“ஆணுறுப்பின் மேலதிக தோலை வைக்காமலேயே இறைவன் மனிதனை படைத்திருக்கலாமே” என ஒரு மாற்று மத சகோதரர் கேட்டார்.
அன்பரே…! அல்லாஹ்
உங்களை படைத்த போது நிர்வாணமாகத்தானே படைத்தான். அப்படியென்றால் ஏன் உடலை
மறைத்து ஆடை அணிகிறீர்கள்? உங்களுக்கு அந்த அறிவை
கொடுத்தது யார்…?? அது போன்றே தலை, அக்குள்,
மீசை, மர்ம முடி என்பது வளரும் தன்மை
கொண்டது. அதனை ஏன் வெட்டுகிறீர்கள்? அதை வளராமல் இறைவன்
விட்டு விடலாமே என நீங்கள் ஏன் கேட்பதில்லை?
ஆணுறுப்பிலும், பெண்ணுறுப்பிலும்
மேலதிக தோலொன்றை வைத்து அல்லாஹ் படைத்தமைக்குரிய காரண காரியத்தை மனித
அறிவால் அறிந்து கொள்ள முடியாது… இறைவன் மகா படைப்பாளன்.
மனிதனது இதயத்தில் ஏற்படும் அடைப்புக்கு பைபாஸ் செய்வதற்குரிய
மேலதிக நரம்பை நமது காலில் இருந்தே வைத்தியர்கள் பெறுகிறார்கள். பல காலத்தின்
முன்பு இவ்வெலும்பு அனாவசியமானதாகவே மனிதனுக்கு தெரிந்தது…
ஆகவே, இறைவன்
படைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவற்றிலும் சில கட்டத்துக்கு நன்மையை
வைத்துள்ளான்.
ஆண் உறுப்பின் மேலதிக தோலை வைத்து இறைவன் படைத்தமைக்கு
நாம் சில காரணங்களை கூற முடியும்.
மனித உடலில் வெளியே உள்ள மிகவும் மெல்லிய பகுதி
அதுவாகும். குழந்தையாக இருக்கும் போது அக்குழந்தை தாயின் கருவறையில்
பாதுகாப்பாக இருப்பதற்காக அதன் உறுப்புக்களை மூடி வைத்துள்ளான். கண்ணுக்கு
இமை கொடுத்து கண்களை மூடவைத்தான். குழந்தை பிறந்த பின் தான் கண் திறக்கிறது.
கண்ணை திறந்து கொண்டே பிறந்தால் என்ன நடக்கும்…?
அழுக்குகள் கண்களுக்குள் செல்லும் என்பதால் குழந்தையின் கண்ணை
மூடியபடி பிறக்க வைத்த இறைவன் மிகப்பெரும் அறிவுடையவன்.
வாய்க்குள் எதுவும் செல்ல முடியாமல் வாயையும் மூடியவாறு
படைத்தான். அடுத்ததாக மனித உடலுக்குள் ஏதும் செல்லும் வழி ஆணுறுப்பாகும்.
அதனை தோலைக் கொண்டு மூட வைத்தான்.
அந்த தோல் இன்றி படைக்கப்பட்டிருந்தால் இன்றைய அவசர
யுகத்தில் வைத்தியர், தாயின் வயிற்றை
கீறி குழந்தையை எடுக்கும் போது வைத்தியரின் அல்லது நர்சின் நகம் அதில்
கீறினால் அக்குழந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன…? இதனால்
தான் அதனை மூடி வைத்து பிறக்க வைத்தான்….
அத்துடன் வைத்தியர் ஒருவரின் கருத்துப்படி கருப்பை
உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின்
முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு
உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன் தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.
குழந்தை பிறந்ததும் அதற்குரிய ஆபத்துக்கள் நீங்கி
அக்குழந்தை இலகுவாக சிறு நீர் கழித்து சுத்தமாக இருக்கும் வகையில்
ஆணுறுப்பின் மெல்லிய மூடு தோலை நீக்கும்படி இறைவன் வழி காட்டியுள்ளான்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதற்காக ஏன்..??
எதற்கு..?? என்ற கேள்வி கேட்காமல் நாம் அதனை
செய்கின்றோம். காரணம் அல்லாஹ் சொன்னதில் 100 வீதம் உண்மை
இருக்கும் என்பதை நம்புபவன் தான் முஸ்லிம்.
மேற்படி தோலை நீக்குவதன் மூலம் சிறு நீர் பிரச்சினை வராமல்
இருப்பதாக வைத்தியர்கள் சொல்கின்றனர்.
ஒருவனின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்கப்பட்டால்,
அவன் சிறுநீர் கழிக்கும் போது மிக இலகுவாக கழித்து விடுவான்.
அத்துடன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.
ஆனால் தோல் நீக்காத ஆணுறுப்பினால் சிறுநீர் கழிப்பதாயின்
அதனை இழுத்து மேலே சுருட்டி சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழித்து முடிந்ததும்
அது தானாக மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய அசுத்த சிறுநீர் உள்ளே இருந்து
கொண்டிருக்கும். வயது வந்த ஒருவரால் அதனை மேலே உருவி ஓரளவு சுத்தம் செய்ய
முடியும். ஆனால் குழந்தையால் சிறுவர்களால் முடியாது. இதனால் தான் குழந்தை பருவத்திலேயே
அதனை எடுத்து விடுகிறோம்.
இத்தகைய பல சிரமங்களையும் அசுத்தத்தையும் கருத்திற்கொண்டு
இறைவன் சுன்னத்து செய்து கொள்ளும்படி சொல்லியுள்ளான்..
சுன்னத்து செய்யாத பெரியவர்கள் பலர் சிறுநீர் பிரச்சினை
காரணமாக வைத்தியசாலைக்கு சென்றால் முதலில் அந்த மேலதிக தோலை வெட்டும்படியே
வைத்தியர்கள் சொல்கிறார்கள். பலருக்கு இது நடந்துள்ளது..
இன்னும் சிலருக்கு சிறு நீர் வெளியேற பைப் போடுவதாயின்
தோலை நீக்காமல் அதனை போடுவது கஷ்டம்.
வைத்தியசாலைகளுக்கு சென்று பார்த்தால் இந்த உண்மை
புரியும்.
ஆகவே, பல
நன்மைகள் உள்ள சுன்னத்து செய்து கொள்வதை மனிதனுக்கு வழி காட்டிய ஒரேயொரு
மார்க்கம் இஸ்லாமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக