லேபிள்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2021

வெங்காயத் தோ லை தூ க்கி இ னி குப்பையில் வீசாதீங்க! அதுல இவ்ளோ சத்து இருக்கு?

தினமும் சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தின் தோலை தூக்கி எறியாமல் இனி மேல் அதை சமையலில் பயன்படுத்தி வரலாம்.

வெங்காய தோல் கூட நமக்கு பல வழிகளில் உதவுகிறது. இந்த வெங்காய தோல்களில் கூட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

எனவே உலகளவில் எவ்வளவோ நாம் வெங்காய தோலை வேஸ்ட்டாக கீழே போடுகிறோம். ஆனால் அது கொடுக்கும் பயன்களை கருத்தில் கொண்டு இதை வீணாக கீழே போடாமல் பயன்படுத்துவது நல்லது.

பல ஆய்வுகள் வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் , வைட்டமின் , சி, மற்றும் இதயத்திற்கு நட்பான ஃபிளாவனாய்டுகள் உள்ளன.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதற்கும் வெங்காயத் தோல்கள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

சூப் மற்றும் குழம்பில் சேர்க்கலாம்

சூப் மற்றும் குழம்பில் கூடுதல் சுவையளிக்க வெங்காய தோலை சேர்க்கலாம். இது குழம்பை கெட்டியாக்க உதவி செய்யும். இது உங்க கிரேவிக்கு அழகான ஊதா நிறத்தை கொடுக்கும்.

சிறிது நேரம் குழம்பு கொதித்த பிறகு இந்த தோல்களை வெளியே எடுத்து விடுங்கள். இதன் சத்துக்கள் குழம்பில் இறங்கி விடும். சட்னி தாளிக்கும் போது கூட வெங்காயத்தின் தோலை உரிக்காமல் அப்படியே தாளிக்க பயன்படுத்தலாம். அதன் கருகிய தன்மை தேங்காய் சட்னிக்கு கூடுதல் சுவை அளிக்கும்.

வெங்காய தோல் சாம்பல்

தற்போது உணவுகளில் கருகிய தன்மை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது உணவிற்கு ஒரு ஸ்மோக்கி தன்மையை கொடுக்கிறது. எனவே வெங்காய தோலை அடுப்பில் வைத்து கருக்கி அந்த சாம்பலை தூவி விடலாம்.

ரிலாக்ஸ் தரும் வெங்காய தோல் டீ

வெங்காய தோல் டீ உங்க மனதை அமைதிப்படுத்தவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தேயிலையை சேர்த்து டீ போடும் சமயத்தில் வெங்காய தோலையும் சேர்த்து சூடான நீரில் கொதிக்க விடுங்கள். பிறகு இந்த டீயை வடிகட்டி ஆரோக்கியமாக குடித்து வாருங்கள்.

தாகத்தை தீர்க்க வெங்காய தோல் தண்ணீர்

வெங்காய தோல் சேர்க்கப்பட்ட நீர் உங்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும். நீடிக்கும் தசை பிடிப்புகளையும் இது சரியாகக் உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் வெங்காயத் தோல்களைச் சேர்த்து, குறைந்தது 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு தோல்களை அகற்றி விட்டு அந்த தண்ணீரை குடியுங்கள்.

https://tamizstar.com/?p=5248


--

கருத்துகள் இல்லை:

ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்னீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும் , இதைச் செய்பவர்கள் எ...

Popular Posts