லேபிள்கள்

திங்கள், 29 நவம்பர், 2021

சீரகத்தண்ணீர் ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.

https://tamizstar.com/?p=4556


--

வெள்ளி, 26 நவம்பர், 2021

இவர்கள் மட்டும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது! அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என சொல்லாம். பல வகையான புற்றுநோய்க்கு கூட கருஞ்சீரகத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஆனால் 97% கருஞ்சீரகத்தால் நன்மை ஏற்பட்டாலும் இதனால் 2 – 3% தீமையும் இருக்க தான் செய்கிறது. கருஞ்சீரகத்தை அளவிற்கு அதிகமாக எடுத்தாலோ அல்லது தொடர்ந்து பல முறை எடுத்து வந்தாலோ, வியாதிகளோடு இதனை எடுத்து கொண்டாலோ பல பக்க விளைவுகள் இதனால் உண்டாகும்.

வியாதியின் தீவிரத்தை பொருத்து கருஞ்சீரகத்தை ஒரு மண்டலமோ அல்லது இரு மண்டலமோ அல்லது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். மாறாக மாதக் கணக்கிலோ, வருடக் கணக்கிலோ அல்லது ஆயுள் முழுவதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி மாதக் கணக்கில் கருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை மற்றும் அழற்சி ஏற்படலாம் என அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் எடுத்து வந்தாலே உங்களுக்கு பூரண குணம் தெரிய தொடங்கும். அலோபதி மாத்திரைகளை போல ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. கர்ப்பிணி பெண்கள் எந்த காரணத்தை கொண்டும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது. கர்ப்பிணி பெண்கள் கருஞ்சீரகத்தை எடுத்து கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்கும், கர்பப்பையிற்கும் பாதிப்பு ஏற்படும்.

மேலும் குழந்தைபேறுக்காக காத்திருப்பவர்கள் கூட கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டாம். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை எடுக்க கூடாது. ஏனெனில் கருஞ்சீரகத்தின் முக்கியமான பண்பு உயர் இரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க கூடியது. இதனால் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் மேலும் இரத்த அழுத்தம் குறைந்து ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்களும் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள கூடாது. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் ஒரு மண்டலம் கருஞ்சீரகத்தை சாப்பிட்டாலே சர்க்கரை அளவு சீராகி விடும். எனவே குறைந்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டாம்.

மூக்கின் வழியாக ஒரு சிலருக்கு இரத்தம் வடிதல் ஏற்படும். இவர்களும் கருஞ்சீரகத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சைட்டோகிரோம் p450 சப்ஸ்ட்ரேட் அல்லது இதற்கு நிகரான மருந்து சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது. கருஞ்சீரகம் பெரும்பாலும் நன்மைகளையே தருகிறது. இருப்பினும் இது போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் மட்டும் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும். பிறர் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கருஞ்சீரகத்தை சரியான அளவில், சரியான கால அளவில் எடுத்து வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

https://tamizstar.com/?p=4741


--

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts