லேபிள்கள்

புதன், 19 மார்ச், 2025

வீட்டை குளிர்ச்சியாக்குவது எப்படி?

வீட்டை அழகாக கட்டினாலும் காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்ப தாக்கம் குறையும்.

கோடை நெருங்குவதால் வெப்பத்தை விரட்டி வீட்டை குளிர்ச்சியாக்க எளிய முறைகளை பின்பற்றலாம். போதுமான ஜன்னல்கள் ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தாலும் மறு பக்கம் வெளியேறும் அமைப்பு இருக்க வேண்டும். அறையில் போதிய ஜன்னல் அமைக்கும் வகையில் ஜன்னல்கள் சரியான நீளம், அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. காலை நேரம் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள்.

வெயில் அதிகம் இருக்கும் போது அதை மூடிவிடுங்கள். வெப்பமானது வீட்டுக்குள் அதிகம் உட்புகாமல் இருக்கும்.சமையல் அறையில் சமைக்கும் போது வெளியேறும் புகை, காற்றில் கலந்து அறையில் பரவும். சமையல் அறையில் காற்றோட்ட வசதி மட்டும் போதாது. சமைக்கும் போது வெளிப்படும் நெடி வெளியேற வேண்டும்.

அதற்கு எக்சாஸ்ட் பேன் அவசியம். மஞ்சள் விளக்கு வேண்டாம் வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க மெல்லிய ஜன்னல் திரைகளை உபயோகிக்க வேண்டும். இதனால் காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும். பால்கனி, ஜன்னல்களில் மூங்கில் திரைகளை பயன்படுத்துங்கள்.

அதை அவ்வப்போது ஈரப்படுத்தினால் வீட்டை குளிர்ச்சியாக்க வைத்திருக்க உதவும். ஈரப்பதம் காற்றில் கலந்து இதமான சூழலை ஏற்படுத்தும்.வீடுகளில் உள்ள சீலிங், எக்சாஸ்ட் மின்விசிறிகளை அடிக்கடி துாசி படியாமல் சுத்தம் செய்ய வேண்டும். வெப்பம் அதிகம் உண்டாக்கும் மஞ்சள் நிற மின் விளக்குகளை தவிர்க்கலாம். அதற்கு மாறாக சி.எப்.எல்., எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தலாம்.

மாடி தரை தளத்தில் கூல் பெயின்ட் பூசினால் வீட்டிற்குள் வெப்ப தாக்கம் குறையும். மொட்டை மாடியில் செடிகள் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறு செடிகளை தொட்டியில் வளர்ப்பது வெப்பத்தை குறைக்க உதவும். அறைக்குள்ளும் அலங்கார செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் பரவி இருக்கும் காற்றில் உள்ள துாசிகளை ஈர்க்கும். வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். அவையும் வெப்ப தாக்கத்தை குறைக்கும். ஆனால், அவற்றை சுத்தமாக வைத்து கொள்ளாவிட்டால் கொசுக்கள், பூச்சிகளின் கூடாரமாக மாறி விடும்.



--

கருத்துகள் இல்லை:

இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? உங்களுக்கு இருக்கும் ஆபத்து தெரியுமா?

நம்மில் பலர் மிகவும் நேரம் கழித்து தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் நடு இரவில் தான் தூங்க செல்கின்றனர். இத...

Popular Posts