லேபிள்கள்

திங்கள், 6 டிசம்பர், 2021

காலையில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்?

நமது முன்னோர்கள் இரவில் முன்னதாகவே தூங்கி, பகலில் விடியற்காலையில் எழும் பழக்கத்தினை வைத்திருந்தனர். ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் காலையில் தாமதமாகவே எழுகின்றனர்.

முன்னோர்கள் அதிகாலையில் எழுவதால் காலை உணவினை தவறாமல் கடைபிடித்துவந்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் காலையில் தாமதமாக எழுவதால், காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.மேலும்,அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க பலரும் காலையில் வேகமாக எழ முயற்சிக்கின்றனர். ஆனாலும் காலையில் வேகமாக எழுவதற்கு கடினமாகவே உள்ளது என கூறுகின்றனர். என்னதான் விரைவில் படுத்தாலும் காலையில் தான் ஆழ்த்த உறக்கம் வருகின்றது. எனவே நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும், நிச்சயம் அதிகாலையில் விரைவாக எழுந்து, பொறுமையாகவும், டென்சன் இல்லாமலும் வேலைக்கு போகலாம்.

காலையில் வேகமாக எழ வேண்டுமென்றால் முதலில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு மாலையில் வேகமாக செல்லும் பழக்கத்தினை வைத்துக்கொள்ளவிபேண்டும் .

தூங்க செல்லும் முன் குளிக்கும் பழக்கத்தை கடைபிடித்தால் இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே உங்களால் எழ முடியும்.

இரவில் தாமதமாகவும், ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதைத் கண்டிப்பாக தவிருங்கள். குறிப்பாக இரவில் அசைவ உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் செரிமானம் சீராக நடைபெற்று, தூக்கத்திற்கு இடையூறு ஏதும் நேராமல் இருக்கும்.

முக்கியமாக விடுமுறை நாளாக இருந்தாலும் சரி, அனைத்து நாட்களிலும் ஒரே பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு வாரம் ஒரே மாதிரியான பழக்கத்தை மேற்கொண்டு வாருங்கள். பின் அந்த மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்

https://tamizstar.com/?p=2916    

--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts