நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வார்த்தைகள் இந்த உலகுக்கு பொருந்துதோ இல்லையோ நமது உடலுக்கு நன்றாகவே பொருந்தக் கூடியது.
மனித உடலானது 70 சதவிகிதம் நீரை கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எப்படி கார்ப்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை முக்கியமோ அதேபோல் நம் உடல் சுறுசுறுப்பாக இயங்க நீரும் முக்கியம் தான். ஒவ்வொரு நாளையும் நாம் தண்ணீர் பருகி தொடங்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடல்நலக்குறைவை போக்கவும் தண்ணீர் நல்ல சிகிச்சை நிவாரணியாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள். அந்த வகையில் நீரைக் கொண்டு ஜப்பானில் மருத்துவ சிகிச்சை முறையானது பின்பற்றப்படுகிறது. உண்மையில் ஜப்பானியர்கள் இவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், பளபளப்பான சருமத்துடனும் காட்சியளிப்பதற்கு காரணம் இத்தகைய நீர் சிகிச்சையே ஆகும்.
உடல் வெப்பநிலையை சமப்படுத்துகிறது
உடல் தண்ணீரினால் ஆனது, உடலில் உள்ள வெப்பநிலையை இது பராமரிக்கிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மிக எளிதாக நீங்கும், இரத்தம் சுத்தமாகும், மலச்சிக்கல் ஏற்படாது, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது இரண்டு கிளாஸ் முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள் சில வாரங்களுக்கு முறையாக அதனை பின்பற்றி பாருங்கள், அதன் பிறகு ஏற்படும் நன்மைகளை நீங்கள் உணர தொடங்குவீர்கள்.
ஆற்றலை அதிகரிக்கும்
உடல் சோர்வு உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சோர்வை குறைக்கவும் உடல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவும்
சில ஆய்வுகளின்படி, உணவுக்கு முன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்கள் வேகமாக உடல் எடை இழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, இதற்கு உள்ள காரணம் தண்ணீர் உங்கள் வயிற்றை நிரப்புகிறது மற்றும் அதிகமாக சாப்பிடும் போக்கைக் குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்களை வெளியேற்றும் திறன் தண்ணீருக்கு உள்ளது. தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு காரணமான அதிகப்படியான ரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் உப்புகளை தண்ணீர் நீர்த்துப்போகச் செய்கிறது, இதோடு சேர்த்து உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
சரியான செரிமானத்திற்கு
சரியான செரிமானம் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. அஜீரணம் ஏற்பட்டால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தினசரி 6-8 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ளுங்கள். இந்த நடைமுறை பயனுள்ள உணவு செரிமானத்திற்கு உதவும் மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்தும்.
கீல்வாதத்திற்கு
போதுமான அளவு தண்ணீரை குடிக்க விட்டால் மூட்டுகளில் உள்ள வழவழப்பு தன்மை குறைந்து மூட்டுகளில் உராய்வு ஏற்படும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படலாம். வழக்கமான நீர் உட்கொள்ளல் குறைவது முடக்கு வாதம் போன்ற மூட்டு பிரச்சினைக்கு வழிவகுக்கும். இவை ஏற்படாமல் தடுக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒற்றை தலைவலி
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். இது உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும்.
சருமம் பொலிவாக
முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தேவையான அளவு தண்ணீரை குடிப்பது மூலம் சிகிச்சையளிக்க முடியும். உங்கள் உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் பொழுது அது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும், இது ஆரம்பகால வயதான அறிகுறிகளான சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சரும பிரச்சனைகளை தடுக்கும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக