லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2024

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்பது உணவு அதிகம் சாப்பிட வேண்டிய வேளையல்ல.

மூன்று வேளை சாப்பாட்டில் குறைவாக உணவு உட்கொள்ள வேண்டியது இரவு மட்டுமே. அதிலும் இட்லி, இடியாப்பம், தோசை, ஆப்பம், பழங்கள் போன்றவை இரவில் சாப்பிட ஏற்றது.

ஏனெனில், இந்த உணவுகளே எளிதில் செரிமானம் ஆகும். நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளுக்கு, செரிமான வேலை சுமையைக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நிச்சயம் வரும்.

அதனால் பரோட்டா, பூரி, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, கிரில் உணவுகளைப் போன்றவை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பொறித்த, வறுத்த உணவுகள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அசைவ உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சித்த மருத்துவத்தில் இரவு உணவை பற்றிக் குறிப்புகள் உள்ளது. அவை, அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, தூதுவளை, துவரம் பருப்பு, அத்திக்காய், பால் போன்றவை இரவில் சாப்பிடலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், கீரை வகைகளும் தயிரும் இரவில் சாப்பிட கூடாது என்பது முக்கிய விஷயமாகும்.



--

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts