லேபிள்கள்

திங்கள், 13 செப்டம்பர், 2021

ஏராளமானநன்மைகளை கொண்ட வெண்டைக்காய் ஊறவைத்த நீர்...!!

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில்  அந்நீரைப் பருக வேண்டும்.  இப்படி தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். மேலும் சுவாச பிரச்சனைகள்  இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு  கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.  சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவற்றை சரிசெய்வதுடன் ரத்த சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க  வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது இரவில் தூங்குவதற்குமுன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள்  காலை காலை உணவு உண்பதற்கு அரை மணிநேரத்துக்கு முன் வெறும்வயிற்றில் வெண்டைக்காய் ஊறிய

அந்த நீரை பருகவேண்டும். இந்த நீர் சர்க்கரை நோயை கட்டுக்குள்  வைக்கும்.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய்  நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/vegetable-soaked-water-with-many-benefits-120040600052_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts