கத்தரிக்காய் இரும்பு சத்துக்களை கொண்டதாக உள்ளது, இதனால் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்காயினை எடுத்துக் கொள்ளலாம்.
கத்தரிக்காயானது சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்காயானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன.
கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கச் செய்கின்றது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்காயினை சாப்பிடலாம்.
கத்தரிக்காய் புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காயும் உள்ளது.
கத்தரிக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டுள்ளது, உடலில் காயங்கள், ஆபரேஷன் செய்தவர்கள் என ஏதேனும் ஒரு பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் கத்தரிக்காயினை எடுத்துக் கொள்ளக் கூடாது.
கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக