லேபிள்கள்

வெள்ளி, 29 மார்ச், 2024

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

 மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே எப்போதுமே மெக்கானிக்கிடம் எடுத்து சென்று பைக்கை நீட்டுவது நம் அனைவருக்கும் வழக்கமான ஒன்று. ஏனென்றால் கற்று கொள்ள பைக் ஒன்றும் விலை குறைந்த பொருள் அல்லவே.. விலை உயர்ந்தது என்பதால் சிறிய ரிப்பேர் என்றால் கூட மெக்கானிக்கிடம் எடுத்து செல்கிறோம்.

எனினும் பைக் ஓட்டுபவர்கள் தங்கள் பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற அடிப்படையை அறிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க மற்றும் பயணங்களை சிறப்பாக்க மேலும் உதவும். உங்கள் பைக்கை தலை முதல் கால் வரை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து என்னென்னெ பார்ட்ஸ்கள் எப்படி வேலை செய்கின்றன, அவற்றை நாமே எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது என்பன உள்ளிட்ட சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பைக்கை சுற்றி நடை.. இது வேடிக்கையாக இருந்தாலும் உங்கள் பைக்கை நீங்கள் முற்றிலும் சுற்றி அனைத்து பார்ட்ஸ்களையும் பார்த்தது எப்போது என்று யோசியுங்கள்.. நீங்கள் தொடர்ச்சியாக பைக்கை பயன்படுத்துவதால் அதில் உள்ள அனைத்தும் படிப்படியாக சிறிது சேதமடைந்து இருக்கலாம் அல்லது தேய்ந்து இருக்கலாம். உங்கள் பைக்கை நீங்கள் முழுமையாக ஆய்வு செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அவை தீவிரமாவதற்கு முன்னே உங்களுக்கு வெளிப்படுத்தலாம். ஏதேனும் லீக் இருக்கிறதா என்று பார்க்கலாம், ஃபோர்க் லோயர்களில் காணப்படும் ஆயில் ஃபெயிலிங் ஃபோர்க் சீலை குறிக்கிறது.

டயர்களில் பிரஷரை செக் செய்யவும்: நீங்கள் உங்கள் பைக்கில் பாதுகாப்பாக பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பைக்கின் டயர் பிரஷரை செக் செய்வது முக்கியம். தாயாரின் பிரஷர் குறைந்தால் டயர் பிளாட் ஆகிவிடும் அல்லது வேகமாக செல்லும் போது டயர் அடிபடும். இதனால் பைக்கின் பேலன்ஸ் பாதிக்கப்படலாம். பிரஷர் கேஜ் மூலம் உங்கள் பைக் டயர்களில் உள்ள PSI எண்ணை சரிபார்த்து தேவைக்கேற்ப காற்றை நிரப்பவும்.

டிரைவ் செயின் லூப்பிரிகேட்: பைக் எஞ்சினிலிருந்து பின்புற சக்கரங்களுக்கு டார்க்கை மாற்ற டிரைவ் செயின் முக்கிய பொறுப்பு. எனவே இது சரியாக கையாளப்படாவிட்டால் மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு ரைடுக்கு பிறகும் டிரைவ் செயின் சூடாக இருக்கு ம்போதே செயினை லூப்பிரிகேட் செய்வது ஒரு ஸ்மார்ட் ப்ராக்டீஸ் ஆகும். இப்படி செய்வதால் செயினின் ஒவ்வொரு இணைப்பிறகும் ஆயில் செல்கிறது. அதே போல செயினின் டென்ஷனை செக் செய்து சரியாக வைத்திருப்பது பைக்கின் ஆயுளை நீட்டிக்கிறது.

என்ஜின் ஆயில் அளவை சரி பார்க்கவும்: எப்போதும் எஞ்சின் ஆயில் அளவை முழுமையாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் உங்கள் மோட்டார் பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டு வைப்பது நல்ல. இன்ஜினின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள என்ஜின் ஆயில் கிளாஸை செக் செய்து அது முழு கொள்ளளவில் இல்லை என்றால் அதை நிரப்பவும். அதே போல என்ஜின் ஆயில் கருப்பாகி விட்டால் உடனடியாக அதை மாற்றுவது முக்கியம்.

ஏர் ஃபில்ட்டர்: ஸ்ட்ரீட் மற்றும் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்களில் உள்ள ஏர் ஃபில்டர்களை ஒவ்வொரு 5,000 கிமீ-க்கு ஒருமுறை க்ளீன் செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். உங்கள் பைக்கின் ஏர் ஃபில்ட்டர் நிலையை ஆய்வு செய்ய ஏர்பாக்ஸை தூக்கி ஃபில்ட்டரை பிரிக்கவும். ஃபில்ட்டர் தூசி நிறைந்ததாகவும், அடைத்திருப்பது போலவும்தோன்றினால் அதை மாற்றவும் அல்லது சுத்தம் செய்து மீண்டும் பொருத்தவும்.

செவ்வாய், 26 மார்ச், 2024

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும்.

எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்போது,   குறிப்பிட்ட வகை உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தம் நன்றாக அதிகரிக்கும். அந்த சூப்பர் உணவுகள் என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்: பீட்ரூட் உடலில் இரத்த வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மட்டும் போதும் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் சொல்லுவார்கள். ஆப்பிளில் அனைத்து விதமான நன்மைகளும் உள்ளன. ஆப்பிள் நம்மை ஆரோக்கியமாக வைத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

மாதுளை: ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் மாதுளை, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த வளர்ச்சி அதிகரிக்கும்.

உலர் பழங்கள்: பேரீச்சம்பழம், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றின் உட்கொள்ளல் படிப்படியாக இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

கீரை: ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கீரையை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

சனி, 23 மார்ச், 2024

சூடான காலை உணவு தரும் நம்ப முடியாத பலன்கள்.

பலர் குளிர்ந்த காலை உணவுகளை விரும்பினாலும், செரிமான அமைப்பை புதுப்பிக்க, சூடான உணவை அன்றைய முதல் உணவாக ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி, காலையில் ஒரு சூடான காலை உணவு முக்கியமானது. அன்றைய மிகப்பெரிய உணவை ஜீரணிக்க உடலை தயார்படுத்துகிறது மதிய உணவு. பண்டைய மருத்துவ நடைமுறையானது நமது வளர்சிதை மாற்றத்தின் ஆதாரமாக சூரியனைக் கருதுகிறது மற்றும் அது மதியம் 12 முதல் 2 மணி வரை பிரகாசமாக பிரகாசிப்பதாகக் கருதுகிறது. இது மதிய உணவுக்கு ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது.

நாளின் தொடக்கத்தில், வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு மென்மையான கிக்ஸ்டார்ட் தேவைப்படுகிறது மற்றும் ஒரு சூடான காலை உணவு உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உங்கள் குடலை வரவிருக்கும் நாளுக்கு தயார்படுத்துகிறது.

காலையில், சூரியன் உதிக்கின்றது. அதே போல் நமது அக்னியும் (செரிமான நெருப்பு/பசியின்மை) அதன் உகந்த திறனில் செயல்படாது. எனவே, நமது குடலைத் தயார் செய்வதற்காக, நாள் முழுவதும் உணவை ஜீரணிக்க, ஒளியுடன் இருக்க முடியும். மேலும் சூடான காலை உணவு சிறந்தது. ஏனெனில் இது ஜீரணிக்க இலகுவானது மற்றும் உங்கள் குடலை உகந்த செரிமானத்திற்கு தயார்படுத்துகிறது.

வெதுவெதுப்பான காலை உணவு என்பது செரிமான நெருப்புக்கான ஒரு வார்ம்-அப் பயிற்சியைப் போன்றது. இது அதிக வலிமை தேவைப்படும் மதிய உணவை ஜீரணிக்கும் உண்மையான உடற்பயிற்சிக்கு நம் உடலை தயார்படுத்துகிறது.

ஆயுர்வேதம் மதியம் 12 முதல் 2 மணி வரை அதிக மதிய உணவை சாப்பிட பரிந்துரைக்கிறது. ஏனென்றால் சூரியன் வானத்தில் உச்சத்தில் இருக்கும் நேரம் மற்றும் நமது செரிமான திறன் உகந்ததாக இருக்கும்.

குளிர்ந்த காலை உணவு நமது செரிமான அமைப்புக்கு என்ன செய்கிறது?

குளிர்ந்த காலை உணவை உட்கொள்வது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றுவது போன்றது. அது எரிவதற்கு உதவுவதை விட அதை அணைத்துவிடும். எனவே, புதிதாக சமைத்த கஞ்சி, சுண்டவைத்த பழங்கள் (ஆப்பிள்/பேரி), காய்கறி சூப் போன்ற சூடான மற்றும் லேசான காலை உணவை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

இருப்பினும், ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகையில், அதிக பிட்டா உள்ளவர்களுக்கு குளிர்ந்த காலை உணவு சிறந்தது. ஆனால் பிற மக்களுக்கு, சூடான காலை உணவுகள் சிறப்பாக செயல்படும்.

செவ்வாய், 19 மார்ச், 2024

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும்.

மேலும் அந்த சத்தத்தைக் கேட்கும் போதும், அடுத்தடுத்தும் இதேபோன்று கேட்குமோ என நினைத்து நாம் பத்து விரல்களிலும் நெட்டி முறிப்போம்.

அதேபோல், கழுத்து இடுப்பு என்று அனைத்து மூட்டுகள் இணையும் பகுதிகளிலும் நாம் நெட்டி முறிப்போம். இது நல்லதா? கெட்டதா என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்தப் பழக்கம் நம்மோடு ஒட்டிவிட்ட ஒன்றாகிவிட்டது.

இப்படி நாம் அடிக்கடி செய்வதால் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன் கூறியது வருமாறு: நமது விரல் எலும்புகளின் இணைப்பு பகுதிக்கு இடையில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமல் இருக்க எண்ணெய்போல் செயல்படுகிறது.

நாம் நீண்ட நேரம் அசையாமலிருக்கும்போது சைனோவியல் திரவம் எலும்புகளுக்கு இடையே அதிகமாகச் சேர்ந்துவிடும். அப்போது நெட்டி முறித்தால் முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படும். மேலும் நெட்டி முறிக்கும்போது எலும்புகள் இணைப்பு விரிவடைவதால்தான் சொடுக்கு சத்தம் கேட்கிறது.

இந்த சத்தத்தால்தான் நாம் மீண்டும் மீண்டும் நெட்டி முறிக்கிறோம். இந்த பழக்கத்தில் இருந்து விடவேண்டும் என்றால், அப்பகுதிகளை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

www.sahabudeen.com

சனி, 16 மார்ச், 2024

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர், அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது.

ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை.

சுவையில் சிறந்த பனீர் சாப்பிட விரும்பாத சைவ உணவு பழக்கம் உள்ளவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், முழுமையாக அதன் ஊட்ட சத்துக்களை பெற முடியும்.

பலருக்கு, பன்னீரை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது பொரித்தால் நல்லதா என்ற குழப்பம் உள்ளது.

பன்னீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பன்னீரில், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ள நேரத்தில், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன. பன்னீர் உட்கொள்வதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதற்கு இதுவே காரணம்.

சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் பனீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பன்னீரை சமைக்கும் போது, அதில் உள்ள சில சத்துக்கள் அழிந்துவிடும். இதன் காரணமாக நீங்கள் அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

மேலும், பன்னீரில் ஏராளமான புரதங்களும் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். மேலும், எடையும் கட்டுக்குள் இருக்கும்.

சாப்பிடும் முன் பேக் செய்யப்பட்ட பனீரை சுத்தம் செய்ய வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வீட்டிலேயே பன்னீர் தயாரிக்கிறீர்கள் என்றாலும்ன் சரி, அல்லது நல்ல தரமான பன்னீர் வாங்கி வந்தாலும் சரி, அதை பச்சையாகவே சாப்பிடலாம். மறுபுறம், நீங்கள் கடையில் பேக் செய்யப்பட்ட பனீரை வாங்கியிருந்தால், அதை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து சுத்தம் செய்வது நல்லது.

பேக் செய்யப்பட்ட, சில நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், அதில் அழுக்கு அல்லது பாக்டீரியா வளரும் அபாயம் உள்ளது. அதனால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்த பிறகு, பன்னீரை எடுத்துப் பயன் படுத்தலாம்.

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts