லேபிள்கள்

திங்கள், 19 பிப்ரவரி, 2024

வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்.

சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள்.

இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது... வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மதுவருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது.

இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பெயின் கில்லர் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தை தருபவையாக உள்ளன. இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலில் வலி ஏற்படும் போது உங்களுக்கு கண்டிப்பாக வலி நிவாரண மாத்திரை தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்களால் சில நாட்கள் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் வலி நிவாரண மாத்திரை தேவையில்லை.

வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதை விட சரியான நிபுணரிடம் சென்று அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்தை வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கம். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம்.

வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் , மயக்கம், சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் உருவாகும். மேலும் கல்லீரல், இதயம் போன்றவை வலிமை இழக்கின்றன. எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி சரியான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts