லேபிள்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

காய்ச்சல் வந்ததும்என்னவெல்லாம் செய்யவேண்டும் செய்யக்கூடாது...?

காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருகக்கூடாது.

காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில்  தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.

காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.

மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிகமுக்கியம்.

நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப்  பருகுவது நல்லதல்ல.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-not-to-do-when-the-fever-comes-120110600069_1.html


--

சனி, 26 பிப்ரவரி, 2022

மீன் எண்ணெய்மாத்திரைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீன் எண்ணெய்யை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

மீன் எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு  சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

முக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும்  நன்கு இருக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-fish-oil-tablets-120111000043_1.html


--

புதன், 23 பிப்ரவரி, 2022

கருப்பட்டில்போலி எது என்பதை எவ்வாறு கண்டறிவது...?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது.

கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.

முழுக் கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது தான் உண்மையானது.

நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
 

ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக்  கேட்டால் அது போலி. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு  போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலியானது என கண்டுபிடிக்கலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-find-out-what-is-fake-karupatti-120111000092_1.html


--

சனி, 19 பிப்ரவரி, 2022

அழகை பேணிக்காப்பதில்முக்கிய பங்கு வகிக்கும் கடலை மாவு !!

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.

கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும்.

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும். 

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/gram-flour-plays-an-important-role-in-preserving-beauty-120111300067_1.html


--

புதன், 16 பிப்ரவரி, 2022

மண்பாண்டத்தைஉபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் !!

மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும்,  தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக  இருக்கிறது.

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால்,  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக்  காரணம்.

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில்  அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள்  மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை.

பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-using-mudpots-120112000052_1.html


--

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

எலும்புகள் வலுவிழப்பதற்கானகாரணங்கள் என்ன தெரியுமா...?

உடல் பருமன் பல வித உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளில் ஒன்று தான் எலும்புகளுக்கு ஏற்படும் ஆபத்து. உடலில் உள்ள அதிகமான எடை கால்களின் மீது தான் தாங்கி நிற்கும். இதனால் மூட்டுக்களில் பாதிப்பு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழக்கும். 

எலும்புகளில் ஏதாவது பிரச்சனை என்றால் எழுந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போது ஒரு வித வலியை ஏற்படுத்தும். அவை கால்சியம் குறைபாடு உள்ளது  என அர்த்தமாகும். 

தைராய்டு கோளாறுக்காக நாம் உண்ணும் மருந்துகளின் பக்க விளைவை ஏற்படுத்தும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்து விடும். அதனால் தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டால், 5 மணி நேரத்திற்கு பிறகு கால்சியம் மாத்திரையையும் சாப்பிடுவது நல்லது.

உப்பு அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், அதனை குறைத்திடுங்கள். இல்லையென்றால் எலும்புகள் வலுவிழக்கும்.

அன்றாட உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதால் எலும்புகளை காத்திடலாம். கால்சியம் கலந்த மாத்திரை மருந்துகளை விட இவை  சிறப்பாக செயல்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-causes-of-weak-bones-120112400075_1.html


--

புதன், 9 பிப்ரவரி, 2022

பனங்கிழங்குசாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலுகிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக தோசை செய்தும் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும். இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெறும். சர்க்கரை பாதிப்பு  உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.

வேக வைக்காத பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி  சாப்பிடலாம். இந்த மாவை நீரில் கரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்து, கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா  செய்தும் சாப்பிடலாம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-benefits-of-eating-panang-kizhangu-120112400037_1.html


--

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

வாயு பிரச்சனைக்குஅற்புத மருந்தாகும் பெருங்காயம் !!

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில்  பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.

உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால்  அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல்  பிரச்சனை தீரும். 

வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

பிரசவம் ஆன தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு பின்னர் சில நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை  வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் உதிரபோக்கு பாதிப்புகள் படிப்படியாக  குறையும்.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை  அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/asafoetida-is-a-wonderful-medicine-for-gas-problem-120112500025_1.html


--

வியாழன், 3 பிப்ரவரி, 2022

பற்களை பாதுகாக்கும்வழிமுறைகளும் சில டிப்ஸ்களும்...!!

எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறுவயது முதலே  உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படும்.

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. 

தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்  பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு  கொப்பளிக்க வேண்டும்.

இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/ways-to-protect-teeth-and-some-tips-120112600056_1.html


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts