லேபிள்கள்

புதன், 23 அக்டோபர், 2024

இதயத்தை காக்க எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்.

சமையல் எண்ணெய் நம்முடைய வாழ்வில் ஒன்றாகக் கலந்தது. எண்ணெய் இல்லாத சமையல் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . நம்முடைய சமையல் கட்டில் மிக முக்கியமான பொருட்களுள் ஒன்று எண்ணெய் . இதய நோய் வந்தாலும் கூட , இன்னும் சில ஆண்டுகள் வாழ்நாளை நீட்டிக்க சமையலில் எண்ணெய்யைக் குறைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . ஏனெனில் நம்மால் முற்றிலுமாக எண்ணெய்யைப் புறக்கணிக்க முடியாது .

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்று கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினமான காரியம்தான் . எல்லா எண்ணெய்யும் நல்ல எண்ணெய்தான் , எவ்வளவு பயன்படுத்துகிறோம் , அப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் பாதிப்பு மாறுபடுகிறது .

பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு மிகுந்த ஃபிளாக்ஸ் சீட் எண்ணெய் , சூரியகாந்தி எண்ணெய் , நல்லெண்ணெய் போன்றவையும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மிகுந்த ஆலிவ் எண்ணெய் , கடலை எண்ணெய் , ரைஸ் பேர்ன் ஆயில் போன்றவற்றை பயன்படுத்தலாம் . தேங்காய் எண்ணெய் , பாம் எண்ணெய்யில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது . எனவே , இதை மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் .

எண்ணெய்யை அதிக வெப்பநிலையில் வைக்கும் போது அதன் செயல்திறன் மாறுபாடு அடைகிறது . எண்ணெய்யில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றனர் . peroxides மற்றும் aldehydes உள்ளிட்ட ரசானயங்கள் வெளிப்படுகின்றன . இவை உடலுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிடும் . மிகவும் நல்லது என்று கூறப்படும் ஆலிவ் எண்ணெய்யாக இருந்தாலும் கூட அதிக வெப்பநிலையில் அதன் தன்மை மாறுபாடு அடையும் . எனவே , எண்ணெய்யை லேசான வெப்பத்தில் பயன்படுத்தலாம் . உணவில் ருசிக்காகச் சூடுபடுத்தாமல் கூட சேர்த்துக்கொள்ளலாம் .

காலகாலமாக கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வந்தோம் . ஆனால் தற்போது ரீஃபைன்ட் ஆயில் என்று பல எண்ணெய்களுக்கு மாறிவிட்டோம் . உண்மையில் கடலை எண்ணெய் இதயத்துக்கு இதமான எண்ணெய்களுள் ஒன்று இதில் வைட்டமின் இ உள்ளது . மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பும் இதில் உள்ளது . இவை கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் . மேலும் கடலை எண்ணெய்யில் ஒமேகா 6, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன .

சூரியகாந்தி எண்ணெய்யில் வைட்டமின் இ உள்ளது . இந்த எண்ணெய்யும் இதயத்துக்கு நல்லதுதான் . இதய நோய் வருவதற்கான வாய்ப்பை இது குறைக்கும் .

எள் - ல் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் மிகவும் நல்லது . இதில் அதிக ஆன்டி - ஆக்சிடண்ட் உள்ளது . இதயத்துக்கு நல்லது . ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் . கால்சியம் உள்ளதால் எலும்பு அடர்த்தி குறைவு , எலும்பு மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு தீர்வாக இருக்கும் . புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தை காக்கும் தன்மையும் இதற்கு உள்ளது .



--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts