இறைச்சி வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த உணவு நண்டு. பிற பிரபலமான கடல் உணவு வகைகளிலும் நண்டில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் இருந்தாலும்
இதில் பாதரச அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.
வைட்டமின் பி 12, ஃபோலேட், இரும்பு, நியாசின், செலினியம், துத்தநாகம், புரதம், குறைந்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது நண்டு.
தசையை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான அனைத்தும் நண்டில் இருக்கிறது.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஊட்டச் சத்துக்களையும் (Nutritious Food) கொண்ட நண்டு, பொது ஆரோக்கியத்தை மேம் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, பல்வேறு நோய்களைத் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நண்டில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளை வழங்குகிறது.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைக் குறைக்கவும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.
இரத்த சோகையை தடுக்கும். வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் உட்பட நண்டில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் குறைபாடு (Vitamin Deficiency) இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
வைட்டமின் குறைபாடுள்ள ரத்த சோகை உள்ளவர்களுக்கு போதுமான ரத்த சிவப்பணுக்கள் இருக்காது, அவர்களின் சோர்வையும் பலவீனத்தையும் போக்குவதற்கு நண்டு அருமருந்தாகும்.
உங்கள் மூளையை வலுவாக வைத்திருக்க நண்டு போன்ற கடல் உணவுகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணலாம்.
நண்டு உண்பவர்களுக்கு டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்கும் நண்டு இறைச்சி, கண்பார்வையை அதிகரிக்கிறது.
கரிமக் கூறுகளான கண் ஆரோக்கியத்தை (Eye Care) பாதுகாப்பதில் முக்கியமான ரெடினொல் , ரெடினால், ரெடினியோக் அமிலம் , பீடா கரோடின் ஆகியவை நண்டு இறைச்சியில் இருக்கின்றன.
நண்டு இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு கண் புரை, கருவிழி சிதைவு போன்ற கண் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றையும் நண்டு இறைச்சி பலப்படுத்துகிறது. எனவே, ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் நண்டு இறைச்சி உகந்தது. இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு.
100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. ஆகவே, அசைவ உணவு உண்பவர்களின் விருப்பத் தெரிவாக நண்டு இறைச்சி இடம் பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக