லேபிள்கள்

புதன், 28 பிப்ரவரி, 2024

ஆண்கள் குப்புற படுத்து உறங்கலாமா? உண்மை என்ன?

 உறக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்டது, வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்த அத்தியாவசியமானது ஆகும்.

ஆனால், உறக்கத்தின் போது மனிதர்கள் பல விஷயங்களை சரியாக மேற்கொள்ள வேண்டும். அதுவே நமது உடல் நலத்திற்கு நல்லது.

பொதுவாக, உறங்குகையில் ஆண்கள் குப்புற படுத்து உறங்கலாமா? பெண்கள் குப்பற படுத்து உறங்கலாமா? என்ற கேள்விகள் நம்மிடம் இருக்கும். குப்புற படுத்து உறங்கினால் தான் தூக்கம் வருடம் என்றும் பலரும் கூறுவார்கள்.

ஆண்களோ, பெண்களோ குப்புற படுத்து உறங்கினால், அவை நமது கழுத்து மற்றும் முதுகெலும்பும்புகளில் பிரச்சனை ஏற்படுத்தும். குப்புற படுத்து உறங்குவதால் வயிற்று பாகம் மேலே தள்ளப்பட்டு, முதுகெலும்பின் வில்லை மற்றும் அதனிடையே இருக்கும் நரம்பு வளையும்.

இதனால் உடலின் சில பாகத்தில் வலிகள் ஏற்படலாம். மேலும், மூச்சு விடுவது சிரமமாகும் நிலையில், குப்புற படுத்து கழுத்தை திரும்பி மூச்சை விடுவது பின்னாளில் பக்கவிளைவை ஏற்படுத்தி, கழுத்து எலும்பு வலியை ஏற்படுத்தலாம்.

திங்கள், 26 பிப்ரவரி, 2024

Nutritious Food: ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ள நண்டு உணவு.

 இறைச்சி வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த உணவு நண்டு. பிற பிரபலமான கடல் உணவு வகைகளிலும் நண்டில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் இருந்தாலும்

இதில் பாதரச அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

வைட்டமின் பி 12, ஃபோலேட், இரும்பு, நியாசின், செலினியம், துத்தநாகம், புரதம், குறைந்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது நண்டு.

தசையை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான அனைத்தும் நண்டில் இருக்கிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஊட்டச் சத்துக்களையும் (Nutritious Food) கொண்ட நண்டு, பொது ஆரோக்கியத்தை மேம் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, பல்வேறு நோய்களைத் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நண்டில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளை வழங்குகிறது.

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைக் குறைக்கவும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.

இரத்த சோகையை தடுக்கும். வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் உட்பட நண்டில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் குறைபாடு (Vitamin Deficiency) இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

வைட்டமின் குறைபாடுள்ள ரத்த சோகை உள்ளவர்களுக்கு போதுமான ரத்த சிவப்பணுக்கள் இருக்காது, அவர்களின் சோர்வையும் பலவீனத்தையும் போக்குவதற்கு நண்டு அருமருந்தாகும்.

உங்கள் மூளையை வலுவாக வைத்திருக்க நண்டு போன்ற கடல் உணவுகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணலாம்.

நண்டு உண்பவர்களுக்கு டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்கும் நண்டு இறைச்சி, கண்பார்வையை அதிகரிக்கிறது.

கரிமக் கூறுகளான கண் ஆரோக்கியத்தை (Eye Care) பாதுகாப்பதில் முக்கியமான ரெடினொல் , ரெடினால், ரெடினியோக் அமிலம் , பீடா கரோடின் ஆகியவை நண்டு இறைச்சியில் இருக்கின்றன.

நண்டு இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு கண் புரை, கருவிழி சிதைவு போன்ற கண் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றையும் நண்டு இறைச்சி பலப்படுத்துகிறது. எனவே, ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எடை குறைக்க விரும்புபவர்களுக்கும் நண்டு இறைச்சி உகந்தது. இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு.

100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. ஆகவே, அசைவ உணவு உண்பவர்களின் விருப்பத் தெரிவாக நண்டு இறைச்சி இடம் பெறுகிறது.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மாரடைப்பு வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டியவை!

 உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம்.

அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.

மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், தாடைகளில் வலி பரவுதல் வரை இதய நோய்க்கான அறிகுறிகள்.

ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.

வாழ்க்கைச் சூழல், பணிச் சுமை, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு முறைகளில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இக்காலத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் அனைவருமே போதிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

♦️ மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் எடுத்துக்கொள்ளும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும்.

♦️ கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

♦️ உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது.

♦️ உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.

♦️ மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்ய முற்பட வேண்டும். முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

♦️ தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.

♦️ நாள் ஒன்றுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.

♦️ குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை இயக்கக்கூடிய ஏதேனும் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம்.

♦️ வேலை தவிர்த்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

♦️ தவிர, உணவுகளில் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

திங்கள், 19 பிப்ரவரி, 2024

வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்.

சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள்.

இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது... வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மதுவருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது.

இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பெயின் கில்லர் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தை தருபவையாக உள்ளன. இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலில் வலி ஏற்படும் போது உங்களுக்கு கண்டிப்பாக வலி நிவாரண மாத்திரை தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்களால் சில நாட்கள் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் வலி நிவாரண மாத்திரை தேவையில்லை.

வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதை விட சரியான நிபுணரிடம் சென்று அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்தை வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கம். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம்.

வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் , மயக்கம், சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் உருவாகும். மேலும் கல்லீரல், இதயம் போன்றவை வலிமை இழக்கின்றன. எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி சரியான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பனிக்காலத்தில் பாடாய்ப் படுத்தும் தும்மல், சளி, தலைபாரம் இவற்றிற்கு வீட்டு சிகிச்சை உதவுமா?

குளிர்காலம் வந்தாலே சளி, தும்மல், தலைபாரம் என வரிசையாக பாடாகப் படுத்துகிறது. இவற்றிலிருந்து விடுபட வீட்டு வைத்தியம் ஏதேனும் சொல்ல முடியுமா?

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

``தலை அதிக பாரமாக இருப்பதாக உணர்பவர்கள் ஆவி பிடிக்கலாம். நொச்சி இலை, வேப்பிலை, மஞ்சள் சேர்த்த வெந்நீரில் ஆவி பிடிப்பது இன்னும் சிறந்தது. சிலருக்கு நெற்றிப் பகுதியிலும், கன்னங்களிலும் வலி இருக்கும். இவர்கள் சிறிதளவு ஓமத்தை அரைத்து, கொஞ்சம் பாலில் கலந்து நன்கு கொதிக்கவைக்கவும். அது கெட்டியாக, குழம்பு பக்குவத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். வெதுவெதுப்பான சூட்டில் அதை எடுத்து, வலி உள்ள பகுதிகளில் தடவிக்கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரைகள் கிடைக்கும். அதை வாங்கி பற்றுபோட்டுக்கொள்ளலாம். இது தலைபாரத்துக்கு நல்ல நிவாரணம் தரும்.

நீர்கோத்து கழுத்தின் பின்பகுதியில் வலி இருப்பவர்கள், அந்த இடத்திலும் இதைப் பற்றுபோட்டுக் கொள்ளலாம். 2-3 கிராம் அளவு திப்பிலிச் சூரணத்தை தேன் அல்லது பாலில் கலந்து உட்கொள்ளலாம்.

சிலருக்கு நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைக் குடித்தால் வயிற்றுவலி, கேஸ்ட்ரைட்டிஸ் போன்ற தொந்தரவுகள் வருவதாகச் சொல்வார்கள். அவர்கள் 10 வேப்பிலை, அரை டீஸ்பூன் சீரகம், அதிகபட்சம் 5 மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைக்கவும்.

இதில் பெரியவர்கள் என்றால் 30-50 மில்லி, 12 வயதுக்குட்பட்டவர்கள் 20 மில்லி எடுத்துக்கொள்ளலாம். இது சளி, இருமல் பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரும். வயிற்றுப் புண், வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இந்தக் கஷாயம் பலனளிக்கும்."

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஆபத்து நிறைந்த பேப்பர் கப்.

நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. நிறைய பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பொதுவாக காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் உபயோக படுத்துகிறோம்.

இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது. கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

25,000 மைக்ரான் அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை உட்கொள்ளும்போது,   உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாகும் என ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது முன்னோர்கள் சுற்று சூழலை பாதிக்காத வகையில் அதே சமயம் உடலை பாதிக்காத வகையில், வாழை இலை, இலைகளால் செய்யப்பட்ட தொன்னைகள், போன்றவற்றால் ஆன பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வழியை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்வோம்.

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts