லேபிள்கள்

திங்கள், 16 அக்டோபர், 2023

ஜெர்மனி பக்கம் பார்வையை திருப்புங்கள்

 

குடும்ப அமைப்பு முறையிலும்,குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் உண்டாக்கிய குளறுபடிகள் காரணமாக ஜெர்மானிய சமூகத்தில் உழைக்கும் வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் ஐரோப்பாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக முன்னிலை வகிக்கும் ஜெர்மனி அந்த நிலையிலிருந்து பின்தங்கும் சூழல் உண்டாகிவிட்டது.
இதை சரி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 4 இலட்சம் திறமைசாலிகளை குடியமர்த்திக் கொள்ளும் வகையில் அரசின் குடியேற்ற விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
2030 க்குள் திறமையான பணியாளர்கள் 30 இலட்சம் பேர் தேவை என்பதை ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

உம்மத்தின் பிள்ளைகள் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்ப வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் முதன்மை இலக்காக இருந்த அரபு நாடுகளுக்கான பணியாளர்கள் தேவையில் இளநிலை முதுநிலை பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பொறியியல் மருத்துவம் துணை மருத்துவ படிப்புகள் கல்வித்துறை உள்ளிட்ட அநேக பிரிவுகளில் தகுதிமிக்கவர்களை வரவேற்க ஜெர்மனி தயாராக இருக்கிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஜெர்மனி மொழியை கொஞ்சம் கற்றுக் கொண்டு அங்கே குடும்பத்துடன் குடியேறுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

ஜெர்மனியில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் யாரவது முன்வந்து ஒரு அமைப்பை நிறுவி பெருகிவரும் இந்த வாய்ப்புகளை கண்டறிந்து இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.இது வசதி வாய்ப்புகளை பெற்றுள்ளவர்கள் மீதுள்ள சமூகக் கடமை.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர விருப்பமுள்ளவர்களின் எண்ணமும் இலக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே இங்கே பதிவிட விரும்புகிறேன்.

உலகின் வளர்ந்த நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு நுண்ணறிவையும் தொலைநோக்கு இலக்கையும் நமது இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

அதேநேரம் கல்வி மற்றும் சட்டத் துறை என்று வருகிற போது மட்டும் கூட்டு முயற்சியுடன் ஏகபோகமாக ஆக்கிரமிக்கும் (Monopoly) மனநிலையை தமிழக முஸ்லிம் இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவன் அதிகாரம் பெற்றால் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் பலனளிக்க வேண்டும் அதற்குப் பெயர் தான் கல்வி.
—————————-
Source : https://www.dw.com/…/germanys-workforce-in…/a-58974377
https://www.wsj.com/…/aging-germany-is-running-out-of…
https://economictimes.indiatimes.com/…/art…/88319621.cms

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts