லேபிள்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

மஞ்சள் கலந்தபாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே.

அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி' என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள் கலந்த பாலைத் தான் குடிப்பாராம். உண்மையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்து கொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை... .

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும்.

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும், ஏலக்காய், மிளகு, ஆகியவை செரி மானத்தை எளிதாக்குகிறது. உடலில் பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமான கோளாறுகளை நீக்குகிறது. மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் பிற பொருட்கள் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செரிமான அமைப்பை சீராக வைக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரவில் ஒரு கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மூட்டு வலி குறையும்

மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கம் மற்றும் மூட்டு வலியையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. கீல்வாதம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் பால் குடிப்பது பயன் தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே மஞ்சள் பால் எலும்பு வலியைக் குறைப்பதில் மட்டுமல்லாமல் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மண்டலம்

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் ஏலக்காய், மஞ்சள் ஆகியவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை குறைக்கின்றது.

நன்றாக தூங்க உதவுகிறது

படுக்கை நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தூக்கத்தைத் தூண்டும் அமினோ அமிலமான டிரிப்டோபான் பாலில் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் மன அழுத்தத்தை குறைத்து இரவு தூக்கத்தை எளிதாக்குகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு ஏலக்காய் தூள் கலந்து குடித்தால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.

மாதவிடாய் பிடிப்பை நீக்குகிறது

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, மஞ்சள் பால் பயனளிக்கும், மஞ்சள் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை கொண்டுள்ளதால் இது மாதவிடாய் வலியையும் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் பாலை குடிக்கத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது.

மஞ்சள் பால் செய்வது எப்படி

ஒரு கப் பால் எடுத்து ஒரு கொதிக்க வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்க்கவும். நீங்கள் தூங்குவதற்கு சற்று முன்பு அதை சூடாகவோ குடிக்கவும். மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்ப்பது தொண்டை புண் மற்றும் தொற்றுநோய்களை தடுக்க உதவும்.



--

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்தபாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts