பொதுவாக சிலருக்கு பல் துலக்கும்போது இரத்த கசிவு ஏற்படுவதுண்டு.
ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப் படுகின்றது.
ஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும்.
பற்களில் கறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும். இதனால் மிகுந்த வலியும் ஏற்படும்.
இதிலிருந்து விடுபட இயற்கை முறையில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
உடலில் வைட்டமின் சி குறைபாட்டினாலும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வைட்டமின் ஏ குறைபாடும் வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆப்ரிக்காட் பழத்தில் பீட்டா-கரோட்டீன் அளவுக்கு அதிகமாக உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படும். எனவே ஆப்ரிக்காட் பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
பற்களின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. இத்தகைய கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. எனவே தினமும் தவறாமல் 2 டம்ளர் பால் குடியுங்கள். இதனால் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.
கேரட்டிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அத்தகைய கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக கடித்து நன்கு மென்று சாப்பிட்டால், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.
முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈறுகளில் இரத்தம் கசிவது தடுக்கப்படும். ஏனெனில் இவற்றில் வைட்டமின் சி, ஏ போன்றவை அதிகம் உள்ளது.
வெள்ளரிக்காய் வாயில் உள்ள அமிலத்தன்மையை சீராக பராமரிக்க உதவும். வாயில் அமிலத்தன்மை அதிகமானால், அதனால் பற்கள் மற்றும் ஈறுகள் தான் முதலில் பாதிக்கப்படும். எனவே வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், எலுமிச்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் வைட்டமின் சி குறைபாட்டினைத் தடுத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் செய்ய முடியும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு உள்ளவர்கள், தினமும் ஒரு பௌல் பச்சை காய்கறி சாலட் சாப்பிடுவதன் மூலம், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது குறையும்.
கிரான்பெர்ரி பழங்களும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை நிறுத்த உதவும். ஏனெனில் கிரான்பெர்ரி பழங்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இது வாயில் உள்ள அதிகப்படியான பாக்டீரியாக்களை அழிக்கும். எனவே இப்பழம் கிடைத்தாலோ அல்லது ஜூஸ் கிடைத்தாலோ, வாங்கிப் பருகுங்கள்.
அருகம்புல் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் பருகுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குறிப்பாக ஈறுகளில் இரத்தம் கசிபவர்கள், இந்த ஜூஸைக் குடித்தால், இரத்தக்கசிவு உடனே நிற்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கி, உடலும் நன்கு சுத்தமாகும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக