லேபிள்கள்

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,

இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள்.
நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம்

١-رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏

"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" 2:201

٢- اللهم إني أسألُكَ الهُدَى والتُّقَى والعَفَافَ والغِنَى.

யா அல்லாஹ் !நல்வழியையும்,பயபக்தியையும்,
ஒழுக்கத்தையும்
தன்னிறைவையும் உன்னிடம் கேட்கிறேன்.

٣- اللهم مُصرِّفَ القلوبِ صَرِّفْ قلوبَنا على طاعتِك.

யா அல்லாஹ் !உள்ளங்களைப்புரட்டுபவனே !
உன்னுடைய வணக்க வழிபாடுகளின் பால்
எங்கள் உள்ளங்களைத் திருப்புவாயாக!

٤- اللهم إنِّي أعوذُ بك من جَهْدِ البلاء، ودَرَكِ الشقاء، وسوءِ القضاء، وشماتةِ الأعداء.

யா அல்லாஹ்! சோதனைகளின் கடுமை, துர்ப்பாக்கியம் வந்தடைதல், தீய விதி,
எதிரிகளின் இழிவுபடுத்தும் ஏச்சு ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காப்பாற்ற வேண்டுகிறேன்.

٥- اللهم أصلِحْ لي ديني الذي هو عِصْمَةُ أمري، وأصلِحْ لي دُنيايَ التي فيها مَعَاشي، وأصلِحْ لي آخِرَتي التي فيها مَعَادي، واجْعَلِ الحياةَ زيادةً لي في كلِّ خير، واجْعَلِ الموتَ راحةً لي من كلِّ شرّ.

யா அல்லாஹ்! எனது காரியங்களுக்கு பாதுகாவலாய் அமையும் எனது தீனை செம்மைப்படுத்துவாயாக.

எனது வாழ்வு கழியும் இந்த துன்யா வையும் எனக்கு சீர்படுத்தித் தருவாயாக.

நான் திரும்ப போகும் மறுமையையும் செம்மையாக்குவாயாக.

நற்காரியங்கள் செய்வதில் எனது வாழ்நாளை அதிகப்படுத்துவாயாக.

தீய காரியங்களை விடுவதில் மரணத்தை எனக்கு சுகமளிப்பாதாக ஆக்குவாயாக.

٦- اللهم آتِ نفسي تَقواها، وزَكِّها أنتَ خيرُ مَن زكاها، أنتَ وَلِيُّها ومَوْلاها.

யா அல்லாஹ்! என் ஆன்மாவிற்கு இறையச்சத்தைத் தருவாயாக.

٧- اللهم إنِّي أعوذُ بكَ مِن زَوَالِ نِعْمَتِك، وتَحَوُّل عافِيَتِك، وفُجَاءةِ نِقْمَتِك، وجَمِيعِ سَخَطِك.

யா அல்லாஹ்! உன் அருட்கொடை நீங்குதல், ஆரோக்கியம் மாறிவிடுதல்,
திடீர் வேதனை,உன்னுடைய அனைத்து கோபங்களை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

٨- اللهم اغْفِرْ لي خَطِيئتي، وجَهْلي، وإسْرافي في أمري، وما أنتَ أعلَمُ بِهِ مِنِّي، اللهم اغْفِرْ لي جِدِّي وهَزْلي، وخَطَئي وعَمْدي، وكلُّ ذلِكَ عِنْدي، اللهم اغْفِرْ لي ما قَدَّمْتُ وما أَخَّرْتُ، وما أَسْرَرْتُ وما أَعْلَنْتُ، وما أنتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أنتَ المُقَدِّمُ وأنتَ المُؤخِّر، وأنتَ على كلِّ شيءٍ قدير.

யா அல்லாஹ்!எனது தவறுகளையும்,அறியாமையையும்,
என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ள
எனது தீமைகளையும் மன்னிப்பாயாக!

யா அல்லாஹ்! நாடி செய்த பாவங்களையும் நாடாமலேயே செய்துவிட்ட பாவங்களையும் தவறுதலாக செய்த பாவங்களையும் திட்டமிட்டு செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக.

யா அல்லாஹ்! நான் முன்பின் செய்த, ரகசியமாய், பகிரங்கமாய் செய்த பாவங்களையும் என்னை விட நீ அதிகம் அறிந்த நான் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக.

٩- اللهم إنِّي أعوذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَع،
ومِنْ قلبٍ لا يَخْشَع، ومِنْ نَفْسٍ لا تَشْبَع،
ومِنْ دَعْوَةٍ لا يُسْتَجَابُ لها
யா அல்லாஹ்! பலனில்லாத கல்வி, நிறைவடையாத மனஇச்சையை
ஏற்றுக் கொள்ளப்படாத துஆ இவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
.
١٠- اللهم اكْفِنِي بحلالِكَ عَنْ حَرَامِك، وأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاك.

நீ எங்களுக்கு அனுமதிஅளித்ததிலிருந்து
அனுமதிஅளிக்காததை விட்டும் எனக்கு போதுமாக்குவாயாக.

உனது தனி பெரும் சிறப்பை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.

----- இந்த பலனுள்ள துஆக்கள் ஆதாரப்பூர்வமான நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டவை.

http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=538


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts