லேபிள்கள்

வியாழன், 16 நவம்பர், 2023

தேங்காயை எந்த வடிவில் எடுத்துக் கொள்வது நல்லது?*

சிலர் தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனைக் கொண்டு உணவுகளை செய்வர். இது தவறானது.

ஏனெனில், இதில் நீங்கள் தேங்காயில் உள்ள நார்ச்சத்தை நீக்கி விட்டு வெறும் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்கள்.

நார்ச்சத்து இன்றி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொள்வது உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

தேங்காயை சிலர் பொரியலுக்குத் துருவலாக பயன்படுத்துவர். அப்படி எடுத்துக் கொள்வது நல்லது தான். அதேபோல், தேங்காய் சட்னியாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

மேலும், வெறும் தேங்காயை நீங்கள் சில சில்லுகள் மென்று கூட சாப்பிடலாம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவில் தேங்காயை அப்படியே சாப்பிட வேண்டாம்.

தேங்காய் நல்லதா, கெட்டதா என்றால் இரண்டுமே அதில் உள்ளது. இருப்பினும், தேங்காயில் அதிக அளவில் நன்மைகள் உள்ளன. அதனை நீங்கள் எந்த வடிவில் அதனை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மை நமக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts