லேபிள்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2022

பார்வை திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் !!

 

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண்சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண்  புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

* பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை  பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாகக் குறையும். இதுபோன்ற கண் பயிற்சிகள், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

* தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

* தூங்கி எழுந்ததும், கண் ரப்பையைச் சுற்றிலும், புருவத்தின் கீழ்ப்பகுதி, புருவத்தின் மேல் பகுதி, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களில் ஆள்காட்டி விரலைவைத்து, மெதுவாக, மென்மையாக கடிகார முள் சுழற்சி பாதை, அதற்கு எதிரான பாதையில் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவை கண்களுக்குள் சீரான ரத்த ஓட்டத்தைப்  பாயச் செய்கிறது. கண்களின் வறட்சித் தன்மையைப் போக்குகிறது.

* வெளியில் செல்லும்போது கூலிங் கண்ணாடி அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/ways-to-help-increase-eyesight-121021700107_1.html

--

திங்கள், 26 செப்டம்பர், 2022

வீட்டில் பல்லி தொல்லையை போக்க சில டிப்ஸ் !!

 

வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் அது தொல்லையாகவே இருக்கும்.

பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும்  புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.

கோழி முட்டை ஓடு: உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள்நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.

 

வெங்காயம்: வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின்  தொந்தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியில் தெளித்தாலும் பல்லி வராது.

 பூண்டு: பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த  இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-tips-to-get-rid-of-lizard-harassment-at-home-121021600073_1.html


--

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

கைகளின் வறட்சியை போக்க சில அற்புத வழிகள் !!

சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும்.

ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

* மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.

குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

* கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்யை கை, கால்களுக்கு தடவி  வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/here-are-some-amazing-ways-to-get-rid-of-dry-hands-121021500077_1.html

--

திங்கள், 19 செப்டம்பர், 2022

உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் சப்ஜா விதைகள்...!!

 

சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான  சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும்  பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு 'பலூடா விதை' என்ற பெயரும்  உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ  வேண்டும்.

திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும்உடல் சூட்டை நீக்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sapja-seeds-that-bring-the-body-to-a-balanced-climate-121021300020_1.html


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts