லேபிள்கள்

வியாழன், 3 நவம்பர், 2022

திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!

 

* நெருங்கிய உறவினர் மகன் திருமணத்திற்கு தர்மபுரி சென்றேன்;

* தங்கள் ஊரில், மஹல்லாகளில் தாங்கள் ஷாதி நிகழ்வு மஸ்ஜித்தில் தான் நடத்துவோம், மண்டபத்தில் நடத்துவதில்லை, விருந்துக்கு மட்டுமே மண்டபம் என்றார், பெண் வீட்டின் முக்கியஸ்தர்!

* மாப்பிள்ளை மற்றும் உறவுகளோடு மஸ்ஜித் உள் சென்று அமர்ந்தோம்,

* மணமகனின் தந்தையிடம், நிக்காஹ் புத்தகத்தில் மணமகன், மணமகள் பெயர்கள், தாய், தந்தை பெயர்கள் ஆதார் கார்டில் உள்ளது போல் எழுதப்பட்டுள்ளனவா? சரி
பார்த்தீர்களா வினவினேன்.....

* அதோ ஹஜ்ரத் டேபிள் மேல் பதிவேட்டை வைத்திருக்கிறார் எடுத்து வாசித்து பாருங்கள் என்றார்;

* பார்த்தேன், ஆதார் கார்டில் உள்ளது போலல்லாமல், வீட்டிற்குள் அழைக்கப்படும் பெயரையும் சேர்த்து எழுதி வைத்திருந்தனர்;
*
அது குறித்து கேட்டேன், அவரை அப்படித்தானே அழைப்போம் என்றார் நீண்ட தாடி வைத்த பெரியவர்....!

* 20 ஆண்டுகளாக பள்ளி வாசல் தலைமைப் பொறுப்பிலிருந்தேன், பல மஹல்லாகளில் நடைபெற்ற திருமணப் பதிவுகளுக்குச் சென்ற அனுபவம் திருமணப் பதிவேட்டை அழித்தும் திருத்தியும், தப்பும் தவறுமாகவே எழுதிக் கொண்டு வருவர்,

* சட்டத்தை கூறி, ஒரு எழுத்து தப்பாக இருந்தாலும் அலைய வேண்டும், அரசு ஆவணங்கள், கடவுச்சீட்டு எதுவும் பெறவியலாது
என்று எச்சரிக்கையூட்டி வருவேன்;

* திருமணப் பதிவுச் சட்டப்படி 90 நாட்களுக்குள் திருமணம் நடந்த மண்டபம் அருகிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்; மண்டப ரசீது பத்திரமாக வைக்க வேண்டும், பதிவின் போது அதுவே முக்கிய ஆவணம்!

* தற்காலப் பிள்ளைகள் எல்லோரும் படித்திருக்கின்றனர், எதிர் காலத்தில் தமக்கும், தம்முடைய பிள்ளைகளுக்கும் பெயர் ஆவணங்களைச் சரியாக வைத்திருக்க வேண்டும்,

* ஆதார் கார்டு,பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு அனைத்திலும் ஒன்று போன்று தம் பெயர், தந்தை பெயர் இருக்கின்றனவா..... சரிப்படுத்தி வைக்க வேண்டும்!
-
சோதுகுடியான் : 15/02/2021

http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=527


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts