லேபிள்கள்

வியாழன், 29 ஜூன், 2023

தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?


தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும். லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக  வேலை செய்யும்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சி முதலிடத்தில் உள்ளது.

லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல்  தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த  ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல  பாதுகாப்பு கிடைக்கும்.

லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-a-lychee-fruit-every-day-121071300105_1.html


--

செவ்வாய், 27 ஜூன், 2023

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை இன்றைய காலத்தில் மறந்துவிட்டனர். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும்  நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

இன்றைய காலத்தில் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான்  உடலுக்கு நல்லது.

அக்காலத்தில் நம் முன்னோர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.

புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் இந்த தண்ணீரில் இருப்பதால் புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத்  தடுக்கலாம்.

சாதம் வடித்த கஞ்சியில் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை வைத்தால் கால் வீக்கத்தை குறைக்கும். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக்  குடிப்பதால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் எடையை அதிகரிக்க  நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/so-many-benefits-of-drinking-satham-vaditha-kanchi-121071500050_1.html


--

திங்கள், 26 ஜூன், 2023

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்க சில குறிப்புகள் !!


தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக  எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது. பால், ஆர்கானிக் பாலாக இருப்பது நலம். மஞ்சள் தூள் கலந்த  உணவுகள் எல்லாமே உடலுக்கு நல்லதையே செய்யும்.
நாள்தோறும் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதன் விளைவு நோய்கள், சாதாரண சரும  பிரச்சனை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் ரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம். நோய்களுக்கும் இது வழி  வகுக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை  இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காயவைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-tips-to-increase-the-production-of-red-blood-cells-121072300086_1.html


--

வெள்ளி, 23 ஜூன், 2023

தலைவலியை போக்கும் கைவைத்திய முறை

அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள் மிளகு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

# மிளகில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அடங்கி உள்ளது.

# காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.

# நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல சிறந்த மருந்தாகும்.

# மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம், தலைவலி போன்றவை குணமாகும்.

# மிளகை சுட்டு அந்த புகையை நுகர்ந்தாலும் தலைவலி குணமாகும். அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.

# தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.

# மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை நீங்கும்.

# சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியை சாப்பிட்டுவர இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்

https://tamil.webdunia.com/article/home-remedies/handcrafted-method-of-relieving-headaches-121072300140_1.html


--

திங்கள், 19 ஜூன், 2023

பெண்கள் கர்ப்ப காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும்!


பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான அழகான பருவம் என்றால் அது தாய்மை அடையும் பருவம் தான். இளம் பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது எதை

செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு கூட பெரியவர்கள் அருகில் இல்லாத நிலை தான். உணவுகளில் அதிகம் கவனம் எடுத்துக்
கொள்ள வேண்டும், ஏனெனில் எந்த உணவு உண்டாலும் அது குழந்தையை சென்றடையும்.

செய்யக்கூடியவை

கர்ப்பிணிகள் அதிகளவு கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், பாலில் கால்சியம் நிறைந்துள்ளது, குறிப்பாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருக வேண்டும். பருப்பு, பீன்ஸ், பயறு வகை உணவுகள், இரும்புசத்து மிக்க உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் தண்ணீர்
அதிகமாக பருக வேண்டியிருக்கும்.

கருவில் இருக்கும் குழந்தையுடன் தாய் பேச வேண்டும், அப்படி பேசுவதால் குழந்தை அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

எதை செய்யக் கூடாது?

கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும். அதேவேளையில் கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம்.

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம், அதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலருக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்க கூடும். எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது

https://tamil.webdunia.com/article/home-remedies/women-should-avoid-this-during-pregnancy-121072400001_1.html


--

வெள்ளி, 16 ஜூன், 2023

ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனைக்கு சில குறிப்புகள் !!


குழந்தைப்பருவத்திலிருந்தே சீரற்ற உணவு பழக்கம் ஆரம்பித்துவிடுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது இல்லை.

இளம் வயதில்  பால் பொருட்கள், மில்க் சாக்லேட் சாப்பிடுவதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. 

துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கியக்  காரணம்.

தைராய்ட் உள்ளிட்ட ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, கருப்பையின் சுவரில் வரும் அடினோமையோசிஸ் பிரச்சனைகள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனை  வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

சித்த மருத்துவத்தின்படி, பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். பித்த அளவில் மாறுபாடோ, கபம் கூடுதலாக இருந்தாலோ, மாதவிலக்கு தள்ளிப்போகும். மேலும், உடலில் இருக்க வேண்டிய வளர்சிதை மாற்ற வேகம் சரியான அளவில் இல்லை என்றாலும், மாதவிலக்கில் பிரச்சனை ஏற்படும். எதனால்  இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 உடலில் கபம் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அசோக மரத்தின் (வீட்டு வாசலில் உயரமாக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்க மரத்தை, சிலர் அசோக  மரம் என்று தவறாக நினைப்பார்கள்) பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்துப் பருகுவதாலும் ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தலாம். 

 மருத்துவரின் பரிந்துரைப்படி சோற்றுக்கற்றாழை லேகியம் எடுத்துக்கொண்டாலும் இப்பிரச்சனை சீராகும். அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வெந்தயம்  சாப்பிடுவதும் நல்லது. அதைவிட, 'ஆடாதொடை கற்கம்' அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் குணப்படுத்தும்

https://tamil.webdunia.com/article/woman-special/some-tips-for-irregular-menstrual-problem-121072700105_1.html


--

செவ்வாய், 13 ஜூன், 2023

எல்லா வகை காளான்களையும் உண்ணக்கூடாதுஏன்...?

பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனவாய்ப் புண் போன்றவை குணமாகும்.

எளிதில்  செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது. காளான்களில் எல்லா வகை காளான்களையும் உண்ணக்கூடாது என்பதால் கவனம் தேவை.

காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படும். குறிப்பாக ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அந்தவகையில் இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக்  கருதப்படுகிறது.

ரத்த அழுத்தம் ஏற்படும்போது வெளிப்பகுதியில் சோடியம் அதிகரிக்கும்போது சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இதனால் இதயத்தின்  செயல்பாடு மாறும். இத்தகைய நிலையை சரிசெய்ய பொட்டாசியம் தேவைப்படும். காளானில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதயக் காக்கும். 100 கிராம்  காளானில் 447 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலங்களில் தானாக வளரும் காளானை சாப்பிடச் சுவையாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில்தான் காளான் முளைக்கும் என்பதால் அதுவரை காத்திருக்காமல் காளானை செயற்கையாக வளர்த்தும் சாப்பிடலாம்.

 100 கிராம் காளானில் புரதச் சத்து 35 சதவீதம் உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. வளர் பருவத்தில் இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

 காளானின் தாமிரச் சத்து இருப்பதால் அது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும். காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.  கருப்பைக் கோளாறு உள்ள பெண்களும் குழந்தையின்மைக் குறைபாடுகளால் அவதிப்படும் பெண்களும் காளான் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  தினமும் காளான் சூப் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் குணமாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/why-not-eat-all-kinds-of-mushrooms-121072800062_1.html


--

வெள்ளி, 9 ஜூன், 2023

வயிற்றில் புண் உள்ளவர்கள் அடிக்கடிபீட்ரூட் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது.

பீட்ரூட் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக ஹோமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அதாவது பீட்ரூட்டை குழம்பு, பொரியல் என்று  சாப்பிடுவதைக் காட்டிலும் அரைத்து ஜூஸ் எடுத்து பாலில் கலந்து குடித்தல் மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

பீட்ரூட்டை எந்த அளவில் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல் இந்த பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.

எந்த அளவு ஹீமோகுளோபின் அதிகரிக்கிறதோ அதே அளவு முடி உதிர்வும் இருக்காது. குறைந்ததை பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். மேலும் வயிற்றில் புண் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்ற காய் பீட்ரூட் ஆகும்.

பீட்ரூட் ஆனது பித்தப்பையும் சுத்திகரிப்பில் துவங்கி, மூலநோயை குணப்படுத்துதல் வரை அனைத்தையும் சரி செய்கிறது. மேலும் இது இரத்த சோகையை குணப்படுத்துவதாகவும் உள்ளது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-frequent-consumption-of-beetroot-by-people-with-stomach-ulcers-121072900057_1.html


--

செவ்வாய், 6 ஜூன், 2023

பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் பெற்றுத்தரும்பலன்கள் !!

தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள்  பெறுவீர்கள்.

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள  பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க  பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

 முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும்.  உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.

 பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும்  அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

 நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. அந்த வகையில் பாதங்களும் முக்கியதுவத்தை பெற்றுள்ளது. பாதங்களுக்கு நாம் தினமும்  எண்ணெய் மசாஜ் செய்வதினால் நம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-getting-oil-massage-for-feet-121072900081_1.html


--

சனி, 3 ஜூன், 2023

தண்டனைகளில் பாராபட்சம் காட்டாதீர்கள்


உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள்.

எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), 'எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள்.

மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, 'நிற்க,

உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்' என்று கூறினார்கள்.

பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது.

அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணந்தாள்.

ஆயிஷா(ரலி) கூறினார்:
அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.
ஸஹீஹ் புகாரி : 4304.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

குற்றவியல் தண்டனைகளின் போது ஏழைகளுக்கு கடுமையான தண்டனைகளையும். செல்வந்தர்களுக்கு தண்டனையில் சலுகைகளும் வழங்கப்படுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது. இன்று இந்த நடைமுறை பாடசாலைகள் முதல், அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டு சட்டங்களை மீறினால் அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், சாதாரண தரத்தில் வாழக்கூடிய ஒரு பொதுமகன் சட்டத்தை மீறிவிட்டால் கடுமையாக தண்டிக்கப்பட்டு மீடியாக்களினூடாக சீரழிக்கப்படுகிறான். நிச்சியமாக இப்பண்புடையோரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.

இன்திகாப் உமரீ

http://www.islamkalvi.com/?p=126589


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts