லேபிள்கள்

வெள்ளி, 29 மார்ச், 2024

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

 மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே எப்போதுமே மெக்கானிக்கிடம் எடுத்து சென்று பைக்கை நீட்டுவது நம் அனைவருக்கும் வழக்கமான ஒன்று. ஏனென்றால் கற்று கொள்ள பைக் ஒன்றும் விலை குறைந்த பொருள் அல்லவே.. விலை உயர்ந்தது என்பதால் சிறிய ரிப்பேர் என்றால் கூட மெக்கானிக்கிடம் எடுத்து செல்கிறோம்.

எனினும் பைக் ஓட்டுபவர்கள் தங்கள் பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற அடிப்படையை அறிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க மற்றும் பயணங்களை சிறப்பாக்க மேலும் உதவும். உங்கள் பைக்கை தலை முதல் கால் வரை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து என்னென்னெ பார்ட்ஸ்கள் எப்படி வேலை செய்கின்றன, அவற்றை நாமே எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது என்பன உள்ளிட்ட சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பைக்கை சுற்றி நடை.. இது வேடிக்கையாக இருந்தாலும் உங்கள் பைக்கை நீங்கள் முற்றிலும் சுற்றி அனைத்து பார்ட்ஸ்களையும் பார்த்தது எப்போது என்று யோசியுங்கள்.. நீங்கள் தொடர்ச்சியாக பைக்கை பயன்படுத்துவதால் அதில் உள்ள அனைத்தும் படிப்படியாக சிறிது சேதமடைந்து இருக்கலாம் அல்லது தேய்ந்து இருக்கலாம். உங்கள் பைக்கை நீங்கள் முழுமையாக ஆய்வு செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அவை தீவிரமாவதற்கு முன்னே உங்களுக்கு வெளிப்படுத்தலாம். ஏதேனும் லீக் இருக்கிறதா என்று பார்க்கலாம், ஃபோர்க் லோயர்களில் காணப்படும் ஆயில் ஃபெயிலிங் ஃபோர்க் சீலை குறிக்கிறது.

டயர்களில் பிரஷரை செக் செய்யவும்: நீங்கள் உங்கள் பைக்கில் பாதுகாப்பாக பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பைக்கின் டயர் பிரஷரை செக் செய்வது முக்கியம். தாயாரின் பிரஷர் குறைந்தால் டயர் பிளாட் ஆகிவிடும் அல்லது வேகமாக செல்லும் போது டயர் அடிபடும். இதனால் பைக்கின் பேலன்ஸ் பாதிக்கப்படலாம். பிரஷர் கேஜ் மூலம் உங்கள் பைக் டயர்களில் உள்ள PSI எண்ணை சரிபார்த்து தேவைக்கேற்ப காற்றை நிரப்பவும்.

டிரைவ் செயின் லூப்பிரிகேட்: பைக் எஞ்சினிலிருந்து பின்புற சக்கரங்களுக்கு டார்க்கை மாற்ற டிரைவ் செயின் முக்கிய பொறுப்பு. எனவே இது சரியாக கையாளப்படாவிட்டால் மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு ரைடுக்கு பிறகும் டிரைவ் செயின் சூடாக இருக்கு ம்போதே செயினை லூப்பிரிகேட் செய்வது ஒரு ஸ்மார்ட் ப்ராக்டீஸ் ஆகும். இப்படி செய்வதால் செயினின் ஒவ்வொரு இணைப்பிறகும் ஆயில் செல்கிறது. அதே போல செயினின் டென்ஷனை செக் செய்து சரியாக வைத்திருப்பது பைக்கின் ஆயுளை நீட்டிக்கிறது.

என்ஜின் ஆயில் அளவை சரி பார்க்கவும்: எப்போதும் எஞ்சின் ஆயில் அளவை முழுமையாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் உங்கள் மோட்டார் பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டு வைப்பது நல்ல. இன்ஜினின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள என்ஜின் ஆயில் கிளாஸை செக் செய்து அது முழு கொள்ளளவில் இல்லை என்றால் அதை நிரப்பவும். அதே போல என்ஜின் ஆயில் கருப்பாகி விட்டால் உடனடியாக அதை மாற்றுவது முக்கியம்.

ஏர் ஃபில்ட்டர்: ஸ்ட்ரீட் மற்றும் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்களில் உள்ள ஏர் ஃபில்டர்களை ஒவ்வொரு 5,000 கிமீ-க்கு ஒருமுறை க்ளீன் செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். உங்கள் பைக்கின் ஏர் ஃபில்ட்டர் நிலையை ஆய்வு செய்ய ஏர்பாக்ஸை தூக்கி ஃபில்ட்டரை பிரிக்கவும். ஃபில்ட்டர் தூசி நிறைந்ததாகவும், அடைத்திருப்பது போலவும்தோன்றினால் அதை மாற்றவும் அல்லது சுத்தம் செய்து மீண்டும் பொருத்தவும்.

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts