லேபிள்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2024

Women Depression: பெண்களுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

பெண்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இருப்பினும், ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்.

அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் என்றால் என்ன ?

பொதுவாக மன அழுத்தம், மாற்றங்கள், இழப்புகள், நிஜத்தை ஏற்க மறுக்கும் போது ஏற்படும் மன ரீதியான தாக்கங்களை மன அழுத்தம் வரும். மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களின் குறைபாடால் மன அழுத்தம் ஏற்படும். உடலில் நோய்கள் உருவாக முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.

மனஅழுத்தம் ஆண்களை விட பெண்களிடம் இரண்டு மடங்கு அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவை அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோயால் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மனச்சோர்வின் அறிகுறிகள்:

மனநிலை மாறுதல், அடிக்கடி சோர்வு, கடந்தகால இன்பங்களில் ஆர்வம் இல்லாமை, வேலையில்லாமை, உதவியற்ற உணர்வு, விரக்தி, பயனின்மை, தூக்கம் குறைதல் அல்லது அதிகரித்தல், பசியின்மை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் மனச்சோர்வினால் பாதிக்கப்படும்பெண்களுக்கு குறைந்தது 2 வாரங்கள் இருக்கும்.

மனச்சோர்வுக்கான காரணங்கள்:

உடற்கூறியல் படி, ஒரு பெண்ணின் மூளை ஆணின் மூளையில் இருந்து வேறுபட்டது. பெண்களுக்கு உணர்ச்சிவச படுபவர்கள் அதிகம் தோன்றும். இதனால் ஆண்களை விட பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஒரு முக்கியமான ஹார்மோன். மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில், இது ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் மனச்சோர்வு பிரச்சனை இல்லை.ஆனால், மாதவிடாய் சுழற்சியின் 2 வது பாதியில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது,   அது பெண்களை பற்றாக்குறை உண்டாகிறது.

கர்ப்பகால பிரச்சனை:

பிரசவ வலியுடன் இருக்கும் தாய்க்கு, ஹார்மோன்கள் உற்பத்தியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், கர்ப்பகால ஹேப்பி ஹார்மோன்களின் பணியையும் பாதிக்க, பெண்ணின் மனதில் மகிழ்ச்சி குறைந்து மன அழுத்தம் கூடுகிறது.அதே நேரம், பிறந்த குழந்தையின் பசிஅழுகையால் ஏற்படும் பெண்ணின் தூக்கத்தில் உருவாகும் மாறுபாடுகள் மற்றும் பசி மறந்த நிலை பெண்ணுக்கு ஒரு மன அழுத்த நிலையை தற்காலிகமாக உருவாக்குகிறது.

கருச்சிதைவு, கர்ப்பகாலத்தில் தொடர்ந்து சிகிச்சைகள் தேவைப்படும் நிலைகள், இரட்டைக் கர்ப்பம், செயற்கை முறை கருத்தரிப்பு, முந்தைய கர்ப்பத்தில் மனநிலை பாதிப்பு போன்றவை பிரசவத்திற்கு முன்னரே மன அழுத்தங்களைத் ஏற்படுத்தி, அதுவே போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனுக்கும் காரணமாகிறது.



--

செவ்வாய், 26 நவம்பர், 2024

ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்னீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது.

இருப்பினும், இதைச் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழச்சாறுகளுடன் மருந்து உட்கொள்ளக்கூடாது. அந்த பழக்கம் இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மருந்தை சாறுடன் சேர்த்து சாப்பிடும்போது மருந்தின் செயல் திறனும் பெரிய அளவில் குறையும்.

பழச் சாறுடன் மருந்து சாப்பிட வேண்டாம்

பழச்சாறுடன் மருந்து உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சில சமயங்களில் ஆப்பிள் சாறுடன் மருந்து உட்கொள்வது உங்களுக்கு ஆபத்தானது.

பழச்சாறு மற்றும் மருந்து கலவை ஆபத்தானது

பழச் சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழச் சாறுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் நலன் பாதிக்கப்படலாம்

ஆண்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பல மருந்துகளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் மிகவும் குறையும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில், பழசாற்றுடன் மருந்து சாப்பிட்ட பிறகு, பாதி மருந்து மட்டுமே உடலுக்குள் செல்லும். சாறுகள் மருந்தினை உடல் உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன.

தண்ணீருடன் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்

மருந்தை எப்போது ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை தண்ணீருடன் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாக கரையாது. ஆனால் அதிக தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவை எளிதில் கரையும். அதே போல் குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதையும் தவிர்க்கவும்.



--

சனி, 23 நவம்பர், 2024

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது.

இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்ச்சியாக்காது என்றாலும் வெயிலை சமாளிக்கும் திறனைக் கொண்டிருக்கும். அதற்கு நாம் சரியான ஏர் கூலரை தேர்வு செய்ய வேண்டும்..? எனவே அதை எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

1. வாங்கவேண்டிய கூலர்களின் வகையைத் தீர்மானியுங்கள்

ஒரு பயனுள்ள கூலிங் அம்சத்திற்கு சரியான வகை கூலர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு, பெர்சனல் கூலர்களை தேர்வு செய்யவேண்டும். பெரிய அறைகளுக்கு, டெசர்ட் கூலர்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது, 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பெர்சனல் கூலர்களை வைக்கலாம்.

* அதுவே 300 சதுர அடிக்கு மேல் உள்ள அறையில் டெசர்ட் கூலர்களை வைக்கலாம்.

2. தண்ணீர் தொட்டியின் திறன்

ஏர் கூலர்களில் தண்ணீர் தொட்டி திறன் ஒரு முக்கிய காரணியாகும். கூலர்களின் அளவு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ, அதே அளவு தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். பயனுள்ள கூலிங்கிற்கு அறை அளவை விட அதிக திறன் கொண்ட ஏர் கூலரை எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். அதாவது,

சிறிய அறைகள் : 15 லிட்டர் தொட்டியின் திறன்

நடுத்தர அளவிலான அறைகள்: 25 லிட்டர் தொட்டியின் திறன்

பெரிய அறைகள்: 40 லிட்டர் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட ஏர் கூலரை தேர்வு செய்ய வேண்டும்.

3. கூலரை வைக்க வேண்டிய இடம்

உங்கள் அறைக்கு வெளியே அல்லது உங்கள் கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டை மாடியில் குளிரூட்டியை வைக்க விரும்பினால் டெசர்ட் கூலரை வாங்கலாம். உட்புற பயன்பாடுகளுக்கு, பெர்சனல் அல்லது டவர் கூலர்ஸ் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.

4. இடத்தின் காலநிலையை கருத்தில் கொள்ளுங்கள்

வறண்ட கால நிலைகளில் டெசர்ட் கூலர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரப்பதமான பகுதிகளுக்கு, பெர்சனல் / டவர் கூலர்ஸ் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. இரைச்சல் அளவை சரிபார்க்கவும்

சில கூலர்ஸ் மிகவும் சத்தமாக இருக்கும். எனவே, நீங்கள் கடையில் கூலர்களை வாங்குவதற்கு முன் அதன் இரைச்சல் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் அதன் அளவை அதிகபட்ச விசிறி வேகத்தில் சரிபார்க்கவும்.

6. தானாக நிரப்பு செயல்பாட்டைப் பாருங்கள்

கூலர்சில் மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்புவது ஒரு சிக்கலான பணியாகும். எனவே ஆட்டோஃபில் செயல்பாட்டை வழங்கும் கூலர்ஸை தேர்வு செய்ய வேண்டும். அவை நிர்வகிக்க எளிதானவை மட்டுமல்ல, சிறந்த மற்றும் திறமையான குளிரூட்டலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆட்டோ ஃபில் அம்சம் தொட்டியை முழுமையாக உலரவிடாமல் தடுக்கும். எனவே மோட்டார் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

7. கூலிங் பேட்களின் தரத்தை பார்க்க வேண்டும்

குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் உள்ளன. கம்பளி மரம், ஆஸ்பென் பட்டைகள் மற்றும் தேன்கூடு பட்டைகள் ஆகியவை மிகவும் பொதுவானவை. இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விட சிறந்தவை. ஏனெனில் அவை நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன. மேலும் அவை பராமரிப்பிலும் எளிதாக இருக்கும்.

8. கூடுதல் ஐஸ் சேம்பர்

வேகமான கூலிங்கிற்கு, சில உற்பத்தியாளர்கள் கூலர்ஸ்களுக்கு ஒரு பிரத்யேக ஐஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். தொட்டியில் உள்ள தண்ணீரை விரைவாக குளிர்விக்க நீங்கள் அவற்றில் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

9. மின் நுகர்வு

வழக்கமாக, நவீன கூலர்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அவை மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இயக்க முடியும்.

10. ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு வடிகட்டி போன்ற கூடுதல் அம்சங்கள்:

இப்போதெல்லாம் கூலர்ஸ் ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு, டஸ்ட் ஃபில்ட்ர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன.



--

செவ்வாய், 19 நவம்பர், 2024

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான்.

அதை நாம் சரியான முறையில் நம் தேவைக்கு ஏற்ப வாங்கவில்லை எனில் பலன் இல்லை. எனவே ஏசியை வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.

அறைக்கு ஏற்ற ஏசி கொள்ளளவு : ஏசி வாங்கும் முன் அதன் கொள்ளளவைக் கணக்கிடுதல் அவசியம். அறையில் அளவிற்கு ஏற்ப ஏசியின் கொள்ளளவு இருக்க வேண்டும். உதாரணமாக 100 - 120 சதுர அடியில் அறை இருக்கிறதெனில் 1 டன் கொள்ளளவு ஏற்றது. அதைவிட அதிகமாக இருந்தால் 1.5 டன் அல்லது 2 டன் கொள்ளளவு ஏற்றதாக இருக்கும். அதேபோல் அறையில் சூரிய வெளிச்சம் படும் அளவையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

விண்டோ ஏசி அல்லது ஸ்ப்ளிட் ஏசி : ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே வடிவில் எல்லாம் அடங்கியதாக இருக்கும். ஸ்ப்ளிட் ஏசி இரண்டு பகுதிகளாக ஒன்று உள்ளும் மற்றொன்று வெளியேயும் வைக்கப்படும். எதுவாயினும் ஏதுவான காற்றோட்டம் தேவை.

பயன்பாடு: ஏசியை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது முக்கியம். அதற்கு ஏற்ப அதன் ஆற்றல் திறனைக் கணக்கிட்டு வாங்குங்கள். பலரும் கடைக்காரர் ஐந்து ஸ்டார் ஆற்றல் கொண்ட ஏசியை வாங்கப் பரிந்துரைப்பார்கள். ஆனால் அது அத்தனை சிறந்த யோசனை அல்ல. அது அதிக விலை கொண்டதாக இருக்கும். நீங்கள் அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்கள். வெயில் நாட்களில் மட்டும் பயன்படுத்தப்போகிறீர்கள் எனில் மூன்று ஸ்டார் ஏசி ஏற்றதாக இருக்கும்.

மின்சாரம் சேமிப்பு: ஸ்டார் மதிப்பு போல் BEE ஸ்டார் மதிப்பையும் கவனிப்பது அவசியம். இதில் 5 ஸ்டார் BEE என இருந்தால் அதன் மின்சார சேமிப்பு அதிகமாக இருக்கும், 3 என இருந்தால் குறைவாக இருக்கும். ஆனால் இரண்டிலும் டன் கொள்ளளவு ஒரே மாதிரியாகவே இருக்கும்.

இன்வெர்டர் ஏசி வாங்கலாம் : பலரும் இன்வெர்டர் ஏசி வாங்குவது நல்ல யோசனை என்கின்றனர். பலரும் இன்று இதைத்தான் விரும்புகின்றனர். ஏனெனில் அதன் வேகம் நிலையானதாக இருக்கும். அதன் மோட்டார் வேகம் அதிகமாக இருக்கும். விரைவில் அறை குளுமையாகிவிடும். அதேசமயம் மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் இது சிறந்தது என்கின்றனர்.

காற்று வெளியேற ஏற்ற இடம் : ஏசிகள் மின்விசிறி வைக்கப்பட்டுள்ளதால், அந்தக் குளிர்ந்த காற்று பரவ ஏதுவான இடம் அவசியம். எந்த இடத்தில் பொருத்தினால் ஏசி காற்று நன்றாகப் பரவும் என்பதைக் கண்டறிய வேண்டும். இடையூறுகள் இல்லாமல் இருந்தால் காற்று நன்றாகப் பரவும். அதேபோல் முகத்தில் நேராகப் படும்படி வைக்கக்கூடாது. அதற்கு ஏற்ப பொருத்துங்கள்.

ஏர் ஃபில்டரைக் கவனிக்கவும் : இன்று ஏர் ஃபில்டர்கள் பல வகைகளில் வருகின்றன. அறையில் உள்ள கிருமிகளை உள்ளிழுத்து சுத்தமான காற்றை வெளியேற்றும். அதேபோல் அறையின் துர்நாற்றத்தை நீக்கும் ஃபில்டர்கள் பல வகையில் அதன் விலைக்கு ஏற்ப கிடைக்கின்றன. அதுபோன்ற அம்சங்கள் உங்களுக்குத் தேவை எனில் வாங்கலாம்.

கூடுதல் அம்சங்களுக்கு கூடுதல் விலை : ஃபில்டரில் மட்டுமல்ல, ஸ்மார் ஏசிக்களும் இருக்கின்றன. நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னரே உங்கள் செல்ஃபோனால் ஆன் செய்து வீட்டைக் குளுமையாக்கலாம், மின்விசிறியின் குறைந்த சத்தம், கொசுவைக் கண்டால் ஒழிப்பது போன்ற அம்சங்கள் கொண்டு வருகின்றன. அவை அதன் அம்சங்களுக்கு ஏற்ப விலையிலும் ஏற்றங்கள் இருக்கின்றன.



--

சனி, 16 நவம்பர், 2024

TURMERIC MILK: மருத்துவமும் மகத்துவமும்.

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார்.

இதனை தினமும் ஒரு நேரம் மட்டுமே குடிக்க வேண்டும்.

மஞ்சள் சேர்த்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. முன்னதாகவே பாலை சூடாக்கி வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாருக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாக சேர்வதால் தன இது ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது தவிர வேறு வழியில்லை. மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து இதற்கு நல்ல தீர்வாக அமைந்திடும்.

மஞ்சளை உணவுகளில் சேர்ப்பதால் அது நம் உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவினை சேர்க்க விடாமல் செய்யும். இதனால் நாம் அதிக கொழுப்பு உணவினை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடிகிறது.

மஞ்சள் பால் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் தாக்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும். குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை போக்க மஞ்சள் பால் குடிக்கலாம்.

காய்ச்சல், தலைவலி மற்றும் மூக்கடைப்புக்கு மஞ்சள் பால் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதோடு தொண்டை வறட்சிக்கு மஞ்சள் பால் உடனடி நிவாரணம் வழங்கிடும். நீண்ட நாட்களாக நெஞ்சில் சளிக்கட்டியிருக்கும் அதனை நீக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது.

சருமத்தில் ஏதேனும் அலர்ஜியோ அல்லது அரிப்பு ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பால் அதனையும் தீர்த்து வைக்கிறது. மஞ்சள் பால் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான காட்டன் துணியெடுத்து அதில் முக்கி அலர்ஜி ஆன இடத்தில் துடைத்தெடுங்கள். அதோடு இவை முகத்தில் தோன்றும் கரும்புகள்ளிகள், பருக்களையும் போக்க உதவுகிறது.

சில நேரங்களில் நம்மை தாக்கும் வைரஸ்கள் முதலில் தாக்குவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியாகத்தான் இருக்கிறது. மஞ்சள் பால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வைரஸ் பாதிப்பிலிருந்து முன்னரே தப்பிக்கலாம்.



--

புதன், 13 நவம்பர், 2024

பல் இல்லாத வயதானவர்கள் எளிதாக மென்று சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

நமக்கு வயதாகும் போது பற்களை இழப்பது பொதுவான ஒன்று. பல மூத்த குடிமக்கள் இந்த யதார்த்தத்துடன் வாழ்கின்றனர்.

பற்களை இழப்பது பேச்சு பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உணவுகளை மெல்லுவதையும் கடினமான செயலாக மாற்றும்.

பொதுவாக, வயதானவர்கள் உணவை மெல்லும்போது அல்லது விழுங்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தின் காரணமாக அவர்களுக்கு மென்மையான உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

தரவுகளின்படி, சுமார் 45 சதவீத வயதானவர்கள் தங்கள் இயற்கையான பற்களை சில அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இழந்துள்ளனர். மெல்லும் போது அல்லது விழுங்கும் போது ஏற்படும் பிரச்சனையின் காரணமாக, அவை குறைபாடுகள் மற்றும் எடை இழப்பையும் சந்திக்கின்றன. எனவே, அவர்கள் மென்மையான உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது. ஏனெனில் அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவது அவசியம். ஆகவே உங்களுக்கு உதவ சில மென்மையான உணவுகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

பால் அல்லது விலங்கு பொருட்கள்

பொதுவாக, பால் பொருட்கள் மென்மையான உணவின் கீழ் வருகின்றன. மேலும் அவை எளிதில் உட்கொள்ளக்கூடியவை. பாலாடைக்கட்டி, தயிர், கிரீம் சீஸ், அமுக்கப்பட்ட மற்றும் உலர்ந்த பால் போன்றவை, மெல்லும் போது குறைந்த அல்லது எந்த முயற்சியும் தேவைப்படும் மென்மையான உணவுகள். துருவிய முட்டை மற்றும் பெரும்பாலான மீன்கள் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

வேகவைத்த தானியங்கள் மற்றும் பருப்பு

தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மெல்லுவதற்கு கடினமாகவும் தோன்றலாம். ஆனால் கூடுதல் தண்ணீரில் வேகவைத்து அல்லது நன்கு சமைத்தால், அவை புரதம் நிறைந்த உணவாக மாறும்.

அதிக கலோரி கொண்ட சூப்கள்

நல்ல எண்ணிக்கையிலான கலோரிகள் கொண்ட சூப்களை பரிமாறுவது உலர்ந்த மொறுமொறுப்பான உணவுக்கு ஒரு நன்மையான மாற்றாக இருக்கும். அதன் எளிதான நுகர்வுடன், சூப் ஊட்டச்சத்து இடைவெளியை நிரப்ப உதவுகிறது. தக்காளி சூப்கள், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு சூப், அஸ்பாரகஸ் சூப் போன்றவை இதில் அடங்கும்.

ஓட்ஸ் மற்றும் கஞ்சி

ஓட்ஸ் மற்றும் கஞ்சி காய்கறிகள் அல்லது பிற பொருட்களைக் கலப்பதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாறும். அவற்றின் ஒட்டும் தன்மையால் மெல்லுவதற்கு கடினமான உணவுகள் போல் தோன்றலாம். ஆனால் அது பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது. சிறிதளவு கூடுதல் தண்ணீரைச் சேர்ப்பது உங்கள் கஞ்சிக்கு ஒரு சூப்பி அமைப்பைக் கொடுக்கும்.

நீங்கள் விரும்பும் வாழைப்பழம், மாம்பழம், துருவிய ஆப்பிள் போன்ற பழங்களுடன் அவற்றை உட்கொள்ளலாம் மற்றும் சியா விதைகள், ஆளி விதைகள் அல்லது பூசணி விதைகளையும் சேர்க்கலாம்.

பிசைந்த உருளைக்கிழங்கு

பிசைந்த உருளைக்கிழங்கு சுவாரஸ்யமான பக்க உணவாக இருக்கலாம். அவ்றை விழுங்குவதில் எந்த சிரமமும் இருக்காது. அவை ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை. அவை உங்கள் சுவை பசியைப் பூர்த்தி செய்து, தேவையான அளவு ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.



--

சனி, 9 நவம்பர், 2024

கொசுவை அடித்தால்சிவப்பாக இரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக இரத்தம் வருவதில்லை. ஏன்?

கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர் திரவத்துக்கு 'குருதிநிணம்" என்று பெயர்.

இதில் பல்வேறு சத்துக்களும், ஹார்மோன்களும் மற்றும் சில பொருட்களும் இருக்கின்றன.

இந்த திரவத்தில் சிவப்பணுக்களோ, ஹீமோகுளோபினோ கிடையாது. இதனால் நம் ரத்தத்தைப்போல் அது சிவப்பாக இருக்காது. சில நேரத்தில் பூச்சிகளின் ரத்தம் வெளிர் மஞ்சளாகவும், வெளிர் பச்சையாகவும் தெரியும்.

பூச்சிகள் அப்போது எந்தத் தாவர உணவைச் சாப்பிட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த நிறம் உண்டாகும். மற்றபடி பூச்சிகளின் ரத்தத்துக்கு நிறமில்லை.

கொசு உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பிறகு, நீங்கள் அடித்திருப்பீர்கள். அதனால் சிவப்பாக ரத்தம் இருந்திருக்கிறது.



--

புதன், 6 நவம்பர், 2024

சூரிய ஒளியில் சூடேற்றப்பட்ட தண்ணீர் பற்றி தெரியுமா? ஆயுர்வேத முறையில் அதன் பயன்கள்.

ஆயுர்வேத அறிவியல் என்பது பல நூற்றாண்டு வரலாற்றை கொண்டது. ஆயுர்வேத வாழ்க்கை முறையை கடைப் பிடிப்பதால் நம் உடல் நலனை சீராக வைத்துக் கொள்ள இயலும்.

அப்படியொரு பழக்கங்களில் ஒன்று தான், சூரிய ஒளியில் தண்ணீரை காய வைத்து குடிப்பது ஆகும். சூரிய ஒளி தண்ணீரில் விழும்போது, அதில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, அது உயிர் கொண்ட தண்ணீராக மாறி விடுகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது.

சூரியஒளி தண்ணீர் என்றால் என்ன..?

'சூர்யன்சு சந்தப்தம்' என்கிறது ஆயுர்வேதம். அதாவது சூரிய ஒளியில் தூய்மையாக்கப்பட்ட நீர் என்பது இதன் பொருள் ஆகும். நீங்கள் எந்த வகை பாட்டிலில் தண்ணீரை நிரப்பி சூரிய ஒளியில் காய வைத்தாலும், அது சூடேறி அதில் உள்ள உயிர்த்தன்மை திரும்ப கிடைத்துவிடும். சூரிய ஒளியில் இருந்து வரும் யுவி கதிர்கள் காரணமாக தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகள் குறைகின்றன. சூரிய ஒளி தண்ணீர் மூலமாக உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். உடலில் உள்ள வீக்கங்கள் குறையும்.

சூரியஒளி தண்ணீரால் கிடைக்கும் பலன்கள்

* சூரிய ஒளியில் காய வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தால் உங்களுக்கு மேம்பட்ட ஆற்றல் கிடைக்கும்.

* உங்கள் உடலில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.

* செல்களில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இது சீராக்கும்.

* வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சூரிய ஒளி தண்ணீரில் நிறைந்துள்ளன. சருமத்தை சுத்தம் செய்யவும், கண்களை கழுவவும் இது உகந்தது.

* உங்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி, பசியை தூண்டும் சக்தி சூரிய ஒளி குடிநீரில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து அசிடிட்டி, அல்சர் போன்ற போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.

* தோல் அழற்சிகளை சீராக்கி, அரிப்புகளையும் குணப்படுத்தும். இதனால், பளபளப்பான சருமம் உண்டாகும்.

நிறமூட்டப்பட்ட சூரிய ஒளி தண்ணீர் மற்றும் செய்முறை

* சூரிய ஒளியில் தண்ணீரை காய வைக்க நீங்கள் பயன்படுத்தும் பாட்டில்களின் கலர் மூலமாக சில பலன்களை பெற முடியும்.

* லிட் அல்லது கார்க் கொண்டு மூடக் கூடிய கலர் பாட்டில்களை இதற்கு பயன்படுத்தலாம்.

* பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, அதை 8 மணி நேரம் சூரிய ஒளியில் வைத்திருக்கவும்.

* இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு அரை கப் தண்ணீர் எடுத்து நாள் முழுவதும் பருகலாம்.

* இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்க, இதை பயன்படுத்தும் முன்பாக 8 மணி நேரம் முதல் 3 நாட்கள் வரையிலும் சூரிய ஒளியில் காயவைத்து குடிக்கலாம்.

* சூரிய ஒளி தண்ணீரால் கோபம், கவலை போன்ற பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.



--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts