லேபிள்கள்

வியாழன், 29 டிசம்பர், 2022

இத்தனை வகை TEA-ஆ...? வாய பிளக்காதீங்க மக்கா!!

இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பல விதமான தேநீர்களை போட்டுக்குடிக்கலாம். அவை பின்வருமாறு... 

செம்பருத்திப்பூ தேநீர்: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை  அளிக்கும்.

ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம்.   இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை தேநீர்: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

https://tamil.webdunia.com/article/home-remedies/wide-variety-of-herbal-teas-and-benefits-121031200076_1.html


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts