லேபிள்கள்

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

உங்கள் குழந்தை கொழு கொழு என்று வளர கொடுக்க வேண்டிய உணவுகள்.

ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும்.

குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்துக்கு பிறகு திட உணவுகளும் தாய்ப்பாலும் கொடுப்பது அவசியம்.

ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.

மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன.

6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம்.

பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது.

8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.

குழந்தைகளுக்கு முதல் உணவாக தருவதில் மிக சிறந்த உணவு, கேழ்வரகு.

6 மாத குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிட ஏற்றது, இந்த கேழ்வரகு சிறுதானியம்.

கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் பி1, பி2, தாதுக்கள் ஆகியவை உள்ளன.

குழந்தைக்கு ராகி எளிமையாக செரிமானமாகும். ராகி கஞ்சி, ராகி கூழ், ராகி இட்லி, ராகி தோசை, ராகி ரொட்டி, ராகி புட்டு, ராகி லட்டு, ராகி கேக், ராகி குக்கீஸ் போன்ற வகைகளில் ராகியை கொடுப்பது நல்லது.

முட்டை

முட்டையில் பல விதமான நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளன. புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.

முட்டை உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. அத்துடன் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும்.

முழு தானியங்கள்

பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும்.

பால்

பாலில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுகிறது. தினமும் பால் குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுபடுத்துகிறது.

சிக்கன்

பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். பிராய்லர் கோழியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே அதை தவிர்த்து நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

சோயா பீன்ஸ்

ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

காய்கறிகள்

குழந்தைகளின் உணவில் இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, , கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



--

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தாகமாக இருக்கும் போது அல்லது உணவுக்குப் பிறகு அல்லது காரமான ஒன்றை சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பீர்கள்.

ஆனால் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உடல் 70 சதவீதம் நீரால் ஆனது மற்றும் நீரின் நன்மைகள் ஏராளம். உங்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் இயல்பான மற்றும் சீரான செயல்பாட்டிற்கு நீர் அவசியம்.

தண்ணீர் உங்கள் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமில்லாமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள சில பிரச்சினைகளைக் குணப்படுத்தக்கூடிய சிறந்த பானமாகத் தண்ணீர் இருக்கிறது.

நீங்கள் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை ஒரு கடமையாகச் செய்யுங்கள், உங்களுக்கு அது பழக்கமில்லை என்றால், சிறிய அளவுகளில் தொடங்கவும். இதற்குப் பிறகு பல் துலக்கி, சுமார் 45 நிமிடங்கள் எதையும் சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கவும். அதன் பிறகு, உங்கள் காலை உணவைச் சாப்பிடுங்கள். அடுத்த 2 மணிநேரங்களுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது நமது உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது, மேலும் நீங்கள் உற்சாகமாகவும் புதியதாகவும் இருப்பதை உணருவீர்கள். இந்தச் சிகிச்சையானது எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் இரத்த அழுத்தம், இரைப்பை அழற்சி, மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவும்.

எளிதில் ஜீரணம் ஆகின்றது

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நாம் சாப்பிட்ட உணவு ஜீரணிப்பது சிறப்பாகவும் வேகமாகவும் மாறும். இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உங்களால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்கவும்.

சருமத்தை பாதுகாக்கிறது

தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான எளிய வழி தண்ணீர் குடிப்பது. தண்ணீர் உடலிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது உங்கள் குடல் அசைவுகளை வழக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

நச்சுத்தன்மையை நீக்குகிறது

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்கள் நாளைத் தொடங்குங்கள். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைய சுத்தம் செய்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்க இது சிறந்த வழியாகும்.

ஆற்றலை அதிகரிக்கிறது

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உங்களைச் சுறுசுறுப்பாக ஆக்குகிறது. இது சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கிறது, அதாவது அதிக ஆக்ஸிஜன் உங்கள் உயிரணுக்களுக்குக் கிடைக்கிறது, இதனால் உங்களுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும், இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது உங்கள் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவீர்கள். நம் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் குடிப்பதால் தேவையில்லாத நச்சுக் கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன இந்த வழியில் நீங்கள் உங்கள் உடலை மிகவும் இயற்கையான முறையில் சுத்தப்படுத்தி நச்சுத்தன்மையை நீக்குகிறிர்கள். இது தேவையற்ற வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது.



--

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

*நாள் முழுவதும் லேப்டாப் ஸ்கிரீன் பார்ப்பதால் பார்வைத் திறன் பாதிக்கப் படுகிறதா? உங்களுக்கான ஆயுர்வேத டிப்ஸ்.

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பணியாளர்கள் வொர்க் பிரம் ஹோம் முறையில் பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலமாக படிப்பதாலும் நாளொன்றுக்கு அவர்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் ஃபோன் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ப்ளூ லைட் முன்பு பல மணி நேரம் அமர்ந்திருப்பதால், அவர்களது கண்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கண்களின் நலனை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் அவ்வபோது கண் பரிசோதனை செய்து கொள்வது ஆகியவற்றின் மூலமாக கண் நலனை பராமரிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், உங்கள் அன்றாட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் கண்களுக்கான ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்த முடியும். நெல்லிக்காய், நெய், உலர் திராட்சை, இந்து உப்பு மற்றும் திரிபலா போன்றவை உங்கள் பார்வை திறனை மேம்படுத்தும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கு விட்டமின் சி சத்தை காட்டிலும், நெல்லிக்காயில் 20 மடங்கு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்களில் கேபிளரீஸ் நலனை மேம்படுத்துவதோடு, ரெடினல் செல்ஸ் நலனை பாதுகாப்பதிலும் விட்டமின் சி சத்து மிக முக்கியமானது. குறிப்பாக, சர்க்கை நோய் பாதிப்பு காரணமாக ரெடினோபதி என்ற சிக்கலை எதிர் கொண்டிருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமைகிறது. இதேபோன்று, நெய் அல்லது தேனுடன் சேர்த்து இரவு நேரத்தில் திரிபலா பவுடர் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஐஸ்வர்யா சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இருக்கும் உப்புகளிலேயே, பாறை உப்பு வகைகள் மட்டுமே கண் நலனுக்கு நல்லது என்று அவர் குறிப்பிடுவதால், உங்கள் வீட்டில் உள்ள வெள்ளை உப்பை தவிர்த்துவிட்டு, இதை பயன்படுத்த தொடங்குவது நல்ல. கண் தசைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் உலர் திராட்சை பழங்களில் இருக்கிறது. இதேபோன்று தேனிலும் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் நிரம்பியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இறுதியாக நாம் பார்க்க இருப்பது நெய். இருப்பதிலேயே மிக அதிகமான பலன்களை கண்களுக்கு கொடுக்க கூடியது இது.

கூடுதல் டிப்ஸ்.

அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதால் உங்கள் கண்களில் சூடு பிடித்துக் கொள்ளும். இதை தவிர்க்க வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலமாக கண்களை குளிர்விக்க முடியும். இது தவிர பச்சை நிற தாவரங்கள், மரங்கள் போன்றவற்றை சிறிது நேரம் ஒதுக்கி கூர்ந்து கவனிப்பதன் மூலமாக கண்களுக்கு குளுமையை ஏற்படுத்த முடியும்.



--

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

ரொட்டியை ஃபிரிட்ஜில் வைப்பது நல்ல யோசனையா? அது பாதுகாப்பானதா?

நீங்கள் பிரெட் அல்லது ரொட்டிகளை சரியான வழியில் சேமித்து வைத்திருக்கிறீர்களா? அன்றாட சமையலில் இது மிகவும் அலட்சியமான விஷயமாகத் தோன்றினாலும், அழிந்து போகும் உணவுகளை சேமிப்பது என்பது உண்மையில் ரொட்டியின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்கும்.

ரொட்டிகளை சரியான முறையில் சேமிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

பிரெட் (அ) ரொட்டியை எப்படி சேமிப்பது?

பாரம்பரியமாக, மேற்கத்திய நாடுகளில் ரொட்டியை சேமிப்பதற்காக சமையலறையில் ஒரு 'சிறப்பு ரொட்டி பெட்டி' இருந்தது. இருப்பினும் காலம் மாற ரொட்டி பெட்டியும் மாறிவிட்டது. இப்போது பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள்.

இது சமையலறை இடத்தை மிச்சப்படுத்தினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? அப்படி செய்வது ரொட்டியின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்குமா?

நிபுணர்கள் பரிந்துரைப்பது இங்கே

டிஜிட்டல் ஜர்னலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, விரிவாக்க உணவு திட்டங்கள் மற்றும் கிளெம்சன் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு இயக்குனர், , கிம்பர்லி பேக்கர் கூறுகையில்' ரொட்டியை குளிரூட்டுவது அதன் ஆரோக்கியத்தில் தலையிடாது, ஆனால் ஃபிரிட்ஜில் குளிர் வெப்பநிலை' உங்கள் ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கி' ஈரப்பதத்தை இழக்கச் செய்வதால் அது ரொட்டியை சுவையற்றதாக மாற்றுகிறது.

ரொட்டியை எங்கே வைக்க வேண்டும் ?

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டி சாதாரண அறை வெப்பநிலையில் கூட நன்றாக இருக்கும் என்பதால், பழங்கால ரொட்டி சேமிக்கும் முறை' ஒரு சிறந்த யோசனையாக இருந்தது. ' வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை அறை வெப்பநிலையில் 3-5 நாட்களுக்குள் பயன்படுத்தினால் நல்ல தரம் இருக்கும்'.

ஆனால், இப்போது, வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள்' 5-7 நாட்கள் காலாவதி தேதியுடன் வருவதால், அவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்வது சிறந்தது. ஒருவேளை நீங்கள் இன்னும் சிறிது நாள் வைத்து உண்ண விரும்பினால்' நீங்கள் ரொட்டியை குளிரூட்டலாம். இது ரொட்டியின் புத்துணர்ச்சியை நீண்ட நேரம் வைத்திருக்க உதவும்.

ரொட்டியை சேமிக்க சிறந்த வழி எது ?

*காற்று புகாத கண்டெய்னரில்' சேமிப்பது ரொட்டியை சேமிப்பதற்கான எளிதான வழியாகும்.

*ரொட்டியை பிளாஸ்டிக் தாளில் போர்த்தி ஃபிரீசரில் வைக்கலாம். இதன்மூலம்' காற்று அல்லது ஈரப்பதம் உள்ளே நுழைவதை தடுக்கப்படுகிறது.

*ரொட்டியை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மற்றொரு வழி, ரொட்டிகளை பிளாஸ்டிக் ரேப்பரில்' நன்றாகப் போர்த்தி, பின்னர் அதை அலுமினியத் தாளால் மூடுவது. அடுத்து, ரொட்டியை ஃபிரிட்ஜில் வைக்கவும், இது ரொட்டியின் புத்துணர்ச்சியையும், அடுக்கு ஆயுளையும் தக்க வைத்துக் கொள்ளும். இது ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்.

ஆனால் எப்போது ரொட்டியை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் ரொட்டியை சாதாரண அறை வெப்பநிலையில் வைத்து 2-3 நாட்களுக்குள் உட்கொள்ளலாம்.



--

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இரவில் ஸ்வெட்டர் அணிந்து தூங்குவது ஆபத்தானது..!



குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலில் சற்று நிதானமாக இருந்தாலும் இரவில் குளிர் மிகவும் சிரமமாக இருக்கும்.

அதிகரித்து வரும் குளிரை சமாளிக்க பலர் ஸ்வெட்டர் அணிந்து தூங்குகின்றனர். இது கொஞ்சம் சூடாக இருந்தாலும், இந்த தந்திரம் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரவில் ஏன் ஸ்வெட்டர் அணிந்து தூங்கக்கூடாது என்பதை இன்று பார்ப்போம்.

இரவில் ஸ்வெட்டரில் உறங்குவதால் பகலில் உடல் சூடாக இருக்காது. எனவே இரவில் ஸ்வெட்டரைக் கழற்றி விட்டு, தடிமனான போர்வை போட்டுக் கொள்வது நல்லது. நீங்கள் சூடான ஆடைகளில் தூங்க விரும்பினால், முதலில் சருமத்தின் உணர்திறன் உள்ள பகுதிகளில் மாய்ஸ்சரைசர் கிரீம் தடவ வேண்டும். பின்னர் லேசான சூடான ஆடைகளை அணியலாம்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் ஸ்வெட்டர் அல்லது சூடான ஆடைகளில் தூங்குவது இரத்த அழுத்தத்தை பல மடங்கு அதிகரிக்கும். நீண்ட நேரம் இந்த நிலையில் இருந்தால் சுவாசம் மற்றும் வியர்வை பிரச்சனை தொடங்குகிறது. எனவே இரவில் சாதாரண உடையில் தூங்க முயற்சி செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வழக்கமான காற்று தேவை. இரவில் சூடான ஆடைகளை அணிவதால் உடலுக்கு சரியான காற்றோட்டம் கிடைக்காது. இதன் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. இந்த நிலையில், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இரவில் ஸ்வெட்டர் மற்றும் பிற சூடான ஆடைகளை அணிவது பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் அரிப்பு, அரிக்கும் தோலழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனுடன், தோல் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது.



--

சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கீரைக் குவியல்களின் மீது வியாபாரி அடிக்கடி நீர் தெளிப்பது ஏன்?

பிடுங்கப்பட்ட கீரைச் செடியில் இருந்து ஆவி ஈர்ப்பினால் நீர் இழக்கப்படும். நீர் இழக்கப்படுவதால் கீரை வாடும். வாடுவதால் அதில் இருந்து சில உயிர்சத்துக்கள் இழக்கப்படுவதை தடுக்க நீர் தெளிக்கப்படும். நீர் தெளிக்கப்படும்போது, சூழல் வெப்பநிலை குறையும்.

பூட்டின் கீழே இருக்கும் ஒரு சிறிய ஓட்டை எதற்கு தெரியுமா..?

மழைப் பெய்யும்போது பூட்டிற்குள் தண்ணீர் புகுந்தால் அந்த தண்ணீர் இந்த ஓட்டை வழியாக தான் வெளியே வரும். பின்னர் நீங்கள் பூட்டு சரியாக வேலை செய்ய எண்ணெய் விட வேண்டுமென்றால் இந்த சிறிய ஓட்டையைப் பயன்படுத்தலாம்.

சயனைடு விஷம் சாப்பிட்டால் ஏன் உடனே மரணம் நேரிடுகிறது?

விஷம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது பாம்புகள் தான். அதில் நாகப்பாம்பு, ராஜ நாகம் போன்றவை நமது மனதில் வந்து உதிக்கும் முதன்மை பெயர்கள். பாம்பு, தேள் போன்றவற்றில் விஷம் இருக்கிறது. இவை கடித்தாலோ, கொத்தினாலோ இறந்துவிடுவோம் என்ற அச்சம் நம் மத்தியில் இருக்கிறது.

ஆனால், உலகில் இவற்றை விட மிகவும் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை கொண்ட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், ரசாயனங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றில் பெரும்பாலானவை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் ஊடுருவினாலோ கூட மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டுள்ளன.

சயனைடு என்பது ஒரு வர்ணமற்ற கேஸ் ஆகும். எந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சயனைடு மிகவும் கொடிய விஷமாகவே காணப்படுகிறது. இது கசப்பான பாதாமை போன்ற வாசம் கொண்டதாகும். சயனைடு வாசத்தை நீங்கள் நுகர்ந்தால் தலைவலி வரும், குமட்டல் வரும், இதய துடிப்பு குறையும், மூச்சு திணறல் ஏற்படும். இது அனைத்தும் ஓரிரு நிமிடத்தில் ஏற்படும். இது உடலில் இருக்கும் ஆக்சிஜன் செல்களை இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும்.



--

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ்.

உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

ஆனால் இதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோமா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்துடன், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக மாறிவரும் உணவுப்பழக்கங்கள், அதிக உடல் உழைப்பின்மை, முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த ஊடரங்கு காலக்கட்டத்தில் பலர் வீட்டில் இருந்தே கணினி முன்பாக அமர்ந்து பணிபுரிந்துவருவதாலும் உடல் எடை அதிகரிப்பை உணர்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? அதிகரித்த எடையைக்குறைக்க முடியவில்லை என்ற கவலை மட்டும் தான் உள்ளது. அதிலும் வீட்டிலிருந்து வேலைப்பார்ப்பதால், எந்த நேரமும் பணியாற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்குத் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதோடு மட்டுமின்றி உடல் பருமனைக்குறைக்க சில நடைமுறைகளையும் உங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என கூறப்படும் நிலையில் அவை என்ன என்பது நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளுதல்:

இன்றைய சூழலில் ஒருவரின் பணி நேரம் என்பது 8 மணி நேரத்திற்கு மேலாக உள்ளது. சிலருக்கு 24 மணி நேரமும் ஏதாவது ஒரு வேலையைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் யாருக்குமே இல்லை. நீங்கள் உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்றால், உங்களது உணவு உட்கொள்ளும் நேரத்தை மாற்றிக்கொள்ளவது அவசியமான ஒன்று.

குறிப்பாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது 8 மணிக்கு பிறகு இரவு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது போல காலை நேர டிபனை 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவு தவிர்க்கக்கூடாது:

பரபரப்பாக அலுவலகம், கல்லூரிகள்,பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களில் பெரும்பாலோனார் காலை உணவை முறையாக எடுத்துக்கொள்வதில்லை. இது தவறான ஒன்று. காலை நேரத்தில் 8 மணிக்குள் ஏதாவது ஒன்றைச்சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இதனை ஸ்கிப் செய்யும் பட்சத்தில் தேவையில் உடல் நலப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

மேலும் உடல் எடையைக்குறைக்க விரும்பும் நபர்கள், அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு சில சமயங்களில் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் பருகலாம்.

உடற்பயிற்சி செய்தல்:

உடற்பயிற்சியா? அப்படின்னு கேட்கும் அளவிற்கு மக்களிடம் மறந்துப்போன ஒன்றாகிவிட்டது. ஆம் முறையாக ஜிம்களுக்கு சென்றவர்கள் கூட கொரோனா காலக்கட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளமுடியவில்லை. எனவே ஜிம்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல் ஆரோக்கியத்துடனும், உடல் எடையைக்குறைப்பதற்கு குறைந்த திறன் கொண்ட உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதாவது வாக்கிங், ஸ்கிப்பிங், தோப்புக்கரணம் போடுவது போன்ற சிறு சிறு பயிற்சிகளை தினமும் அரை மணி நேரமாவது மேற்கொண்டுவாருங்கள்.இது உங்களுக்கு நல்ல ரிசல்டைக்கொடுக்கும்.

மேலும் அதிகளவில் உணவை எடுத்துக்கொள்ளமால் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுங்கள். உணவின் அளவைக்குறைத்துக்கொள்ளும் போது உங்களுக்கு ஆரோக்கியமாகவும், உடல் புத்துணர்ச்சியோடும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதுப்போன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டால் உடனே எடையைக்குறைக்க முடியாது..படிப்படியாக தான் குறைக்க முடியும். ஆனால் இதில் எவ்வித உடல் நல பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. இனி நீங்களும் கொஞ்சம் இத டிரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் நல்ல ரிசஸ்ட் கிடைக்கும்.



--

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

கடைவாய் பற்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் பற்கள் மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியமானது. ஆரோக்கியமற்ற பற்கள் மற்றும் ஈறுகள் ஆகியவற்றால் உணவு சாப்பிடுவதில் சிரமம் மற்றும் ஈறுகளுக்கு அருகே நோய்க் கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்

உடலில் ஏற்படும் வலிகளில், பல் வலி மிகவும் மோசமானது என்ற சூழலில் நீங்கள் நாள்தோறும் ஆரோக்கியமான முறையில் பல் துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பற்களின் முக்கியத்துவம் மற்றும் வாய் சுகாதாரம் குறித்து நடைபெறும் ஆலோசனைகள் மிகவும் குறைவு. இதுமட்டுமல்லாமல், ஞானப் பற்கள் என்று அழைக்கப்படும், வாயின் கடைசி பகுதியில் அமைந்துள்ள கடைவாய் பற்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிக தகவல்கள் தெரிவதில்லை.

உணவை சவைத்து, கூழாக்கி குடலுக்கு அனுப்பி வைப்பதில் கடைவாய் பற்களின் பங்கு முக்கியமானது. பொதுவாக ஒரு நபரின் அறிவைப் பொருத்து அவருக்கு ஞானப் பற்கள் (கடைவாய் பற்கள்) வளர்வதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், இதற்கும் உண்மைக்கும் வெகு தூரம் உள்ளது. ஒருவரது வாழ்வின் பிற்பகுதியில் அல்லது பதின்ம வயது அல்லது 20 வயதுகளின் தொடக்கத்தில் உங்களுக்கு ஞானம் பிறக்கிறது. அந்த சமயத்தில் இந்த பற்கள் வளர்வதால் அவை ஞானப் பற்கள் என்று கூறப்படுகிறது.

பற்களை மையமாக வைத்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் ஒரு மில்லியன் பேர் பல் கட்டிக் கொள்கின்றனர். பல் அரிப்பு, பல்லில் விரிசல், நோய் தொற்று, எலும்பு இழப்பு போன்ற பிரச்சினைகளை மக்கள் எதிர் கொள்கின்றனர்.

உங்கள் ஞானப்பல் பிடுங்கப்பட்டு விட்டால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஈறுகளில் ரத்தக் கசிவு இருக்கக்கூடும். பல மணி நேரத்திற்கு வீக்கம் இருக்கும் என்பதால் மருத்துவர்கள் உங்களை, அன்றைய நாள் முழுவதும் பல் துலக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். அதுபோன்ற சமயங்களில் உப்பு கலந்த நீரை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஞானப் பற்கள் வாயின் உட்புறத்தில் அமைந்திருப்பதால் அவற்றில் சிறு பிரச்சினை என்றாலும் கூட, நாம் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். இல்லை என்றால் அது மிகுந்த வலியையும், தொந்தரவுகளையும் கொடுத்துவிடும்.

கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது.

 உணவை விழுங்குவது அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், ரத்தக்கசிவு நிற்காமல் செல்லுதல், அல்லது ஒரு வாரத்திற்கும் மேலாக வலி நீடிப்பு முகம் அல்லது தாடையில் ஒரு சில நாட்களுக்கு மேலாக வீக்கம், காய்ச்சல் வாயில் துர்நாற்றம்.



--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts