روى مسلم في صحيحه، في كتاب صفات المنافقين وأحكامهم
7212 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ عَنْ قَتَادَةَ عَنْ أَبِى نَضْرَةَ عَنْ قَيْسٍ قَالَ قُلْتُ لِعَمَّارٍ أَرَأَيْتُمْ صَنِيعَكُمْ هَذَا الَّذِى صَنَعْتُمْ فِى أَمْرِ عَلِىٍّ أَرَأْيًا رَأَيْتُمُوهُ أَوْ شَيْئًا عَهِدَهُ إِلَيْكُمْ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ مَا عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- شَيْئًا لَمْ يَعْهَدْهُ إِلَى النَّاسِ كَافَّةً وَلَكِنْ حُذَيْفَةُ أَخْبَرَنِى عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « فِى أَصْحَابِى اثْنَا عَشَرَ مُنَافِقًا فِيهِمْ ثَمَانِيَةٌ لاَ يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِى سَمِّ الْخِيَاطِ ثَمَانِيَةٌ مِنْهُمْ تَكْفِيكَهُمُ الدُّبَيْلَةُ وَأَرْبَعَةٌ ». لَمْ أَحْفَظْ مَا قَالَ شُعْبَةُ فِيهِمْ.
23319 عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي أَصْحَابِي اثْنَا عَشَرَ مُنَافِقًا، مِنْهُمْ ثَمَانِيَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என் தோழர்களில் பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள் அவர்களில் எட்டு நபர்கள் ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள். அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) நூல் முஸ்னத் அஹ்மத் 23319
இதே செய்தி இமாம் முஸ்லிம் அவர்களின் நூலிலும் இடம்பெற்றுள்ளது
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (அலீ (ரலி) அவர்களுடன் சேர்ந்து) போரிட்டுவருவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதை நீங்கள் சுயமான முடிவுப்படி மேற்கொள்கிறீர்களா? ஏனெனில், உங்களின் சுயமுடிவு தவறானதாகவும் இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம். அல்லது உங்களிடம் (அவ்வாறு போரிடுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்களா?" என்று கேட்டோம்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "மக்கள் அனைவரிடமும் கூறாத அறிவுரை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறவில்லை. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்…" என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அம்மார் (ரலி) அவர்கள் இதை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகரவுமாட்டார்கள். நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்" என்று கூறியதாக நான் கருதுகிறேன் என்று காணப்படுகிறது. 5362.
இந்த நபி மொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழர்களில் பன்னிரெண்டு பேர் நயவஞ்சகர்கள் என்று கூறியுள்ளார்கள் இதே செய்தி முஸ்னதல் பஸ்ஸார் என்ற ஹதீஸ் நூலில் 2788 எண்ணில் இடம் பெற்றுள்ளது. அதில் என் தோழர்கள் என்ற இடத்தில் என் சமுதாயத்தில் என்று வந்துள்ளது.
பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் யார்?
இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன் இங்கே தோழர்கள் என்று யாரைக் குறித்துக் கூறினார்கள் என்பதை சரியாக புரியவேண்டிய நிர்பந்தமுள்ளது. அரபியில் தோழர் என்ற சொல் பல அர்த்தத்தில் பயன்படுத்துவார்கள். தோழமைகொள்ளக்கூடிய தோழர் என்றும் பயணத்தோழன், அண்டை வீட்டுக்காரர் என்றும் ஒரே கொள்கையைப் பின்பற்றுபவர் என்ற பொருளிலும் அதை பயன்படுத்துவார்கள்.
அண்டை வீட்டுக்காரர் என்ற பொருளில்
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)
ஒரே கொள்கையைப்பின்பற்றுபவர்
அல்லாஹ் கூறுகிறான்
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம். (அல்குர்ஆன் 51:59)
முஃஜமுல் வஸீத் என்ற நூலில் ஆசிரியர் கூறினார் ஒருவரின் கருத்தையோ, வழிமுறையையோ பின்பற்றுவோருக்கு தோழர்கள் என்று சொல்லப்படும் இதன் அடிப்படையில் தான் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் தோழர்கள் மற்றும் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் தோழர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மொழி அடிப்படையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் தோழர்கள் என்று சொல்லப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்
(நம் நபியாகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே தவிர வேறில்லை.7:184
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தோழர்கள் என்று கூறியது நபித்தோழர்களைக் குறித்தா?
குர் ஆனையும் சுன்னாவையும் சரியாக புரிந்துகொள்ளாதவர்களும், சில பித்அத்வாதிகள் இதே வாசகத்தைக்கொண்டு தடாகம் தொடர்பான ஹதீஸை திரித்து ஸஹாபாக்களை வழிகேடர்களாக சித்தரிக்க முயன்றார்கள் என்பதை நாம் அறிவோம். அதே போன்று இந்த நபிமொழியை வைத்து ஷியாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், முஆவியா (ரலி) போன்ற ஸஹாபாக்களை நயவஞ்சகர்களாக சித்தரிக்க முயன்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிக்காட்டிய பன்னிரெண்டு நபர்கள் அச்சமூகத்தில் அறியப்பட்டவர்களாக இருந்தார்கள். பனு அம்ரு பின் அவ்ஃப் குலத்தார்கள் குபா மஸ்ஜிதை அமைத்து அல்லாஹ்வின் தூதரிடம் அங்கே வரும்படி வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்து தொழுகை நடத்தினார்கள். இதைக் கண்ட அவர்களின் சகோதர குலத்தைச்சார்ந்த பனூ கனமு இப்னு அவ்ஃப் கூட்டத்தார்கள் நாமும் ஒரு மஸ்ஜிதை எழுப்பி அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தொழ வைக்குமாறு வேண்டிக்கொள்ளலாம் என்றும் அபூஆமிர் சிரியாவிலிருந்து திரும்பி வந்ததும் அங்கே தொழுவார் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரை அழைக்கச்சென்ற போது அவர்கள் தபூக் போருக்காக புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் முடித்து வரும்போது தொழவைக்கிறேன் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து திரும்பிவருவதற்குள் அதனை கட்டிமுடித்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தொழுகையும் நிறைவேற்றியிருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள் அவர்களை நோக்கி புறப்படும் வேளையில் மஸ்ஜிதுல் ளிரார் தொடர்பான வசனம் இறங்கியது. அப்போது நபி அவர்கள் மாலிக் பின் துஹ்ஷும், மஅன் பின் அதீ, ஆமிர் பின் ஸகன் இன்னும் வஹஷி ஆகியோர்களை அழைத்து அநியாயக்காரர்களால் உறுவாக்கப்பட்ட இந்த மஸ்ஜிதை நோக்கி செல்லுங்கள் அதை இடித்து எரித்துவிடுங்கள் என்று கூறினார்கள். அவர்களும் விரைவாக சென்று அதை இடித்து எறித்து சாம்பலாக்கினார்கள்.
அதை கட்டுவதில் பங்கெடுத்த பன்னிரண்டு நபர்கள் 1)கிதாம் பின் ஹாலித் இவனது வீட்டிற்கு அருகில் தான் இந்த மஸ்ஜிதின் கட்டிடம் இருந்தது. 2)ஸஃலபா பின் ஹாதிப், 3)முஅத்திப் பின் குஷைர், 4)அபூ ஹபீபா பின் அஸ்அர், 5)அப்பாது பின் ஹுனைஃப் இவன் ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரளி)அவர்களின் சகோதரர் ஆவார். 6)ஜாரியத் பின் ஆமிர் இவனுடைய இரண்டு பிள்ளைகள். 7)முஜம்மிஃ, இன்னும் 8) ஸைத், 9)நப்தல் பின் அல் ஹாரிஸ்,10)பஹ்ரஜ்,11)பஜாத் பின் உஸ்மான் 12) வதீஅத் பின் ஸாபித். அல்பிதாயா வந்நிஹாயா 5/22
இஸ்லாத்தின் விரோதிகளான ஷியாக்கள், நயவஞ்சகர்களின் ஹதீஸை மேற்கோள் காட்டி ஸஹாபாக்களில் அபூபக்கர், உமர், உஸ்மான், முஆவியா (ரலி) போன்ற நபித்தோழர்கள் தான் அந்நயவஞ்சகர்கள் -நஊதுபில்லாஹ்- என்று வாதிடுகிறார்கள் இந்த ஹதீஸே அவர்களின் பொய்யை தோலுரித்து காட்டுகிறது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ..
நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்"
இதற்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய வேறு ஒரு செய்தியைப் பாருங்கள்
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ: إِنِّي لَآخِذٌ بِزِمَامِ نَاقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقُودُهُ، وَعَمَّارٌ يَسُوقُ بِهِ، أَوْ عَمَّارٌ يَقُودَهُ، وَأَنَا أَسُوقُ بِهِ، إِذِ اسْتَقْبَلَنَا اثْنَا عَشَرَ رَجُلًا مُتَلَثِّمِينَ قَالَ: «هَؤُلَاءِ الْمُنَافِقُونَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» . قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا تَبْعَثُ إِلَى كُلِّ رَجُلٍ مِنْهُمْ فَتَقْتُلَهُ، فَقَالَ: «أَكْرَهُ أَنْ يَتَحَدَّثَ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ، وَعَسَى اللَّهُ أَنْ يَكْفِيَنهُمْ بِالدُّبَيْلَةِ» ، قُلْنَا: وَمَا الدُّبَيْلَةُ؟ قَالَ: «شِهَابٌ مِنْ نَارٍ يُوضَعُ عَلَى نِيَاطِ قَلْبِ أَحَدِهِمْ فَيَقْتُلُهُ»
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தை பிடித்து அதை ஓட்டிச்செல்வதற்காக அம்மாரும் (ரலி) அதை இழுத்துக்கொண்டிருந்தார். பொய்யாக நடித்துக்கொண்டிருந்த பன்னிரண்டு நபர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மறுமை நாள் வரை இவர்கள் நயவஞ்சகர்களாக இருப்பவர்கள் என்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்று விட ஆளை அனுப்பலாம் அல்லவா என்று நாங்கள் கேட்டோம். அதற்கு முஹம்மத் தம் தோழர்களையே கொலைசெய்கிறார் என்று மக்கள் பேசுவதை நான் வெறுக்கிறேன் என்று கூறி அல்லாஹ் அவர்களுக்கு துபைலாவையே போதுமாக்கிக்கொள்வான் என்றார்கள். அதற்கு நாங்கள் துபைலா என்றால் என்ன? என்று கேட்டோம் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒரு நெருப்பு அவர்களின் உள்ளத்தின் நடுவில் வைக்கப்படும் அது அவர்களை கொன்றுவிடும் என்று கூறினார்கள். நூல் முஃஜமுல் அவ்ஸத், 8100
ஷியாக்கள் கூறுவதுபோன்று அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் முஆவியா (ரலி) ஆகியோர்கள் நயவஞ்சகர்களின் பெரும் தலைவர்களாக இருந்திருந்தால் அவர்கள் துபைலாவின் மூலம் கொல்லப்பட்டிருக்கவேண்டும்.
நபி அவர்களின் மரணத்திற்கு பிறகு நயவஞ்சகர்களில் சொற்பமானவர்களைத் தவிர வேறு யாரும் உயிருடன் இருக்கவில்லை அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்ற அனைவரும் துபைலாவின் மூலம் மரணிப்பார்கள் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார்.
(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், 'இந்த இறைவசனத்தில் (திருக்குர்ஆன் 09:12) குறிபிட்டப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், 'முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர் தரமான பொருள்களைத் திருடிச் செல்கிற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே' என்று கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி), 'அவர்கள் பாவிகளே! (இறைமறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவிற்கு முதியவரென்றால்) குளிர்ந்த நீரைப் பருகினால் கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது' என்று கூறினார்கள். நூல் ஸஹீஹுல் புஹாரி 4658
அல்லாஹ் கூறுகிறான்
நீர் அவர்களைக் காணும்போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? 63:4
"அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!" என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர். (அல்குர்ஆன் 4:61)
நபியே! (ஏகஇறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 9:73)
(ஏகஇறைவனை) மறுப்போருக்கும் நயவஞ்சகருக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் தொல்லைகளை அலட்சியப்படுத்துவீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 33:48)
வழிகேடர்கள் ஹதீஸ்களை அணுகும் முறையும் நேர்வழியில் இருப்பவர்கள் ஹதீஸை அணுகும் முறையையும் இதன் மூலம் அறிந்து கொண்டோம். இதே போன்று தான் எல்ல செய்திகளையும் இவர்கள் அணுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுவோம். வழிகேடர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்போம்
http://www.islamkalvi.com/?p=125735
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக