லேபிள்கள்

புதன், 29 மார்ச், 2023

அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?


பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். நேரந்தவறி சாப்பிடுவதாலும்  அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும் பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும்.

புகைப்பிடித்தல் மது அருந்துதல் மென் குளிர்பானம் பானங்களை அதிகமாகக் குடிப்பது. மோசமான சுற்று சூழல் கலப்படம் செய்யப்பட்ட உணவு அசுத்தமானக் குடிநீர் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது.

அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பது புளிப்பு மிகுந்த மசாலா கலந்த உணவு எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதனால் ஏற்படுகிறது.

கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதாலும்  ஏற்படும்.

தினமும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வயிற்றில் எரிச்சல் காரணமின்றிப் பற்களைக் கடித்தல்வயிறு வீங்குதல்உதட்டின் உள்பகுதி, நாக்கின் அடி பகுதியி, கடவாயின் உள்பகுதியில் புண்கள் உண்டாகும்.

மசாலா வகை உணவுகளை சாப்பிட்டா பின் ஏப்பம் வரும் போது தொண்டையில் தாங்க முடியாதஎரிச்சலை உண்டாக்கும். ஆரம்ப நிலை அல்சர் உள்ளவர்களுக்கு பசியின்மை உண்டாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-main-causes-of-ulcers-121061800028_1.html


--

ஞாயிறு, 26 மார்ச், 2023

யாருக்கெல்லாம் மூட்டு வலி பிரச்சனை இருக்கும் தெரியுமா...?


நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.

மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால்மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. 

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய்சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். 

சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டைகை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும்  தோள்பட்டை வலி. 

நீண்டநாள் பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எனவே, முதல்நிலையிலேயே பிரச்னையைக்  கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம்

https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/corona-daily-cases-drop-down-near-1-lakhs-121061800027_1.html


--

வியாழன், 23 மார்ச், 2023

தலை வலியை தீர்க்கும் வெந்நீர் வைத்தியம்

மனிதர்களுக்கு ஏற்படும் தலை வலியை சாதாரண வெந்நீர் குணமாக்கும் வல்லமை கொண்டது.

சிலருக்கு அடிக்கடி தலை வலி வரும். மேலும் சிலருக்கு எப்போது பார்த்தாலும் தலை வலிப்பதாக கூறுவார்கள். அவர்களுக்காகவே, இயற்கை வைத்தியம் கைகொடுத்துள்ளது.

தலைவலியை உணர்ந்தவுடன் 200 26, 2021மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்

https://tamil.webdunia.com/article/home-remedies/hot-water-treatment-for-headache-121061800140_1.html


--

ஞாயிறு, 19 மார்ச், 2023

அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ன...?


கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். மேலும் ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும்.

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த  உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. 

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து  பயன்படுத்தக் கூடாது.

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். 

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்துஃபுட் பாய்சனாக  மாறிவிடும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-keeping-maruthani-often-121061900031_1.html


--

வியாழன், 16 மார்ச், 2023

காய்ச்சல் நேரத்தில் தவிர்க்கவேண்டியவிஷயங்கள் என்ன...?

காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.

காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு  சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.

காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை  தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.

காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிகமுக்கியம்.

நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப்  பருகுவது நல்லதல்ல

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-things-to-avoid-during-the-fever-comes-121062300048_1.html


--

திங்கள், 13 மார்ச், 2023

தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன...?


தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.

இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும்  தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு  உருவெடுத்துள்ளது.

தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால்  ஏற்படும் பிரச்சனையை ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும்  குறைத்துவிடும்.

சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை  உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவேஇந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-foods-should-people-with-thyroid-avoid-121062300119_1.html


--

வியாழன், 9 மார்ச், 2023

தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்?


வெல்லம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் வெயில் நாட்களில் பானகம் என்ற பெயரில் வெல்லம் கலந்த நீர் குடிப்பார்கள்.

கல்லீரலை பாதுகாக்கும்: கல்லீரலின் வேலை உடலின் பிரதானமானது. அதுதான் உடலை சுத்தப்படுத்துதல், உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது. எனவே அந்த கல்லீரலை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்துக்கொள்ள வெல்லம் உதவுகிறது.

பொட்டாசியம், எல்க்ட்ரோலைட்டுகளும் வெல்லத்தில் இருப்பதால் இளநீர், ஸ்போட்ர்ஸ் ட்ரிங்குகளுக்கு இணையான ஆற்றலை உடலுக்கு அளிக்கும். உடல்  சுறுசுறுப்புக்காகவும் வெல்ல நீர் அருந்த வேண்டும்.

வெல்லம் இரும்பு சத்து நிறைந்ததால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

இரத்தத்தையும் சுத்திகரிப்புச் செய்வதால் நோய் பாதிப்புகளும் வராது. மேலும் இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அமிலத்தின் அளவை பராமரித்து  இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: இரும்பு சத்து நிறைந்த வெல்லம் துத்தநாகம் மற்றும் செலினியம் அதோடு நச்சு நீக்கியையும் கொண்டுள்ளதால் உடலை எந்த  நோயும் தீண்டாது.

வெல்லம் சாப்பிடுவதால் எண்டோர்ஃபின்கள் வெளியேறும். இது சுரப்பதால் வலிகள் ஏற்படுமாயின் அதைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும்  முடக்கு வாதம், மூட்டு வலி, வீக்கம் கொண்டோர்கள் தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-results-are-regularly-consuming-jaggery-121062300121_1.html


--

திங்கள், 6 மார்ச், 2023

வயிற்று போக்கினை ஏற்படுத்தும் உணவுகளும்தீர்வுகளும் !!

பலர் உணவுகளால் வயிற்றுப் போக்கிற்கு ஆளாகியிருப்பார்கள். உதாரணமாக, காரமான உணவுகள், கடலைப் பருப்பு போன்றவற்றால் கூட சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

பானங்களில் பால், காப்ஃபைன் போன்றவையும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். ஏன் மாசுப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் நச்சுக்கள் அதிகம் இருப்பதாலும், முறையற்ற குடலியக்கம் ஏற்பட்டு, அவை இறுதியில் வயிற்றுப் போக்கினை உண்டாக்குகின்றன.

வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வு என்றால், நீரில், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப்  போக்கினை உண்டாக்குகிறது. 

சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை  இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

முட்டைகோஸில் சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால், அவை வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் இவை கரையாத நார்ச்சத்து கொண்டிருப்பதால், அவை நேரடியாக குடலை அடைந்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.

பூண்டிலும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவையும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வயிற்றுப்  பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.

காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும் இடையூறை  ஏற்படுத்திவிடும்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/how-to-do-a-pedicure-naturally-at-home-121062500038_1.html


--

வெள்ளி, 3 மார்ச், 2023

தயிரை தினமும் உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும் ஏன் தெரியுமா...?


தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய்களுக்கான வாய்ப்பும்  குறைகிறது.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரில் முக்கியமான  வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத  விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது.

அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள்  வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காய வைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-medical-benefits-of-masikai-121062500057_1.html

--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts