லேபிள்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால்வலிக்கு சில மருத்துவகுறிப்புகள்...?


 

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களானது சற்று சிரமமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சத்தான  உணவுகளை சாப்பிடாலே போதுமானது.

முதல் மூன்று மாதங்களில் புரத சத்து அடங்கிய உணவை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் குழந்தை வலுவுடன் கருவில் வளர தொடங்குகிறான். பீன்ஸில்  இந்த புரத சத்து தேவையான அளவு இருக்கிறது. மேலும், இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர், முதலியவற்றிலும் புரத சத்து  காணப்படுகிறது.

முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு கால்சியம் சத்து என்பது தேவைப்படுகிறது. இதனால், பிறக்கும் உங்கள் குழந்தையின் செல்லக் கடி, சுகமாக இருக்க, அவன்  எலும்பும் வலுவானதாய் இருக்கிறது. பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இந்த கால்சியம் சத்து மிகுதியாக இருக்கிறது

செறிவூட்டப்பட்ட தானியம், ஜூஸ், சோயா, பிரெட் முதலியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. செறிவூட்டப்பட்ட உணவை வாங்கும்போது தரம் பார்த்துடாக்டரிடம் பரிந்துரை செய்து வாங்க வேண்டியது அவசியமாகும்.

கர்ப்பிணி பெண்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் வைட்டமின் சி குழந்தை பிறக்கும்போது உண்டாகும் சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும்இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் சேர்த்து தருகிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம்அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக  உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும் போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-medical-tips-for-leg-pain-during-pregnancy-121020100105_1.html

--

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வெறும்வயிற்றில் தண்ணீர் குடிப்பதால்இத்தனை பயன்களா...?

 

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும். மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்  விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் இதனால் உடலானது  சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்

நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர்  குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி  குறையும். மேலும் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற  கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்

உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.

தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. ஏனெனில் குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று  உபாதைகளை ஏற்படுத்தும் மேலும் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது தனது அழகை இழந்து விடும். தண்ணீரை குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/so-many-benefits-of-drinking-water-on-an-empty-stomach-121020100018_1.html


--

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

குழந்தைகளைகாய்ச்சல் நேரத்தில் பராமரிக்கஉதவும் வீட்டு வைத்தியகுறிப்புகள்...!!

 

குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் பதற்றம் நீங்கி தைரியமாக குழந்தையைப் பராமரிக்க முடியும். அவற்றைப் பற்றி விளக்கமாக இங்கு காணலாம்.

ஏசியில் குழந்தையை படுக்கவைக்க கூடாது. சாதாரண ஃபேன் காற்றில் படுக்க வைக்க வேண்டும். குழந்தைக்கு அதிகமான லேயர் கொண்ட உடைகள்  அணிந்திருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். ஒரே ஒரு துணியை அணிந்திருக்கும்படி செய்யுங்கள். காட்டன் துணியாக இருப்பது நல்லது. மெர்குரி உள்ள  தர்மாமீட்டரை குழந்தைக்கு பயன்படுத்த கூடாது. இது குழந்தைகளை பாதிக்கும்

0-5 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், 101-க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும். 6 மாதத்துக்கு  மேற்பட்ட குழந்தைகளுக்கு, 102-க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும். உடலிலும் ஈரத் துணியை  ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்கவேண்டும். சாதாரண தண்ணீரில்  குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

குழந்தைக்கு திரவ உணவுகளை கொடுத்திட வேண்டும். 0-6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அதிக அளவில் கொடுப்பது நல்லது. 6 மாதத்துக்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கு தாய்ப்பால், சுத்தமான தண்ணீர், பழச்சாறு கொடுக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால் சலைன் டிராப்ஸை குழந்தையின் மூக்கில்  போடலாம்.

வெங்காயத்தை அறிந்து அதைக் குழந்தையின் உள்ளங்காலில் 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த சிகிச்சையை செய்யலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பவுடரை குழந்தை குளிக்கும் இளஞ்சூடான தண்ணீர் டப்பில் போட்டு அந்த தண்ணீரில் குழந்தையை 10 நிமிடம் வைத்திருக்கலாம். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் அதனுடன் இஞ்சி சாறை 4 சொட்டு கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/home-remedies-to-help-children-care-for-fever-121020100036_1.html


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts