லேபிள்கள்

செவ்வாய், 29 மார்ச், 2022

சில உணவுகளைஅதிகமாக எடுத்துக்கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகள் !!

சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம்.

இஞ்சி அஜீரணத்தைப் போக்கும். சளியை வெளியேற்றும் கொழுப்பைக் குறைக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால்  மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும்.

எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும். உப்பின் அளவு அதிகமானால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டு. சிறு நீராகக் குழாய் பிரச்சினை ஏற்படும். உயிர் விந்தணுக்களைக் குறைத்துவிடும்.

எலுமிச்சை கொழுப்பை குறைப்பது முதல் ஏராளமான நன்மைகளைத் தரும் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் பலவீனப்படும். 
டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் உண்டாகும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை ஆகியவை உண்டாகும். ஆண்களுக்கு விந்துவின் வீரியம் குறையும்.

காபி அதிகமாக குடித்தால் பித்தம் அதிகரிக்கும் அதன் மூலம் கை, கால் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கண்ணெரிச்சல் அதிகரிக்கும். மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும் அதனால் உடலில் சளித்தொல்லையும் அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்து நீர்த்துப் போகும். விந்து கெடும் என்பதைத்  தெரிந்து கொள்ளுங்கள்.

முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து பாலில்  கலந்து குடிக்க உடல் வலுப்பெறும். ஆனால் முற்றிய முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.

தேங்காயை அளவோடு சாப்பிட்டால் அது ஆரோக்கியம். அளவுக்கு அதிகமானால் சளி, பித்தம், வரட்டு இருமல், நெஞ்சு கரித்தல் ஆகியவை உண்டாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/problems-caused-by-taking-too-much-of-certain-foods-120102000023_1.html


--

சனி, 26 மார்ச், 2022

சிறுநீரை வெகுநேரம்அடக்கி வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் !!

சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் அதன் சதைகளை விரிவுபடுத்தலாம். இந்த மாற்றங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. 

சிறுநீரை அடக்கி வைப்பதால் பல சூழ்நிலைகளில், சிறுநீரை வெளியிடுவதும் பிளேடருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல் நம்மை அறுவை சிகிச்சைக்கு நம்மை கொண்டுச்செல்லலாம்.

சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீரகங்களின் அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் வடுக்கள் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் கடுமையான சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் சிறுநீரைத் அடுக்குவதால் அது சிறுநீரக கல் ஏற்பட காரணமாக அமையும்.

சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும், இது வலியை ஏற்படுத்தும். இந்த வலி சிறுநீரகத்தையும் அடையலாம். இந்த சூழ்நிலையில், ஒருவர் சிறுநீரை கழித்த பின்னர் வலியிலிருந்து நிவாரணம் பெறுவார். இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற்றாலும் எதிர்காலத்தில் கடுமையான  சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. உண்மையில், கழிப்பறை சுத்தமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில்  நாம் அங்கு சிறுநீர் கழிக்க போகும்போது, பாக்டீரியா வளர வாய்ப்பு கிடைக்கக்கூடும், இது சிறுநீக பை வரையிலும் பாதிக்கலாம். இந்த தொற்று பல தீவிர நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-problems-with-urinary-retention-120102200024_1.html


--

புதன், 23 மார்ச், 2022

கல் உப்பு கலந்தநீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. 

சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் குளியலுக்கு பயன்படுத்தும் உப்பானது எந்த கலப்படமுமின்றி நேரடியாக ஆவியாதலிலிருந்து பெறப்படுகிறது. ஆவியாதல் மூலம் நேரடியாகப் பெறப்படும் இந்த உப்பில் விட்டமின் தாதுப்பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.

இந்த கடல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது. இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். 

சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவேண்டும். நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் குளிக்கும் போது ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறும். தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும்.

இந்த கடல் உப்பு குளியல் சிலருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்சனை வந்தால் தவிர்த்து  விடுங்கள். அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு, தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-bathing-in-crystal-salt-water-120102300069_1.html


--

சனி, 19 மார்ச், 2022

சிறுநீரக கற்களைவெளியேற்ற உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. 

பொதுவாக உணவு  செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில நேரங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில்  வெளியேறுவதற்குச் சிரமப்படும்.

அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறைகள், சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும்  குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். அடிவயிற்றில் வலி ஏற்பட்டு பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக்கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும்.

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில்  செல்லாமல் இருப்பது நல்லது.

தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர்  அருந்துவதும் திரவ உணவுகளை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் சுலபமாகக் கரைந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/natural-medical-tips-to-help-get-rid-of-kidney-stones-120102700016_1.html


--

புதன், 16 மார்ச், 2022

கைகளை பாதுகாக்கசெய்யப்படும் பராமரிப்பு முறைகள் என்ன...?

முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். 

குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது  நல்லது.

கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.

அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன்  தடவ வேண்டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால்,  விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால்,  இவை, தடுக்கப்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-care-methods-used-to-protect-the-hands-120103000041_1.html


--

ஞாயிறு, 13 மார்ச், 2022

குளிர் காலத்தில்பயன்தரும் சில அழகு குறிப்புகள் !!

குளிர் காலத்தில் முதலில் சருமம்தான் வறட்சியாகும். அவற்றை கட்டுபடுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில்  உடலில் உள்ள சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம். 

ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது உங்கள் தோலின் ஈரப்பதத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது. மேலும் நீர் காய்கறிகள் மற்றும்  பழங்களை சாப்பிடுவது நல்லது.

குளிர் காலத்தில் பாதாம் மற்றும் நெய் அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் சருமம் பொழிவடையும். Flaxseeds என்ற ஆளி விதைகளை உண்பது உடலுக்கும் சருமத்துக்கும் நல்லது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 'மலச்சிக்கல்' நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத் தடுக்கும்,  முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.

குளிர் காலத்தில் உதடுகள் வறட்சியடைந்து உலர்ந்து தோற்றமளிக்கும். உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும். இதைத் தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்.

வீட்டில் எளிமையாகக் கிடைக்ககூடிய தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரபதமாக வைத்திருக்கலாம்.

குளிர் காலத்தில் தலை குளித்தால் முடியை நன்றாக உலர வைக்க வேண்டும். முடியை உலர வைக்க டிரையர் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்வது நல்லது. ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/in-the-winter-some-useful-beauty-tips-120110200050_1.html


--

புதன், 9 மார்ச், 2022

பிராண முத்திரைசெய்வதால் உண்டாகும் நன்மைகள் !!

நம் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போன்ற உணர்வை இந்தப் பிராண முத்திரை ஏற்படுத்தும்.

பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன்  அதிகரிக்கும்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது  நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

காது நன்கு கேட்க: காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை: மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

https://tamil.webdunia.com/article/yoga-asanas-with-images/benefits-of-prana-mudra-120110300071_1.html


--

ஞாயிறு, 6 மார்ச், 2022

பித்தப்பையில்தோன்றும் கற்களை கரைக்க உதவும் அற்புத வழிகள் !!

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். 

இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை. சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15  பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. 

நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு  திரவக் கலவை.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், 'பித்த நீர் தேவை' என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே  பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள  கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை  அருந்தவும். 

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை  கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. 

நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/amazing-ways-to-help-dissolve-gallstones-120110400054_1.html


--

வியாழன், 3 மார்ச், 2022

பற்களை வெள்ளையாகவைத்திருக்க சில இயற்கை குறிப்புகள் !!

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம். 

இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெகு் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

தினமும் காலை பிறும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இரண்டுக்கவும், நாக்கில் உள்ள அழுக்குகளும் முக்கிய காரணமாகும். ஆகவே தவறாமல் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட் போன்றவற்றை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள்  படிவதைத் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆசிட்டுகளானது பற்களில் தங்கியுள்ள கறைகளை நீக்குவதோடு, வாயில் பாக்டீரியாக்கள் இருக்கும், அவற்றையும் அழித்து வெளியேற்றிவிடும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-natural-tips-to-keep-teeth-white-120110500040_1.html


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts