லேபிள்கள்

புதன், 26 மார்ச், 2025

கொசுக்களை விரட்ட எளிய வழிகள்.

பருவ காலங்கள் மாறும்போது கூடவே தொற்று நோய் தாக்கமும் வந்துவிடும். இதில் கொசுக்கடியினால் ஏற்படும் நோய்கள் தான் அதிகம்.

இதனால் கொசுக்களை விரட்டியடிக்க பலரும் பல விதமான வழிகளை கையாள்வது உண்டு. ஆனாலும் கொசுத்தொல்லை தீர்ந்தபாடில்லை. இதில் சில இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை விரட்டிக்கலாம்.

பொதுவாக தேங்கி நிற்கும் சாக்கடை, கால்வாய் போன்ற இடங்களில் கொசுக்கள் அதிகம் பரவும். இதனால் உங்களது வீட்டின் பக்கத்தில், இந்த மாதிரியான நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்தக்கொள்ளுங்கள்.

வீட்டில் வளர்க்கப்படும் செடி மற்றும் பூந்தொட்டிகளை சுத்தமாக பராமரிக்கவும். மிளகு எண்ணெய்'இயற்கை பூச்சிக்கொல்லியாகவும், கொசுவை விரட்டியடிக்கவும் பயன்படுகிறது. இதில் எலுமிச்சையுடன் மிளகு எண்ணெய் சேர்த்து தடவும்போது கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டை வீட்டில் சொசுவை விரட்ட முக்கிய பயனை தருகிறது. லவங்கப்பட்டை எண்ணெய்யுடன் சிறிதளது தண்ணீர் கலந்து தடவினால் கொசுக்கடியில் இருந்து நிம்மதியாக இருக்கலாம்.

கற்பூரம் கொசுக்களை விரட்டும் பண்பு கொண்டது. அறைக்குள் கற்பூரத்தை ஏற்றிவிட்டு அறை கதவை மூடிவிட்டு அரைமணி நேரம் கழித்து திறந்தால், அரையில் ஒரு கொசுகூட இருக்காது.

கொசுக்களை விரட்டுவதில் பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. பூண்டு துண்டுகளை நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை ஆறவைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் தெளித்தால் கொசு பறந்துவிடும்.

காபிக்கொட்டை கழிவுகளும் கொசுவை விரட்டும் திறன்கொண்டது. தேங்கி கிடக்கும் கழிவு நீரில் காபிக்கொட்டை கழிவுகளை தூவிவிட்டால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொசு முட்டைகள் இறந்து விடும்.



--

கருத்துகள் இல்லை:

மெனோபாஸ் (மாதவிடாய் நிற்கும் காலம்) கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக ? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் ? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம். ப...

Popular Posts