லேபிள்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

அதிகமான லெமன் ஜுஸ் நல்லதா? கெட்டதா?

கோடை வந்துவிட்டால் பலருக்கும் பிடித்த பானம் எலுமிச்சை ஜூஸ்.

அடிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க ஒரு கிளாஸ் ஜில் என்று லெமென் ஜூஸ் குடித்தால் போது, அடுத்த நொடியே உடலில் உற்சாகம், புது தெம்பு வந்துவிடும். இதனால் அடிக்கடி லெமென் ஜூஸ் அருந்துபவர்களும் உண்டு. ஒரு நாளைக்கு 4-5 கிளாஸ்க்கு மேல் சர்வ சாதாரணமாக லெமென் ஜூஸ் எடுத்துக்கொள்வது உண்டு.

எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளதால் இது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றித் தெரிந்துகொள்வோம்.

எலுமிச்சை பொதுவாக உடலுக்கு நல்லது என்றுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அளவுக்கு மீறும் போது அது ஆபத்தாக மாறிவிடலாம். காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு அருந்தலாம். அது உடல் எடையைக் குறைக்க, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அதில் உள்ள அமிலத்தன்மை எலும்புகளைப் பாதிக்கச் செய்யலாம். மேலும் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் குடிப்பது பல்லின் எனாமலை பாதிக்கும். இதனால் பற்கூச்சம், பற்சிதைவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

வயிறு செரிமான குறைபாடு, எதுகளிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்திவிடும். அது அவர்களின் செரிமான மண்டல பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் அருந்தும் போது குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். அளவுக்கு அதிகமானால் தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு ஜூஸ் அருந்தலாம் என்று கேள்வி எழலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு எலுமிச்சை பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும். உடலின் நீர்ச்சத்து பாதுகாக்கப்படும். முடி முதல் இதயம் வரை பல்வேறு விஷயங்களுக்கு வைட்டமின் சி அவசியம். வைட்டமின் சி நீரில் கரையக் கூடிய வைட்டமின் என்பதால் தினமும் அதை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. எனவே, தினமும் லெமென் ஜூஸ் அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல், சிறிது உப்பு சேர்த்து எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்று, இரண்டு கிளாசுக்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது!



--

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts