லேபிள்கள்

சனி, 29 ஜூலை, 2023

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

 


உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள்.

அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45)

மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான அழகை எப்படி சுவைப்பது’ என்ற தொடரின் அடிப்படையில் கீழே சில ஆக்கத்திறன் ஊக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

 

1. அல்லாஹு அக்பர் சொல்லி, உங்களுக்குப் பின்னால் உள்ள உலகைத் தூக்கி எரியுங்கள்!

நாம் ஏன் தொழுகையை ‘அல்லாஹு அக்பர்’ என தொடங்குகிறோம்,  என என்றைக்காவது நீங்கள் சிந்தித்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லாஹு அக்பர் என்று சொல்லும்போது, யாருக்கு முன்னால் நிற்கிறீர்களோ, அவன், உங்களை அந்த நிமிடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், உறக்கம், உங்கள் குடும்பங்கள், நீங்கள் கொடுக்க வேண்டிய கடன்கள், உங்களுடைய கவலைகள், மற்ற எதையும் விட மிக, மிக உயர்ந்தவன் என்பதை உறுதி செய்கிறீர்கள் என்பதை உணருங்கள். அல்லாஹு அக்பர்’ என்று சொல்லும்போது அவையனைத்தையும் பின்னால் தூக்கிப்போடுவதாக கற்பனை செய்து கொள்ளூங்கள்.

 2. திரையைக் கற்பனை செய்து பாருங்கள்!

நீங்கள் தொழுகைக்காக நிற்கும்போது, ‘அல்லாஹ் அஸ்ஸவஜல்: ‘எனக்கும் என்னுடைய அடியானுக்கும் இடையே உள்ள திரையை விலக்குங்கள்.’என்று கட்டளையிடுகிறான்.  நீங்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்லி, தொழுகையைத் தொடங்கியவுடன், அல்லாஹ் தன்னுடைய அழகிய முகத்தை உங்கள் பக்கம் திருப்புகிறான்.  நீங்கள் திரும்பும் வரை அவன் திரும்புவதில்லை. உங்களுடைய எண்ணங்கள் அல்லது பார்வை நகர்ந்து செல்லும்போது, அவன் திரையை மீண்டும் போடும்படி கட்டளையிடுகிறான்.

உங்களுடைய உள்ளமும், உடலும் தொழுகையில் கவனத்துடன் இருக்க இந்த திரை விலக்கப்படுவதை நினைத்துக் கொள்ளுங்கள்.  இன்னும் உங்கள் எண்ணங்கள் வழுவிச்செல்கின்றனவா?  அதனால் தான் ‘அல்லாஹு அக்பர்’ மீண்டும், மீண்டும், நீங்கள் ஒவ்வொரு நிலையிலிருந்து மாறும்போதும் சொல்லப்படுகிறது. கவனம் சிதறாமல் இருப்பதற்கு அது ஒரு நினைவூட்டுதலாகவும், புதிய வாய்ப்பாகவும் இருக்கிறது.

 3. அரசனுக்கு சிரம்பணியுங்கள்!

ஒரு அரண்மனைக்குள் நுழையும்போது, அரசனின் பணியாளர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்? அவர்களுடைய பார்வை தாழ்ந்திருக்கும் பணிவான தோற்றத்தினால் இருக்கலாம். நீங்கள் சஜ்தா செய்யும் இடத்தில் உங்கள் பார்வையைப்பதித்து, இடது கையின் மேல் வலது கையை உங்கள் நெஞ்சின் மீது வைக்கும் சமயம் தான் உங்கள் அதிபதியை வணங்கும் நேரம்.

அல்லாஹ் அஸ்ஸவஜலுக்கு முன் நின்று, சுபஹானகல்லாஹும்ம வ பிஹம்திக, வ தபாரகஸ்முக வ த’அலா ஜத்துக வலா இலாஹ கைருக –

நீ எத்தனை குறைகளற்றவனாக இருக்கிறாய் யா அல்லாஹ், உன்னைப் புகழ்வதுடன், துதிக்கவும் செய்கிறேன், உன்னுடைய பெயர் மிகவும் அருள்வளம் மிக்கது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது.  உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவர் வேறு எவரும் இல்லை.’ என்று கூறுகிறீகள்.

தொழுகையில் நீங்கள் கவனமாக இருக்கும் பகுதிகள்  மட்டும் தான் ஒப்புக் கொள்ளப்படும் என்பதை உணருங்கள். நீங்கள் அல்லாஹ்வின் நினைவில் இருக்கும் இனிமையான நேரத்தைத் திருட ஷைத்தான் மிகச் சிறந்த முறையில் செயல்படுவான்.

 4. நீங்கள் ஓதும் சூரா ஃபாத்திஹாவின் ஒவ்வொரு வசனத்திற்கும் பதில் கூறப்படும் என்பதை உணருங்கள்!

இப்போது நீங்கள் சாராம்சத்திற்குள் நுழையத் தயாராக இருக்கிறீர்கள்: சூரா ஃபாத்திஹா, குர்’ஆனின் மகத்தான சூரா, அது இல்லாத தொழுகை maதள்ளுபடி செய்யப்படும்.  அல்லாஹ்வே நீங்கள் சூரா ஃபாத்திஹா ஓதும்போது பதில் சொல்கிறான் என்பதை அறியுங்கள். அதனால், இந்த வியக்கத்தக்க உரையாடலை உணர்ந்து, ஒவ்வொரு வசனத்துக்குப் பிறகும், ஒரு சிறு இடைவெளி விடுங்கள்.  தொழுகையின் இந்தப்பகுதியில் நீங்கள் எப்படி நழுவிச்செல்ல இயலும்?

 5. அல்லாஹ்வின் பெயரை தூய அன்புடன் உச்சரியுங்கள்!

இக்கணத்தில் இங்கே வந்து உங்களை நிற்கச் செய்தது எது? அல்லாஹ்வுடன் இருக்க வேண்டுமென்ற உங்களுடைய நேசமும், ஏக்கமும் தான். உங்களுக்கு பிடித்தவர்களைப் பார்க்கும்போது முதலில் என்ன சொல்வீர்கள்? அவர்களுடைய இனிமையான பெயரை.. ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரும்போது அது உங்கள் இதயத்தை வருடிக்கொடுப்பதை உணருங்கள்.

 6. “அகிலங்களின் அதிபதி” என்று சொல்லும்போது நிலையாக நில்லுங்கள்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  “அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது!” என்று கூறினார்கள்[முஸ்லிம்] அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும்போது உண்மையிலேயே நன்றியுணர்வோடு கூறுங்கள்.

ஒரு செடியின் இலையின் உயிரணுவைப் மிகப்பெரிதாகக் காண்பித்து, உடனே, கோள்களுக்கும், விண்மீன்களுக்கும் தாவும் ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? இப்போது, அந்த இலைக்கு பதிலாக, அதே மாதிரி அல்லாஹ்வுக்கு முன்னால் நீங்கள் நிற்பது போல நினைத்து, உங்களிலிருந்து ஆரம்பித்து, கேமராவை திருப்பி, பிரபஞ்சத்தைச் சுற்றி, நீங்கள் தொழுகைக்கு நிற்கும் இடத்திற்கு வாருங்கள்.

அடுத்த முறை நீங்கள் தொழும்போது, மேலே, வெகு தூரத்திலிருந்து நீங்களே உங்களைப் பார்ப்பதைப்போல் நினைத்து, ரப்பில் ஆலமீன் – அகிலங்களின் நாயன் என்ற சொற்றொடரின் பொருளை உணருங்கள்.

 7. மாலிக்கி யவ்முத்தீன் என்று ஓதுவதற்கு முன் அர்-ரஹ்மானிர் ரஹீம் பற்றி சிந்தியுங்கள்!

அல்லாஹ்வுடைய அழகிய பெயரான மாலிக்கி யவ்முத்தீனு(நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி)க்கு முன்னால், அவனுடைய பெயர்களான அர்-ரஹ்மான், அர்-ரஹீம் ஏன் வருகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நியாயத் தீர்ப்பு நாளன்று நம்மை எடை போடுவது, மிகவும் அன்பும், கருணையும் உடையவன் என்பதை நினைவில் வையுங்கள். அதனால், நீங்கள் அர்-ரஹ்மான், ரஹீம் என்று ஓதும்போது, சக்தியையும், ஆறுதலையும் உணருங்கள், அதன் பின், சற்று நிறுத்தி, அந்நாளின் பயங்கரத்தை உணர்ந்த்னு ‘மாலிக்கி யவ்முத்தீன்’ என்று கூறுங்கள்.

 8. உண்மையிலேயே, ‘இய்யாக ந’புது வ இய்யாக நஸ்த’ஈன்’ என்றால் என்ன பொருள் என்பதை அறியுங்கள்!

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். இது அல்லாஹ் மட்டுமே உங்கள் இலக்கு, மக்கள் அல்ல, என்பதை உங்களுக்கு நினைவூட்டட்டும். அதனால், நீங்கள் ஏன் அதைச் செய்தீர்கள், அதைச் செய்தீர்கள் என கேட்கப்பட்டால், உறுதியாக பதில் சொல்லலாம், அல்லாஹ்வுக்காக என்று!

ஸாலிகானவர்கள் இந்த ஆயத்தை ஓதும்போது மணிக்கணக்காக தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்கள் என்பதை அறிந்து உணருங்கள். ஒருவர் மக்காவில் தொழுது கொண்டிருக்கும்போது, அவருடைய நண்பர் தவாஃப் செய்யச் சென்று முடித்து விட்டு மீண்டும் அவரிடம் திரும்பி வந்த போது அது வரை அவர் அதே வசனத்திலேயே, அழுது கொண்டே, அதை மீண்டும், மீண்டும், சூரியன் மேலே வரும் வரை ஓதிக் கொண்டிருந்தார்.

 9. உங்களுடைய வாழ்வு அதைத் தான் சார்ந்திருக்கிறது என்பது போல் ‘ஆமீன்’ சொல்லுங்கள்!

நீங்கள் கேட்கக் கூடிய மிகவும் முழுமையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு துவா: இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் (எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக).

அல்லாஹ்விடம் கேட்பதற்கு பின்பற்ற வேண்டிய சரியான முறையைப் பார்த்தீர்கள் அல்லவா?  அவனைப் போற்றி, புகழந்து அதன் பின் தான் உங்கள் கோரிக்கையை (எங்களுக்கு நேர்வழி காட்டு) அவனிடம் வைக்கிறீர்கள்.

உங்களுடைய முழு வாழ்வும் இந்த துவாவில் தான் அடங்கியிருக்கிறது என்பதை. நீங்கள் சொல்லப்போகும் ‘ஆமீன்; உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும். ஆமீன் என்றால், என்னுடைய ‘அதிபதியே, (என்னுடைய துவாவுக்கு) எனக்குக் கொடு அல்லது பதிலளி’ என்று பொருள். உங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது போலவும், நீங்கள் மன்னிப்புக்காக கெஞ்சுவது போலவும் உணர்வோடு யாசியுங்கள்.

 10. உங்கள் அதிபதியுடன் ஒரு பிணைப்பை உணருங்கள்!

ஸுபஹான ரப்பியல் அஸீம் (என்னுடைய அதிபதி எத்தனை குறைகளற்றவன், மேலானவன்) என்று ருகூவில் சொல்லும்போது, என்னுடைய ரப் என்ற பொருள் உள்ள ‘ரப்பீ’ என்ற சுட்டுப்பெயரின் தனிக்கவனம் செலுத்துங்கள். அது உங்களுடைய பிணைப்பைக் கூடுதலாக்கும். அவன் என்னுடைய ரப்பு, அவனுடைய கவனிப்பில் என்னை வளர்த்தவன், என்னைப் பரிபாலனம் செய்து கொண்டிருப்பவன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடைய தோழர்களும், எத்தனை நேரம் தொழுகையில் நிற்கிறார்களோ, அத்தனை நேரம் குனிந்த நிலையிலும் இருப்பார்கள்.  ஒரு நபித்தோழர் சூரா ஃபாத்திஹா ஓதி, அதன் பின், சூரா அல் பகரா, ஆல இம்ரான், அன்னிஸா மற்றும் அல் மாயிதா ஓதும் வரை, அவர் பக்கத்தில் தொழுது கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகூவிலேயே இருந்தார்கள், என்று கூறினார்கள்.

 11. மகத்தான இறுதி: உங்களுடைய ஸுஜுது!

உங்களுடைய ஸுஜுது தான் உங்களைப் படைத்தவனுக்கு நீங்கள் முழுமையாக அடிபணிகிறீர்கள் என்பதன் இறுதியான அடையாளம்.  நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘ஒரு அடியான் தன் அதிபதியிடம் மிகவும் நெருங்கியிருக்கும் சமயம் அவன் ஸுஜுதில் இருக்கும்போது தான்.’  [முஸ்லிம்]

மேலும்:: ஸுஜுது செய்யுங்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்வதனால் அல்லாஹ் சுவனத்தில் அவனுடைய அந்தஸ்த்தை ஒரு படி உயர்த்தாமலும், அவனுடைய ஒரு பாவத்தை மன்னிக்காமலும் இருப்பதில்லை.’. [அஹமது] என்றும் கூறினார்கள். உங்களுடைய ஒவ்வொரு ஸுஜுதுக்கும் சுவனத்தில் உங்கள் நிலை உயர்வதையும், உங்களுடைய் பாவங்கள் உங்களை விட்டு கழிவதையும் கற்பனை செய்து பாருங்கள்.  உடலாலும், உள்ளத்தாலும் ஆன்மாவாலும் ஸுஜுது செய்து உலகிலேயே மிக இனிமையான உணர்வை சுவையுங்கள்!

 12. தஸ்லீம்(ஸலாம் சொல்வது)முக்கு முன்னால் துவா செய்யுங்கள்!

தஷஹுது (தொழுகையில் உட்கார்ந்து ஓதும் அத்திஹியாத், ஸலவாத்) ஓதிய பின் தஸ்லீமுக்கு (தொழுகை முடிவில் கூறும் ஸலாம்) முன்னால், பெரும்பாலோர் வீணாக்கும் ஒரு அருமையான சமயம் உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்தல்லாஹ் இப்னு மஸ்’ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தஷஹுதைக் கற்றுக் கொடுத்த போது, “ஸஸஅதன் பிறகு அவர் தான் விரும்பிய துவாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

தஷஹுத் சொல்லி விட்டு தஸ்லீம் சொல்வதற்கு அவசரப்படாமல் அதற்கு முன்னால், மனமுருகி குறைந்தபட்சம் மூன்று துவாக்களாவது கேட்டு இந்த கருவூலத்திலிருந்து பயன் பெறுங்கள்!

இவ்வாழ்வின் இனிமை அல்லாஹ்வை நினைவு கூருவதில் தான் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மறுமையின் இனிமை அவனைப் பார்ப்பதில் இருக்கிறது!

அடுத்த முறை நீங்கள் தொழுவதற்காகப் புறப்படும்போது, அவன் மேல் உள்ள நேசத்தினால், அவனுடைய தேடுதலால், அவனுடன் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தினால் போகிறீர்கள் என்பதை உணர்ந்து செல்லுங்கள். உங்கள் இதயம் ஆவலால் வேகமாக அடித்துக் கொள்வதை உணருங்கள்.  அப்போது தான், தொழுகை எதற்காக கடமையாக்கப்பட்டதோ, அந்த அக அமைதியையும், சுகத்தையும் அடையும் பாதையில் இருப்பீர்கள். [மிஷாரி அல் கர்ரஸ்]

நாம் அனைவரும் பயனடைய பிரார்த்திக்கிறேன்.

– – கவ்லா பிந்த் யஹ்யா – யு.கே.

https://www.nidur.info/2021/09/24/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-2/


புதன், 26 ஜூலை, 2023

கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…

 


குழந்தை வளர்ப்பின் தொடக்கம் ஒவ்வொரு மனிதனின் மணவாழ்வோடு தொடங்குகிறது. மணவாழ்வின் சரியான துணைதான் குழந்தை வளர்ப்பின் அடிப்படை. இந்த உலகில் சாந்தியும் – சமாதானமும், மனித நேயமும், அறநெறிகளும் தழைத்தோங்க காரணமாக இருப்பவர்கள் இளந்தலைமுறையினர்தான்.

அத்தகைய பண்பு சீலர்களை மண்ணுலகில் உருவாக்கி விண்ணுலக நாயகனான இறைவனின் பேரன்புக்கு ஆளாக்க பெரிதும் உழைப்பவர்கள் தாய்மார்கள். சமூகப் பெறுப்பும் – ஆன்மீக அருங்குணங்களும் கொண்ட பெண்களை தமது துணைவியராக்கிக் கொள்வதுதான் குழந்தை வளர்ப்பின் முதல் நிலையாகும்.

‘இறைவனுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை நீங்கள் ஒருபோதும் திருமணம் செய்யாதீர்கள்’ (அல்குர்ஆன் 2:221)

அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள், ‘நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக. நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நலன் உண்டாகும்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

இறைவன் பெண்களுக்கு கண்ணியமளிக்க அறிவுறுத்துவதோடு, அவர்களில் சிறந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள்தான் என்று அடையாளமும் காட்டுகின்றான். திருமண பந்தத்தின் மூலமாக இஸ்லாம் ஆண் பெண் மற்றம் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. அவர்களது பவ்தீக – ஆன்மீகத் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது.

”மேலும் அவர்கள்; ‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!’ என்று பிரார்த்தனை செய்வார்கள்.” (திருக்குர்ஆன் 25:74 )

மனைவியரிடம் இல்லற உறவு கொள்ளும் அந்த நேரத்தில்கூட, ‘இறைவா! ஷைத்தானின் தீங்கிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!’ (நூல்: முஸ்லிம்) என்று பிரார்த்திக்கும்படி சொல்கிறார்கள் அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

      உடலுறவின் போது ஓதும் துஆ:       

உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

====================================

بِسْمِ اللهِ

اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ

وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا

பிஸ்மில்லாஹி 

அல்லாஹும்ம

ஜன்னிப்னஷ்  ஷைத்தான

வ ஜன்னிபிஷ்   ஷைத்தான

மா ரஜக்தனா

====================================

[  திரும்பத்திரும்ப சொல்லிப்பாருங்கள், மனப்பாடமாகிவிடும்.

குறிப்பாக… புதுமணத்தம்பதிகளுக்கு அவசியம் சொல்லிக்கொடுங்கள்.]

பொருள்:      

அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு துவங்குகிறேன்.

யாஅல்லாஹ்!

எங்களை ஷைத்தானை விட்டும் விலக்கி வைப்பாயாக!

எங்களை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!

எங்களுக்கு நீ வழங்கிய குழந்தைகளை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!!

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தது முதல் மனிதனாக வளர்ந்து அவன் மரணிக்கும் வரை நல்லவனாக வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாக இருக்கும். எவ்வளவு சிரமப்பட்டேனும் தனது குழந்தையை நல்லவனாக வளர்த்து உருவாக்க வேண்டும் என்பததூன் ஒவ்வொரு பெற்றோரின் கனவும்கூட! அப்படியிருந்தும்கூட சிலபேர் தீயவர்களாக வளர்ந்துவிடுவதும் உண்டு.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதனை பெரிது படுத்துவதில்லை அல்லது அந்த நோக்கத்தில் சிந்திப்பதும் இல்லை.

 ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன!

கணவன் -மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் ஆணின் விந்து பெண்ணின் கற்பப்பைக்குள் நீந்திச் செல்லும்போது இறைவனால் அதற்கு ‘ரூஹு’ ஊதப்படுகிறது என்று அறிஞர், ஓ.எம் அப்துல் காதர் பாகவி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்த நினைவு.

ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள்! ‘ரூஹு’ ஊதப்படும் அவ்வேளையில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோரினால் பிறக்கின்ற குழந்தை அல்லாஹ்வின் அருளோடு எவ்வளவு சிறந்த குழந்தையாக பிறக்கும்! அது வாழ்ந்து மரணிக்கும் வரை அல்லாஹ்வின் அருள்பெற்ற மனிதாக  திகழும் என்பதில் என்ன சந்தேகம்?

அதைவிடுத்து உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் இறைவனை மறந்து விட்டு குழந்தை பிறந்தவுடன் அதனை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! ஆகவே குறைந்தபட்சம் கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் அவூது… பிஸ்மி… சொல்வதில் என்ன தயக்கம்!

சிலர் அறியாமையால் இப்படிகூட நினைக்கலாம், ‘அந்த நேரத்தில் அல்லாஹ்வையெல்லாம் அழைக்கலாமா – நினைக்கலாமா? அது அசிங்கமல்லவா?’ என்று! இங்குதான் நம்மில் பலர் மிகப்பெரிய தவறை மனதுக்குள் விதைக்கிறார்கள்.

உடலுறவு ஒரு அசிங்கமல்ல! அதுவும் ஒரு இபாதத்தே. ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதையும் இஸ்லாம் ஒரு இபாதத்தாகவே கருதுகிறது. அதன் பொருட்டே மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்கிறது இஸ்லாம்.

இதைப்பற்றி ஸஹாபாப் பெருமக்கள் ஆச்சர்யத்துடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, ‘ஆம்! நீங்கள் உங்கள் மனைவியருடன் உறவு கொள்வதும்; நன்மையான காரியமே! ஏனெனில் நீங்கள் உங்கள் மனைவியரல்லாத மற்ற பெண்ணிடம் உறவு கொள்வது பாவமெனும்போது உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது நன்மையான காரியம் தானே!’ எனும் கருத்துபட பதிலளிக்கிறார்கள். நன்மையான காரியம் என்று அறிவுருத்தப்படும்போது அதற்கும் நன்மை எழுதப்படும் என்பது சொல்லாமலே விளங்குமே!

ஆகவே ஒவ்வொரு தம்பதியரும் உடலுறவு கொள்ளுமுன் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடும் விதமாக குறைந்த பட்சம் ‘அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் – பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…’ என்று சொல்லிக்கொள்வோம். இறையருளால் ஸாலிஹான சந்ததிகளைப் பெறுவோம்.

அடுத்து, பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பெயரைச் சூட்டும்படி அறிவுறுத்தினார்கள் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது தந்தையார் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாகக் கூறுகிறார்கள்:

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது மகளுக்கு ஆஸியா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இதை அறிந்த நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெயரை மாற்றி ‘ஜமீலா – அழகானவள், அழகி’ என்று பெயர் சூட்டினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)

இறைவனுக்குப் பிடித்தமான பெயர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

o நல்ல பெயரை குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும்.

o தந்தையின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படல் வேண்டும்.

குழந்தை பிறந்ததும் அதன் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூறி பெயர் சூட்டுவது நபிவழியாகும் (நூல்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதீ)

‘கால்நடையை அறுத்து அகீகா கொடுங்கள் முடியை நீக்குங்கள்’ (நூல்: புகாரி) என்கிறார்கள் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அகீகா பற்றிக் கேடட்டபோது, ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் அறுக்கும்படி கூறினார்கள்.’ (நூல்: திர்மிதீ)

‘குழந்தை பிறந்த ஏழாவது நாளிலும், 14, 21 ஆகிய நாட்களிலும் அகீகா கொடுக்கலாம்’ (நூல்: தப்ரானீ) இதுவும் முடியாத பட்சத்தில், எந்த நாளிலும் கொடுக்கலாம். ஆனால் சிறப்பிற்குரியது மேற்குறிப்பிட்ட நாளில் கொடுப்பதேயாகும்.

‘ஃபாத்திமாவுக்கு குழந்தை ஹஸன் பிறந்தபோது, தலை முடியை மழித்து அதன் சம அளவுக்கு வெள்ளியை ஏழை எளியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள்.’ (நூல்: அஹ்மது, திர்மிதீ)

குழந்தை வளர்ப்பு என்பது தாய் – தந்தை இருவரும் குழுவாக இணைந்து செய்யும் பணியாகும். சில நேரங்களில் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வதால்ஸ அவளுக்குக் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தை அவள் தனது குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த முடியும்’

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்ஸ ‘முதல் குழந்தைக்கு அதிக உரிமை அளிப்பதா? இரண்டாவது குழந்தைக்கு அளிப்பதா? பெண் குழந்தை அதிக உரிமையுள்ளதா? ஆண்குழந்தைக்கா? – என்று பல்வேறு கேள்விகள் எழலாம். இதற்கு சுருக்கமான பதில் இதுதான்:

‘பெற்றோர் தமது எல்லாக் குழந்தைகளிடமும் சரிசமமாகவும், நீதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.’

‘இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் சரிசமமாக நடந்து கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

Posted by Abu Safiyah

www.nidur.info


ஞாயிறு, 23 ஜூலை, 2023

கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்…

 


உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.]

[ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது.

அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன!

கணவன்-மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் ஆணின் விந்து பெண்ணின் கற்பப்பைக்குள் நீந்திச் செல்கின்ற நேரத்தில் இறைவனால் அதற்கு ‘ரூஹு’ ஊதப்படுகிறது என்று அறிஞர், ஓ.எம் அப்துல் காதர் பாகவி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்த நினைவு.

ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள்! ‘ரூஹு’ ஊதப்படும் அவ்வேளையில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோரினால் பிறக்கின்ற குழந்தை அல்லாஹ்வின் அருளோடு எவ்வளவு சிறந்த குழந்தையாக பிறக்கும்! அது வாழ்ந்து மரணிக்கும் வரை அல்லாஹ்வின் அருள்பெற்ற மனிதனாக  திகழும் என்பதில் என்ன சந்தேகம்?

அதைவிடுத்து உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் இறைவனை மறந்து விட்டு குழந்தை பிறந்தவுடன் அதனை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது!

ஆகவே கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் குறைந்தபட்சம்,  அவூது… பிஸ்மி…  யாவது சொல்வதில் என்ன தயக்கம்!]


புதன், 19 ஜூலை, 2023

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் மூச்சுப்பயிற்சியின் பயன்கள் !!

 


முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.   

மூச்சு பயிற்சிக்கு  உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும். சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.

புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும். பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது  பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு  நிலைகள் உள்ளன. 

மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது  நாடி சுத்தமடையும்.

சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.

மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்

மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து  நிறுத்தும்.

தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும். பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும்  பயன்படுகிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-breathing-exercises-to-help-keep-the-body-healthy-121070600105_1.html



ஞாயிறு, 16 ஜூலை, 2023

முடி உதிர்வதை தடுக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!

 


கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம்  பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊறவைக்கவேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில்  தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும்  நரையாகிவிடும்.

இதனை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை  சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/natural-medical-tips-to-help-prevent-hair-loss-121070700051_1.html

வியாழன், 13 ஜூலை, 2023

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற மண்பாத்திர சமையலின் நன்மைகள்....!!

 


மண்பானைகளில் சமைக்கும்\ போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும்  மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. 

மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால்  உணவில் உள்ள  சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

மண்பாத்திரத்துல சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில் செய்கின்ற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட  கெட்டுப்போகாமல் இருக்கும். மத்த பாத்திரங்களில் வைக்கின்ற உணவுப் பொருள்கள், வெயியில் நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால் அது  நீர்த்துப் போகாது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை  தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.  

மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல்  வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும்.  இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். 

மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.  மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-earthenware-cooking-suitable-for-physical-health-121070700105_1.html

ஞாயிறு, 9 ஜூலை, 2023

கர்ப்பிணிகள் முதல் மூன்றுமாதங்கள் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன...?

கர்ப்பிணிகளுக்கு முதல் 3 மாதங்களும் மிக முக்கியமானவை. இந்தக் காலத்தில் காலையில் மசக்கையும், சோர்வை ஏற்படுத்தும் சோகையும் அதிகமாக இருக்கும். இந்த அறிகுறிகள் இயல்பானவை என்றாலும் அலட்சியப்படுத்தக்கூடாது.

மசக்கையின் காரணமாக உண்டாகிற வாந்தி, குமட்டல், தாகத்துக்கு இன்றைய நவீன யுகத்துப் பெண்கள் நாடுவது செயற்கை குளிர் பானங்கள். வாய்க்கு விறுவிறுவென ருசி கொடுத்தாலும், அத்தகைய செயற்கை பானங்களில் சேர்க்கப்படுகிற செயற்கை சர்க்கரை, கல்லீரலில் கொழுப்பாக மாறும். அடிக்கடி, அதிகம்  குடித்தால் வயிறு புண்ணாகும். வாந்தி அதிகமாகும். பசி கெட்டுப் போய், உடல் மெலியும். கர்ப்ப கால மஞ்சள் காமாலை வரலாம். கணையமும் சேர்ந்து  பாதிக்கப்பட்டு, நீரிழிவும் வரலாம். 

எனவே இது போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கை பழச்சாறுகளை சாப்பிடுவதே ஆரோக்கியமானது. இயற்கை பழச்சாறுகளில் உள்ள ஃப்ரக்டோஸ்' சர்க்கரையானது, பழங்களில் உள்ள நார்ச்சத்தின் உதவியால், சுலபமாக ரத்தத்தில் கலக்கும். 

மசக்சையைப் போக்கும் மாதுளை, வெல்லம், எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, நாரத்தை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

இரும்புச்சத்து குறைந்தால், பசி இருக்காது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம், மாதுளை, கேழ்வரகு, பெருநெல்லி, தக்காளி, எலுமிச்சை, முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்

https://tamil.webdunia.com/article/child-rearing-feature/what-are-the-things-to-avoid-during-the-first-three-months-of-pregnancy-121070800033_1.html


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts