சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம்.
இஞ்சி அஜீரணத்தைப் போக்கும். சளியை வெளியேற்றும் கொழுப்பைக் குறைக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால் மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும்.
எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும். உப்பின் அளவு அதிகமானால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டு. சிறு நீராகக் குழாய் பிரச்சினை ஏற்படும். உயிர் விந்தணுக்களைக் குறைத்துவிடும்.
எலுமிச்சை கொழுப்பை குறைப்பது முதல் ஏராளமான நன்மைகளைத் தரும் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் பலவீனப்படும்.
டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் உண்டாகும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை ஆகியவை உண்டாகும். ஆண்களுக்கு விந்துவின் வீரியம் குறையும்.
காபி அதிகமாக குடித்தால் பித்தம் அதிகரிக்கும் அதன் மூலம் கை, கால் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கண்ணெரிச்சல் அதிகரிக்கும். மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும் அதனால் உடலில் சளித்தொல்லையும் அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்து நீர்த்துப் போகும். விந்து கெடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும். ஆனால் முற்றிய முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.
தேங்காயை அளவோடு சாப்பிட்டால் அது ஆரோக்கியம். அளவுக்கு அதிகமானால் சளி, பித்தம், வரட்டு இருமல், நெஞ்சு கரித்தல் ஆகியவை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக