- وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
“நாம்
மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும்
அவனின் பிடரி நரம்பை விட, நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்”
குர்ஆன் (50:16)
இறைவன் நமக்கு அருகில்
நம்முடன் நெருங்கி இருப்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் பிற வசனங்கள். ஆயினும், நாமோ அவனுக்கு
உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
(அல்குர்ஆன் : 56:85)
“நீங்கள்
எங்கிருப்பினும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்” (57:04).
“நீங்கள்
செய்யும் மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்” (2:271)
“அல்லாஹ்
அவனின் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்” (3:20).
“(நபியே)
உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால், நிச்சயமாக
நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடை அளிப்பேன்”
குர்ஆன் (2:186).
சிரமத்தில் சிக்கிய
மனிதனின் அபயக்குரலைக் கேட்டு அல்லாஹ் அவனின் சிரமத்தை நீக்குவான்” (27: 62).
… இப்படி நிறைய குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்
நம்மோடு மிக மிக நெருக்கமாக இருப்பதை சொல்லிக் காட்டுகிறது. தன் நெருக்கம் பற்றி
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களிடம் பேசிய உரையாடலை ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது
(நண்பர்கள் இந்த ஹதீஸ் கிதாபின் பெயரை தேடி சொன்னால், மிகவும்
நன்றியுடையவனாக இருப்பேன்)
“மூஸாவே நான் உம்மோடு நெருக்கமாக இருக்க
வேண்டுமா ?” என்று அல்லாஹ் கேட்பான்.
“என்ன நாயனே, இப்படி
ஒரு கேள்வியா ? நீ என்னோடு நெருக்கமாக இருந்தால் எனக்கு
எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் ” என்று சொல்வார்கள் மூஸா
(அலை) அவர்கள்
அல்லாஹ் மீண்டும் கேட்பான்,
” உம்முடைய நாக்கிற்கும் பேச்சுக்கும் உள்ள தொடர்பை விட நான் உனக்கு
நெருக்கமாக இருக்க வேண்டுமா ?” (நாவு அசைந்தால் பேச்சு வந்து
விடும். அவ்வளவு நெருக்கம் இருக்கிறது நாவுக்கும் பேச்சுக்குமிடையில் )
அதற்கு முஸா (அலை) “கண்டிப்பாக
நாவுக்கும் பேச்சுக்குமிடையில் ), அதற்கு மூஸா (அலை)
கண்டிப்பாக நாவுக்கும் பேச்சுக்குமிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டிலும் நான்
உனதுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்” என்று சொல்வார்கள்.
இன்னும் “ரூஹுக்கும்,
உடலுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை காட்டிலும் நான் உமக்கு
நெருக்கமாக வேண்டுமா ? ” எனக் கேட்பான் அல்லாஹ். ( ரூஹு
இருந்தால் அங்கே உடல் இருந்தாக வேண்டும். உடல் இருந்தால் அதில் ரூஹு இருந்தாக
வேண்டும். இல்லையெனில் மையத்தாகி விடும் )
“ஆம்..! ரூஹுக்கும் உடலுக்கும் இடையில் உள்ள
நெருக்கத்தை காட்டிலும் நான் உனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்” என்பார்கள் மூஸா (அலை) அவர்கள் .
அல்லாஹ் அடுத்துக் கேட்பான்.”
கண்ணுக்கும் பார்வைக்கு மத்தியில் உள்ள நெருக்கத்தை காட்டிலும்,
நான் உமக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமா ? “என்று
கேட்பான்
கண் இருந்தால் அதிலேயே பார்வையில் இருக்கும் அல்லவா ?
இவ்வளவு நெருக்கம் வேண்டுமா எனக் கேட்பான் அல்லாஹ்.
அப்போது ” என்ன
அல்லாஹ் ? கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறாயே ,விஷயத்தைச் சொல்
நாயனே ! என்று மூஸா (அலை) அவர்கள் கேட்கிற போது,
அல்லாஹ் சொல்வான் : “எனது
ஹபீப் நாயகம் (ஸல்) அவர்கள் மீது, இனி உமக்குப் பின்னால் வரை
இருக்கிற அஹ்மதின் மீது நீர் அதிகம் ஸலவாத்து ஓதிக்கொள். என்னை நீர் , நான்
சொன்னது போல் உள்ள நெருக்கத்தில் பெற்றுக் கொள்வாய் என்று.
மூஸா (அலை) அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் ஸலவாத்து ஓதி
இருக்கிறார்கள். அதனால் நாம் தான் ஸலவாத்து ஓதுவதில் பின்தங்கி இருக்கிறோம் என்பதை
எண்ணிப் பார்க்க வேண்டும்.
ரஹ்மத் ராஜகுமாரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக