• சுர்மா – இத்மித் – குஹ்ல் என்று அழைக்கப்படும் கண் மை இஸ்லாம் நமக்கு மருத்துவ ரீதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்கள்.
• சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு
கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருளாகும். இத்மித் என்று அரபியில்
அழைக்கப்படுகிறது. இதில் மூன்றாம் வகை ஆண்டிமொனி சல்ஃபைடு எனும் வேதி பொருள்
உள்ளது.
• அரபியில் குஹ்ல் / இத்மித் என்றும்
துருக்கியில் சுர்மா என்றும் ஹிந்தியில் உருதுவிலும் காஜல் என்றும், மலையாளத்தில் கண்மஷி என்றும் சமஸ்க்ருதத்தில் காஜல்/கஜோல் என்றும்
எகிப்தில் மீஸ்தீமீத் என்றும் லத்தீனில் ஸ்தீபியம் என்றும் கிரேக்கத்தில் ஸ்தீபி
என்றும் சோமாலியில் கூல் என்றும் ஒவ்வொரு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் சுர்மா
பயன் படுத்த படுகிறது.
• இஸ்லாத்தில் ஆண் மற்றும் பெண் இருவரும்
பொதுவாக சுர்மா இட்டு கொள்ளுவது சுன்னத் ஆகும்! ஆரம்ப காலம் முதல் இன்றுவரை கண்
பார்வை குளிர்ச்சி மற்றும் சக்திக்கு சுர்மா பயன்படுத்த படுகிறது.
சுர்மா தோன்றிய
வரலாறு :
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த
போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்.
அப்போது மூஸா : என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்;
எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார்.
அதற்கு அவன் (அல்லாஹ்),
மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில்
நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்! என்று கூறினான்.
ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த
போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்! அப்போது
மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்.
அவர் தெளிவடைந்ததும், (இறைவா!) நீ மிகவும்
பரிசுத்தமானவன் ; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான்
கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:143)
• மேலே உள்ள சம்பவத்தில் நடந்த இடம் எகிப்து
நாட்டில் உள்ள சினாய் மலையாகும்.
• இந்த மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,285
மீட்டர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக
உயர்ந்தும் இந்த மலை காணப்படுகிறது.•
இந்த மலையிலிருந்து பெறப்பட்ட கருகிய கற்களையும் தூள்களை
கொண்டும் யுனானி முறையில் கற்களை மருத்துவ முறையில் தேய்த்து எடுக்கப்பட்டு
சுத்தமான முறையில் சுர்மா தயாரிக்கப்படுகிறது இதுவே அன்றைய அரபியர்கள் பயன் படுத்திய
முதன்மை தரம் வாய்ந்த சுர்மா ஆகும்.
• இவ்வாறு தான் சுர்மா எனும் கண் மை
தோன்றியது.
சுர்மா இடுவதின்
சிறப்பு :
பார்வை சக்தி
அதிகரிக்கும் :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள் :
நீங்கள் உறங்க செல்வதற்கு முன் சுர்மாவை (கண்களுக்கு) இட்டுக்
கொள்ளுங்கள்! அது கண்பார்வையை அதிகரிக்கும்! மேலும் அது கண் இமைகளை வளரச்
செய்யும்! (நூல் : இப்னுமாஜா : 3496)
• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மூன்று முறை ஒவ்வொரு கண்ணிலும் சுர்மா இட்டுக்கொள்ளுவார்கள் என்று ஒரு ஹதீஸ்
திர்மிதி மற்றும் இப்னு மாஜாவில் இடம் பெற்று உள்ளது இது பலகீனமான ஹதீஸ் ஆகும்!
• நாம் நமக்கு தேவையான அளவுக்கு சுர்மா இட்டு
கொள்ளலாம்! எண்ணிக்கை கிடையாது!
இத்தா இருக்கும்
பெண் சுர்மா இட கூடாது :
• கணவனை இழந்து பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும் இந்த நாட்களில்
இத்தா இருக்கும் பெண் முற்றிலும் அழகாரங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் அதில் ஒன்று
சுர்மா இட்டு கொள்ள கூடாது! இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்து
உள்ளார்கள்! இத்தா இல்லாத பெண்கள் சுர்மா பயன் படுத்தி கொள்ளலாம் இதற்கு எந்த
தடையும் இஸ்லாத்தில் கிடையாது. (நூல் : முஸ்லிம் : 2975)
சுர்மா வாங்கும்
போது கவனமாக இருங்கள் :
• இந்த சுர்மா தூல் மற்றும் சிறிய கல் துண்டு
போன்றும் கிடைகிறது.
• இன்னும் சிலர் வியாபாரத்திற்கு மற்றும்
பணத்திற்காக சுர்மாவில் ரசாயணம் சேர்த்து விற்பனை செய்கிறார்கள் இதனால் நமக்கு
கண்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது! இதில் நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
• நல்ல மற்றும் தூய்மையான சுர்மாவை நாம் தேடி
நாம் பயன் படுத்த வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக