லேபிள்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2024

பன்னீர் சாப்பிடுவதால் எடை கூடுமா? குறையுமா?*


பொதுவாக பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில் கால்சியமும், புரதச் சத்துக்களும் நிறைந்துள்ளது.

இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது. இதனை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே தரும்.

அந்த வகையில் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் புரதத்தின் தேவைக்காக ஏன் பன்னீரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

குறைந்த கார்போ அளவும் அதிக புரதமும் கொண்ட பன்னீர் கலோரி அளவில் மிக மிகக் குறைந்தது. 100 கிராம் பன்னீரில் வெறும் 70 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. அதனால் எடை குறைக்க பன்னீர் சாப்பிடலாம். அதனால் தந்தூரி, தவா ஃபரை போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

குறைந்த கொழுப்புள்ள பாலில் இருந்து எடுக்கப்படும் பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதில் குறைந்த கொழுப்பும் அதிக புரதமும் கிடைக்கிறது.

பன்னீரில் இருந்தே குறைந்த அளவு கார்போ கிடைக்கும். 100 கிராம் பன்னீரில் 1.2 கிராம் அளவு கார்போ கிடைக்கிறது. எனவே இவற்றை எடுத்து கொள்ளலாம்.

பன்னீரில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையைச் சார்ந்தது. இது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை எரிக்கவும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யவும் பயன்படுவதால் இயல்பாகவே எடை குறைய ஆரம்பிக்கும்.

நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற ஒட்டுமொத்த கால்சியம் அளவில் 8 சதவீதம். அதனால் பன்னீரை நிச்சயம் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.



--

கருத்துகள் இல்லை:

டூத் பேஸ்ட்டில் எது சிறந்தது என்று கண்டறியகுழப்பமாக உள்ளதா? வாங்கும் போது இந்த விஷயங்களைகவனியுங்கள்.

பொதுவாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்குவோம். அதில் ஏதேனும் க...

Popular Posts