லேபிள்கள்

திங்கள், 6 ஜனவரி, 2025

திருமணமான பெண்கள் கவனத்திற்கு: சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

சமீப காலங்களில் அதிகமாக பெண்களை அச்சுறுத்தும் பிரச்சனையாக இருப்பது பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையாகும்..பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்று தான் கூறவேண்டும்.

நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.

பிசிஓடி உள்ள பெண்களுக்கு கருமுட்டை தாமதமாக உருவாகும் அல்லது உருவாகாது. இதனால் வழக்கமான மாதவிடாய் சுழற்சியானது பாதிப்படையும். ஒழுங்கற்ற மாதவிடாயால் குழந்தைப் பேறும் தாமதமாகும். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது

சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் என்று சரியாக கூற முடியாவிட்டாலும் பொதுவான காரணம் என்று பார்த்தால், மரபணு காரணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என சீராக இல்லாமல் தாமதமாக வருவது அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவது, உடல் எடை மிகவும் குறைவது அல்லது உடல் எடை மிகவும் அதிகரிப்பது இவை அனைத்தும் நீர்க்கட்டி உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

நீர்க்கட்டி ஏற்படுவதால் முகத்தில் அல்லது தேவையற்ற இடங்களில் முடி வளர்வது, தலை முடி கொட்டுவது, குரல் மாறுபாடு, முகத்தில் அதிக அளவில் முகப்பரு ஏற்படுவது, மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் டாலரன்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் டிரைகிளிசரைடு அளவுகளை அவ்வப்பொழுது சோதித்து சரிபார்க்க பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறைகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



--

வெள்ளி, 3 ஜனவரி, 2025

டூத் பேஸ்ட்டில் எது சிறந்தது என்று கண்டறியகுழப்பமாக உள்ளதா? வாங்கும் போது இந்த விஷயங்களைகவனியுங்கள்.


பொதுவாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்குவோம்.

அதில் ஏதேனும் குறைபாடு இல்லாதபடி பார்த்து கொள்வோம். வீட்டுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களின் மீது செலுத்தும் அதிக படியான கவனத்தை நமக்கான பொருட்களை வாங்கும்போதும் செலுத்த வேண்டும். ஆனால், பலர் இது போன்று செய்வதில்லை. குறிப்பாக உடலில் நேரடியாக பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை கவனமாக வாங்குவதில்லை.

காலையில் நாம் எழுந்ததும் பயன்படுத்த கூடிய டூத் பேஸ்ட் முதற்கொண்டு இதைச் சரியாக செய்வதில்லை. வெறும் விளம்பரங்களைப் பார்த்து தவறான டூத்பேஸ்ட்டை வாங்கி விடுகிறோம். இது உங்கள் பற்களின் முழுவதுமாக ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். ஒரு சிறந்த டூத்பேஸ்ட்டை எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஃப்ளூரைடு உள்ளதா? : ஒரு சிறந்த டூத்பேஸ்டடில் பல முக்கிய பொருட்கள் இருக்க வேண்டும். குறிப்பாக ஃப்ளூரைடு மிக முக்கியமானது. உங்கள் பற்களின் எனாமலை பாதுகாக்கவும், உங்கள் ஈறுகள் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தவும் ஃவுளூரைடு உதவுகிறது. இதுமட்டுமின்றி, ஃவுளூரைடு ஒரு இயற்கை கனிமமாகும், இது பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே உங்கள் டூத்பேஸ்ட்டில் ஃப்ளூரைடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

தேவைகளைப் பட்டியலிடுங்கள் : ஒவ்வொருவரின் வாய் ஆரோக்கியத்தை பொறுத்து டூத்பேஸ்ட்டின் தேவைகள் மாறுபடும். சிலருக்கு சென்சிடிவ் வகை டூத்பேஸ்ட் தேவைப்படலாம், மற்றவர்களுக்கு தங்கள் பற்களை வெண்மையாக்க கூடிய பேஸ்ட் தேவைப்படலாம். எனவே, டூத்பேஸ்ட் வாங்குவதற்கு முன், உங்கள் தேவைகளை பட்டியலிடுங்கள். அதன் பிறகு, உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்களுக்கு எந்த வகையான டூத்பேஸ்ட் பொருத்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஐடிஏ (IDA) முத்திரை : தரமான டூத்பேஸ்ட் என்பது பல்வேறு பரிசோதனைகள் மற்றும் தர சோதனைகளுக்கு உட்பட்டுத்தப்படும். டூத்பேஸ்ட் உற்பத்தியாளர்களுக்கு இந்திய பல் மருத்துவ சங்கத்தின் முத்திரை அவசியம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் டூத்பேஸ்ட்டில் ஐடிஏ முத்திரை உள்ளதா என கட்டாயம் சரிபார்க்க வேண்டும். இந்த முத்திரை இல்லை என்றால், அந்த டூத்பேஸ்ட்டை வாங்காதீர்கள்.

ஆர்டிஏ (RDA) அளவு : ஒவ்வொரு டூத்பேஸ்ட்டிலும் அப்ரேசிவ் பொருட்கள் உள்ளன. அவை பற்களை சுத்தமாகவும் வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. டூத்பேஸ்ட்டில் உள்ள இந்த மூலப்பொருட்களின் அளவானது ரிலேட்டிவ் டென்டின் அபிராசிவிட்டி (Relative Dentin Abrasivity (RDA)) என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு டூத்பேஸ்ட்டுக்கும் மாறுபடும். டூத்பேஸ்டின் RDA அளவு 250-க்கு குறைவாக இருந்தால், அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. மேலும், 250க்கு மேல் இருந்தால் அவை பற்களை சேதப்படுத்தும்.

சர்க்கரை : பல்வேறு டூத்பேஸ்ட்களில் சர்க்கரை சேரக்கப்டுகிறது. அவை பற்களை சிதைக்க கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே டூத்பேஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி தெளிவாக படித்து விட்டு வாங்குங்கள். உங்கள் டூத்பேஸ்ட்டில் சர்க்கரை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக ஐடிஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட டூத்பேஸ்ட்கள் சர்க்கரை இல்லாதவை மற்றும் பற்சிதைவைத் தடுக்கின்றன.



--

திருமணமான பெண்கள் கவனத்திற்கு: சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன் , ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை ...

Popular Posts