லேபிள்கள்

வியாழன், 6 ஜனவரி, 2022

சின்னசின்ன ஆசை.. சிறகடிக்கும் மகிழ்ச்சி!

மகிழ்ச்சி எங்கிருக்கிறது.. எல்லா இடத்திலும் இருக்கிறது.. என்ன வடிவேலு மாதிரி பேசறேன்னு நினைக்கறீங்களா.. நிச்சயம் கிடையாது.. மகிழ்ச்சி என்பது நாம் அணுகும் எல்லாவற்றிலும் இருக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட இருக்கிறது.. நாம் தான் அதை சரியாக கண்டுணர்ந்து அனுபவிக்க வேண்டும். மகிழ்ச்சியாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நிஜமான மகிழ்ச்சி..

 

சின்ன சின்ன மழைத்துளிகள் நம் மீது படும்போது கூட அதில் மகிழ்ச்சி இருக்கிறது. நம் துணையோடு சேர்ந்து உணவருந்தும் போதும் காபி அருந்தும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. உங்கள் வேலைகள் முடிந்தவுடன் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள இயற்கையுடன் நேரம் செலவிடுங்கள். கொஞ்சம் செல்போனின் நச்சரிப்பை அணைத்து கொஞ்சம் செடிகளின் அழகை ரசியுங்கள்.

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. சிலருக்கு மழை நீரில் விளையாட பிடிக்கும். சிலருக்கு மழையில் நனைந்துக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட பிடிக்கும். பணத்தைத் தேடி ஓடும் போது நாம் நம்முடைய சின்ன சின்ன சந்தோசங்களுக்கும் நேரம் ஒதுக்கினால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

https://tamil.oneindia.com/motivational-stories/search-the-happiness-in-every-small-thing-401169.html

--

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts