லேபிள்கள்

ஞாயிறு, 23 மார்ச், 2025

ஏர்-கூலர் மற்றும் ஃபேனில் வரும் காற்று போதவில்லையா?

வீட்டில் உள்ள ஏசி, ஏர்-கூலர், ஃபேன் போன்றவை பல மாதங்களாக பயன் படுத்தப்படாமல் இருந்திருக்கக் கூடும்.

இப்போது வெயில் காலம் தொடங்கிய உடன், முதல் வேளையாக ஏசியை நீங்கள் சீர் செய்திருக்கக் கூடும்.

ஆனால், கூலர் மற்றும் ஃபேன் ஆகியவை சரியாக தான் இயங்கும் என்று நம்பிக்கையில் நீங்கள் அப்படியே விட்டிருப்பீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு கூலர் மற்றும் ஃபேன்கள் அதிக நேரம் செயல்பட தொடங்கும். வோல்டேஜ் அளவு சரியாக உள்ள போதிலும், சில சமயம் போதுமான காற்று கிடைக்காமல் இருக்கும். உங்கள் வீட்டில் பவர் யூனிட்கள் சீராக செயல்படுகின்ற போதிலும், ஃபேன்களில் காற்று நன்றாக வரவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உடனடியாக அதன் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கூலர் மற்றும் ஃபேன்களின் செயல்திறனையும், வேகத்தையும் அதிகரிப்பது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். மேலும், மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாகவும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் எலெக்ட்ரீசியனை வரவழைத்து சீர் செய்ய வேண்டும் என்றோ அல்லது புதிய ஃபேன் வாங்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் செய்தால் போதும், உங்கள் ஃபேனின் வேகம் அதிகரித்து விடும்.

எந்தவொரு ஃபேனும் பிரஸரை கீழ்நோக்கி தள்ளுவதன் காரணமாகத்தான் காற்று கிடைக்கிறது. இதனால், ஃபேன் பிளேடுகள் மிக கூர்மையாகவும், முன் பகுதியில் வளைந்தும் காணப்படுகிறது.

முதலில் தூசியை சுத்தம் செய்யுங்கள்

கண்களுக்கு புலப்படாத தூசி மற்றும் காற்றில் கலந்து வரும் மண் துகள்கள் ஆகியவை ஃபேன்களுடைய பிளேடுகளில் படிந்து காணப்படும். உங்கள் ஃபேன் வேகம் அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தூசி இருப்பதால், ஃபேன்களின் லோடு அதிகரித்து விடுவதே அதற்கு காரணமாகும்.

வேகம் குறையும் அதே சமயத்தில், மோட்டார் சுத்துவதற்கு மிகுந்த எனர்ஜியை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக மின் கட்டணம் அதிகரிக்கும். நீங்கள் ஏர் கூலர் அல்லது டேபிள் ஃபேன் அல்லது ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், இந்த விதிமுறை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

சரி, ஃபேன் அல்லது ஏர் கூலரில் தூசி படிந்திருப்பது உங்கள் பார்வைக்கு எட்டி விட்டது. இப்போது பலரும் செய்யும் தவறு என்ன என்றால், அதை நேரடியாக பிரெஷ் கொண்டு சுத்தம் செய்வது தான். இப்படி செய்தால், அதில் உள்ள தூசி முழுமையாக வெளியேறாது. மேலும், தூசி உங்கள் மூக்கில் ஏறி, ஜலதோஷம் பிடிக்கக் கூடும். ஆகவே, நல்ல காட்டன் துணியை எடுத்து, ஈரத்தில் நனைத்து அதைக் கொண்டு சுத்தம் செய்யவும். அதே சமயம், பிளேடுகளை மிக அழுத்திப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. அதன் அமைப்பு நெளிந்து விட வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் செய்து முடித்த பிறகு ஃபேன் புதிது போல வேகமாக சுற்றத் தொடங்கும்.



--

கருத்துகள் இல்லை:

மெனோபாஸ் (மாதவிடாய் நிற்கும் காலம்) கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக ? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் ? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம். ப...

Popular Posts