம் தூக்கம் தேவை. போதுமான தூக்கமின்றி இருப்பது காலப்போக்கில் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மேலும் சில உடல்நலப் பிரச்சனைகளை மோசமாக்கும்.

ஒவ்வொரு இரவும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெரியவர்கள், மாரடைப்பு, ஆஸ்துமா மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் ஆளாகலாம். இந்த உடல்நலப் பிரச்சனைகளில் சில இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.



--

பாதங்களின் வலியைப்போக்க எளிய வழி முறைகள்.

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் க...

Popular Posts