லேபிள்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2024

உங்கள் வீட்டில் பல்லி அதிகமாக இருக்கிறதா? அதற்கு தீர்வு தரும் பொருட்கள்.

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். பயமாக இருக்கும்.

அது தவறி மேலே விழுந்துவிட்டால் அபசகுனமாகவும் பார்ப்பார்கள். எப்படியிருந்தாலும் அது வீட்டைச் சுற்றிக் கொண்டிருப்பது, வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்தாலும் பலன் இல்லை. அதை எப்படி விரட்டுவது?

பூண்டு : பூண்டின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. பூண்டை பல்லி சுற்றும் இடங்களில் வையுங்கள். அது அடிக்கடி தங்கும் இடத்தில் குறைந்த அளவு பூண்டு பற்களைக் குவித்து வையுங்கள். இல்லையெனில் பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை தெளியுங்கள். பல்லி பயம் இனியும் இருக்காது.

மிளகு ஸ்பிரே : பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும்.

வெங்காயம் : வெங்காயத்தை கதவு , ஜன்னல், நுழைவு வாயில் ஆகிய இடங்களில் மாட்டி வையுங்கள். அது தங்கும் இடத்தில் வெங்காயத் துண்டுகளை நறுக்கி வைத்தால் பல்லித் தொல்லை குறையும்.

இரசக் கற்பூரம் : இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்.

ஃபிளை பேப்பர் : இது பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இது சூப்பர் மார்க்கெட், ஹோம் நீட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

குளிர்ச்சியான நீர் : குளிர்ச்சியான நீரை பல்லியைப் பார்க்கும் போதெல்லாம் அதன் மீது ஸ்பிரெ செய்தால் அது தெறித்து ஓடும்.

மயில் இறகு : மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

முட்டை ஓடு : பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. பல்லியும் முட்டையிடும் வகையைச் சேர்ந்ததால் , பெரிய முட்டை ஓட்டைப் பார்த்ததும் நம்மை விடப் பெரிய உயிரினம் இருக்கிறது என ஏமாந்து ஓடிவிடும்.



--

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts