லேபிள்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிறந்ததைத் தெரிவு செய்ய இஸ்திகாராதொழுகை

உங்களில் ஒருவருக்கு இரண்டு விடயங்களில் எதைத் தெரிவு செய்வது? எது நன்மையான காரியம் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டால் இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை தான் நீங்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு கீழ்வரும் துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக குறி பார்பது, சீட்டுக் குளுக்கிப் போடுவது, போன்ற காரியங்கள் தவறான வழிமுறைகளாகும்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق

سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்" (அல்குர்-ஆன் 5:3)

இஸ்திகாரா தொழுகை முறை:

1) அழகிய முறையில் வுளூ செய்து இஸ்திகாரா நிய்யத்துடன் கடமையில்லாத இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டும்.

2) இத்தொழுகை நமது வழமையான தொழுகைகளைப் போன்றது.

3) தேவை ஏற்படக்கூடிய நேரத்தில் தொழ முடியும். அதற்கென குறிப்பிடட்பட்ட நேரமில்லை. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களை (இரவின் கடைசிப்பகுதி/அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம்) தெரிவு செய்வது நல்லது.

4) தூங்கப் போகமுன் இஸ்திகாரா தொழுதால் நாம் தெரிவு செய்ய வேண்டிய விடயம் பற்றி கனவில் காட்டப்படும் என்ற நம்பிக்கை தவறானது.

5) ஹராமான காரியங்களுக்கு இஸ்திகாரா தொழக்கூடாது. அது போல் அன்றாட வாழ்கையில் உள்ள உண்ணுதல் , பருகுதல் போன்ற காரியங்களுக்கு இஸ்திகாரா கிடையாது.

6) இரண்டு ரக்ஆத் தொழுது விட்டே பின்வரும் துஆவை ஓத வேண்டும். மாதவிடாய் பெண்கள் தேவை ஏற்படும் போது இந்த துஆவை ஓதினால் போதுமானது.

7) நாம் இஸ்திகார தொழுது விட்டு எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததற்கு மாற்றமாக நடை பெற்றால் கூட அதில் தான் நலவு இருப்பதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்குத் தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்" (அல்-குர்ஆன் 2:216)

இரண்டு ரக்அத்துக்களை தொழுத பின் ஓத வேண்டிய பிரார்த்தனை:

عن جابر بن عبد الله رضي الله عنهما، قال : كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : " إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني، ومعاشي، وعاقبة أمري " أو قال : " عاجل أمري وآجله، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري " أو قال : " في عاجل أمري وآجله، فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان، ثم أرضني ". قال : " ويسمي حاجته ".

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும்.

பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.'

ஸஹீஹ் புகாரி : 1162.

http://www.islamkalvi.com/?p=125528


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts