லேபிள்கள்

புதன், 29 செப்டம்பர், 2021

இதய நோய்கள் சம்பந்தமானபிரச்சனைகளை தீர்க்கும் எளிய வழிமுறைகள்...!!

நன்றாகப் பழுத்த நெல்லிக்கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் உண்டாகும்.

இருதய படபடப்பு குறைய: மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி  சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.இதயம் படபடப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.

இதய நோய்கள் தீர: துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை48 நாட்கள் சாப்பிட்டு வர இதய  நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இதயத்தில் குத்து வலி தீர: கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து  ஆகியவை தீரும்.

இதய பலம் பெற: அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம்  பெறும்.

இதய நடுக்கம் தீர: திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதயநடுக்கம் தீரும்.இதயம் பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை  மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும்.

இதய பலகீனம் தீர: செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை  மாலை) இதய பலகீனம் தீரும். மேலும் தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.

மாரடைப்புத் தீர: தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற்

தடவி வர மாரடைப்புத்தீரும். தொடரும்.இதய நோய்  உள்ளவர்கள் டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/simple-ways-to-solve-problems-with-heart-disease-120073100028_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

எண்ணற்ற சத்துக்கள்அடங்கியுள்ள கொய்யா இலை தேனீர் !!

பொதுவாக கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கொய்யா இலை டீயை 3 மாதம் தொடர்ந்து குடித்துவந்தால் உடம்பில் பல்வேறு மாற்றங்கள்  நிகழ்வதை உணரலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை சீராக்கும். மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் குடிக்க வேண்டும். கல்லீரலை சுத்தப்படுத்தும் .இருமல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மாறும். பல்வலி,  வாய்ப்புண் போன்றவற்றை விரைவில் குணமாக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கொய்யா இலை தேனீர் குடிப்பதால் வயிற்றுப் போக்கால் அவதிபடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இது வயிற்று பிடிப்பைத் தணிக்கும். மேலும் சீக்கிரம் நிவாரணத்தை கொடுக்கும். மேலும் திரவ நிலையில் உள்ள இதை வாய் வழியாக உட்கொள்வதால் இது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தை  தக்கவைக்கிறது.

கொய்யா இலை தேனீர் உடல் எடை குறைப்பதையும் ஊக்குவிக்கிறது. கொய்யா இலையில் வைட்டமின் சி, இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. எனவே  உங்களுக்கு குறைவான காய்ச்சல் இருந்தால் இந்த தேனீரை குடியுங்கள். இது தொண்டை, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் உள்ள சளியை போக்கும்.

சருமத்தில் உள்ள முகப்பரு, வடுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் இந்த கொய்யா இலை சிறந்தது. இதற்கு கொய்யா இலைகளை நசுக்கி அதை பரு மற்றும்  வடுக்கள் உள்ள பகுதிகளில் தடவி பாருங்கள். வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

தலை முடி அடர்த்தி குறைவு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபடுபவர்களும் கொய்யா இலையை பயன்படுத்தலாம். கொய்யா இலைகளை ஒரு  பாத்திரத்தில்

தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிக்கட்டி பொருக்கும் சூட்டில் தலையில் மசாஜ் செய்யலாம்.

உங்கள் நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்தி, கொய்யா இலை தேனீர் நல்ல உறக்கத்தையும் தருகிறது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/guava-leaf-tea-contains-innumerable-nutrients-120073100039_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 23 செப்டம்பர், 2021

முழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...!!

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது. 

 

சின்ன வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.

 

உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன் படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு  பயன்படுத்தவும்.

 

இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்து விடும். எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும். இரும்புச்சத்தை அதிகரிக்கும் தேன், பேரீச்சை, கறிவேப்பிலை, முருங்கையை அதிகமாக  உடலுக்கு சேர்த்திடுங்கள்.

 

தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

 

அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும். 

 

முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு

வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள்  வராது. 

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/small-onion-gives-full-medical-benefits-120073100067_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

எண்ணெய்தேய்த்து குளிக்கும்போது தவிர்க்க வேண்டியது என்ன...?

எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால்  எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும்.

நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம்  சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில்  படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில்  நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று  ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. தலைக்கு சீயக்காய், அரப்பு, சாதம் கஞ்சி  போன்றவைகளை பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக  இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. ஏனென்றால் இந்த நாட்கள்  குளிர்ச்சியான நாட்கள் ஆகும்

குளிர்ச்சியான நாட்களில் பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பது விதி. நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்  குளிக்கலாம். பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் ஆகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.  மேலும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல்  போன்ற

பிரச்சனைகள் தீரும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-to-avoid-when-bathing-with-oil-120040400022_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 16 செப்டம்பர், 2021

கண்சம்பந்தப்பட்ட நோய்கள் அகல சில மருத்துவ குறிப்புகள்...!!


பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இதனை கவனத்தில் கொள்ளவில்லையென்றால் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. 

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து, மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட  நோய்கள் அகலும்.

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண்  பார்வை குறைபாடு நீங்கும்.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து குழைவான பதத்தில் இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி  விடவும். இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது. மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப்  பயன்படுத்தலாம்.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால்சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.

ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/eliminate-eye-diseases-some-medical-tips-120040600041_1.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 13 செப்டம்பர், 2021

ஏராளமானநன்மைகளை கொண்ட வெண்டைக்காய் ஊறவைத்த நீர்...!!

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில்  அந்நீரைப் பருக வேண்டும்.  இப்படி தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். மேலும் சுவாச பிரச்சனைகள்  இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு  கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.  சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவற்றை சரிசெய்வதுடன் ரத்த சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க  வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது இரவில் தூங்குவதற்குமுன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள்  காலை காலை உணவு உண்பதற்கு அரை மணிநேரத்துக்கு முன் வெறும்வயிற்றில் வெண்டைக்காய் ஊறிய

அந்த நீரை பருகவேண்டும். இந்த நீர் சர்க்கரை நோயை கட்டுக்குள்  வைக்கும்.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய்  நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/vegetable-soaked-water-with-many-benefits-120040600052_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 9 செப்டம்பர், 2021

Fwd: உடல்நலம்காக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!


தினமும் நம்முடைய உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவக்குணங்களும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களிலும் மூலிகைலிகளிலும் இருக்கிறது.

துளசி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்த துளசி சாறை நீங்கள் தினமும் குடித்து வந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்க முடியும்.

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் பூண்டை தோல் நீக்கி நசுக்கி அதனுடன் தக்காளி உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் வைத்து குடித்தால்  உங்களுடைய நெஞ்சு சளி இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விடும்.

உங்களுக்கு வாய் புண் இருக்கா, கொப்பரை தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. வாய் புண் அப்படியே மறைந்துவிடும்.

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் நோஞ்சானாக மெலிந்து ஒல்லியாக காணப்படுவார்கள். இவர்கள் கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து 40 நாள்கள் சாப்பிட்டு வாங்க.  உங்கள் உடல் பருமனாகும்.

வயிற்று போக்கு தொடர்ச்சியாக இருப்பவர்கள் பப்பாளிப்பழத்தை சாப்பிட வயிற்று போக்கு உடனடியாக குணமாகும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வாருங்கள்.

உங்கள் மார்பு சளி குறையும். கூடவே சோர்வு நீங்கி புத்துணர்ச்சியோடு நாள்முழுவதும் இருக்க முடியும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-natural-medical-tips-for-health-120040700045_1.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 6 செப்டம்பர், 2021

Fwd: குழந்தைகளுக்குஏற்படும் சளியை நீக்கும் பாட்டி வைத்தியம்..!!


குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவார்கள். இந்த சளி, இருமல்  பிரச்சனையை சரி செய்வதற்கு நம் பாட்டி வைத்தியம் பயனுள்ளதாக இருக்கிறது.

1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு  டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது

 குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு ஓமவல்லி இலை மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த ஓமவல்லி இலையை வைத்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரி செய்யலாம்.

குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும். அதனால், மருந்துகளுக்குப் பதிலாக, பாலில் மஞ்சள்தூள், இஞ்சி, தேன் கலந்து குடித்தால் இருமல்  குறையும். 

2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல்  3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்தால் பாலில், இஞ்சி தேன் கலந்து கொடுக்கலாம். கற்பூரவல்லி, துளசி ஆகியவற்றாலான கஷாயம் செய்து கொடுக்கலாம்.

சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை  வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு

பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/grandma-s-remedies-for-removing-mucus-occurs-in-children-120040800046_1.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 1 செப்டம்பர், 2021

Fwd: மாம்பழம்செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவையா??


மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவையா??

மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவையா?? என்று எப்படிக் கண்டறிவது என தெரிந்துக்கொள்ளுங்கள். 

 

மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத் தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது. 
 

இயற்கையாகவே பழுத்த எந்த மாம்பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. 
 

பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாகத்தான் இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.
 

இயற்கையாகப் பழுத்த பழங்கள் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது. 
 

ரசாயனங்கள் மூலமாகப் பழுக்க வைத்தால் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்திருக்கும்.
 

இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும். 
 

மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது. 
 

இயற்கையில்

காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவை அப்படி இருக்காது

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/how-to-identify-artificially-ripened-mangoes-120041200021_1.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts