லேபிள்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2025

புரோட்டீன் பவுடர்என்றால் என்ன? இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.


புரதம்: நம் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. நம் உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் உற்பத்தியாக, குணமடைய, செல்கள் வளர, புதுப்பித்துக்கொள்ள புரதம் அவசியம்.

தேவையான அளவு புரதம் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு, எடை குறைப்பு மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

இறைச்சி, முட்டை, பால், மீன், சோயா என பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே புரதச்சத்து உள்ளது.

புரோட்டீன் பவுடர்:

விலங்கு அல்லது தாவர வகைகளில் இருந்து புரத சத்தை மட்டும் பிரித்து எடுப்பது தான் இந்த புரோட்டின் பவுடர்.

மொத்தம் 9 வகையான புரோட்டின் பவுடர் உள்ளன:

1. முட்டை புரோட்டீன் (Egg Protein)

2. வே புரோட்டீன் (Whey Protein)

3. பட்டாணி புரோட்டீன் (Pea Protein )

4. பிரவுன் அரிசி புரோட்டீன் (Brown Rice Protein)

5. சணல் விதைகள் புரோட்டீன் (Hemp Protein )

6. தாவர புரோட்டீன் (Plant Protein )

7. சோயா புரோட்டீன் (Soy Protein)

8. பாதாம் புரோட்டீன் (Almond Protein)

9. கேசீன் புரோட்டீன் (casein Protein)

விலங்கு வகையில் 2 வகையான பாலால் ஆன புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது:

வே புரோட்டீன் மற்றும் கேசின் புரோட்டீன்.

தாவர வகையின் பிரிவுகள்

- அரிசி, பட்டாணி, சோயா, பாதாம், சணல் விதை போன்றவற்றிலிருந்தும் புரோட்டீன் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ஸ்கூப்பில் 20-30 கிராம் புரோட்டீன் இருக்கும். அவரவர் தேவைக்கு ஏற்றார் போல (பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் பரிந்துரைக்கும் புரோட்டீன் அளவு) ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

1. உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

3. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலும் உடற்பயிற்சி செய்து தசைகளின் வளர்ச்சி ஆதரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் புரோட்டீன் பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

DRI (Dietary Reference Intake) அளவுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, 75 கிலோ எடையுள்ள நபர் - 75 கிலோ * 0.8கிராம்= 60 கிராம் புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை, நீங்கள் மசில் பிள்டிங் செய்பவராக இருந்தால், தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்க புரோட்டீன் அளவு ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1.4-2.0 கிராம் வரை மாறுபடும்.


--

கருத்துகள் இல்லை:

மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

பல வித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மண் பாண்டங்கள் உதவி புரிகிறது. இந்த மண் பாண்டங்கள் கோடை காலத்திற்கு மட்டுமல்ல எல்லா ...

Popular Posts