லேபிள்கள்

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இந்த25 மூலிகைகளும்கண்டிப்பா உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கணும் தெரியுமா ?

மூலிகைகள் எப்பொழுதும் நம்முடைய உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றன. எல்ல மூலிகைகளும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய உடலில் உள்ள நோய்களை குணமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
பொதுவாக ஒரு சில மூலிகைகள் அடிக்கடி நம்முடைய உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு உடனடி மருந்தாக அமைகின்றது. அப்படி நம்முடைய வீட்டை சுற்றை வளர்க்க வேண்டிய 25 மூலிகை செடிகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. துளசி

துளசி முதன்மையான ஒரு மூலிகை செடி. இதை நாம் வீட்டை சுற்றி வளர்பதினால் காலை வேளையில் நல்ல ஒரு காற்றை சுவாசிக்க முடியும். மேலும் நமக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய நல்ல மருந்தாக செயல்படுகிறது.

2.திருநீற்று பச்சிலை

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காய்ச்சலை குணப்படுத்த கூடிய ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்படும் போது நான்கு அல்லது ஐந்து இலைகளை சாப்பிட்டாலே காய்ச்சல் மற்றும் இருமல் விலகி விடும்.

3. வல்லாரை கீரை

இது எளிதில் வளர கூடிய செடி. இதில் ஒரு சிறு செடியை நட்டு வைத்தாலே அது படர்ந்து வளர்ந்து விடும். இந்த வல்லாரை கீரையை சமையல் செய்தோ அல்லது சம்மந்தி வைத்தோ குழந்தைகளுக்கு கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

4. ஆடா தோட

ஆடுகள் சாப்பிடாத ஒரு செடி என்பதால் இதற்க்கு ஆடா தோட என்ற பெயர் வந்தது. இதன் இலைகளை கசாயம் வைத்து குடிப்பதனால் சளி, இருமல், காய்ச்சல் குறையும். குறிப்பாக மார்பு சளி குறையும். இது எளிதில் வளர கூடிய செடி. இதில் உள்ள சிறு குச்சியை நட்டு வைத்தாலே எளிதில் வளர்ந்து விடும்.

5. நித்திய கல்யாணி

இது நித்தமும் பூக்க கூடிய செடி அதனால் தான் இதற்க்கு நித்ய கல்யாணி என்ற பெயர் வந்தது. இது நம் வீட்டின் முன் பூத்து நின்றாலே பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இதில் மருத்துவ குணங்களும் காணப்படுகிறது. இது சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இது நம் வீட்டில் வளர்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

6. அகத்திக்கீரை

அகத்தி விதையை போட்டாலே எளிதில் முளைத்து வளர்ந்து விடும். மேலும் இதை தொட்டிகளில் கூட வளர்க்கலாம். ஒரு குறிப்பிட்ட உயரம் வரை வளர்ந்தும் கட் பண்ணி விட்டு வளர்க்கலாம். இப்படி நாம் வளர்க்கும் போது இதை நாம் கீரையாக உபயோகப்படுத்தலாம். வாரம் ஒரு முறையாவது அகத்திக்கீரை சாப்பிட்டால் நமக்கு தேவையான இரும்பு சத்தை நமக்கு தரும்.

7. பிரண்டை

வீட்டின் ஒரு ஓரத்தில் இதை நாம் வளர்க்கலாம். இது வளர் வதர்கு வேண்டிய ஒரு சில கம்புகளையோ அல்லது கம்பிகளையோ நட்டு வைத்தால் போதும். அது அதன் மேல் படர்ந்து வளரும். இதை அடிக்கடி சாப்பிடுவதால் பசி ஏற்படும் தன்மை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இதில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதினால் எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது. ஆகவே வீட்டில் தவறாமல் வளருங்கள் பிரண்டை செடியயை.

8. ரண கள்ளி

கட்டிப்போட்டால் குட்டி போடும் செடி என்று சொல்வார்கள். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிது. இந்த செடி இலையின் முனை பகுதியிலிருந்து பல செடிகள் வளர்கிறது. இதன் இலைகளை சிறுநீரக கர்களை கரைப்பதற்க்கு உபயோகப் படுத்தலாம். இதை நாம் உபயோகப்படுத்தும் போது ஏழு நாள்கள் ஒரு இலை வீதம் எடுத்து கொண்டால் சிறுநீரக கல் முழுமையாக கரைந்து விடும்.

9. தொட்டால் சிணுங்கி

இச் செடியை தொட்டதும் சுருங்குவதால் இதை தொட்டால் சிணுங்கி என்று சொல்லுவார்கள். இதில் முள் இருப்பதினால் பலரும் வீட்டில் வளர்க கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. ஏன்னென்றால் வீட்டில் நாம் வளர்க்கும் போது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதை காலை வேளையில் சூரியன் உதிக்கும் போது தொட்டால் அதிலிருந்து காந்த சக்தி கிடைப்பதாக கூறுகின்றனர். மேலும் இதில் பல மருத்துவ குணங்களும் உள்ளது.

10. சுண்டைக்காய்

இதில் ஒரு செடியை வீட்டில் வளர்த்தாலே நமக்கு வேண்டிய காய்களை நமக்கு தந்து விடும். இது கசப்பாக இருப்பதினால் பலரும் உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் இதில் அனேக மருத்துவ குணங்கள் உள்ளது. இதை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தினால் வயிற்று புண், அல்சர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

11. கற்றாழை

ஒரு கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தினாலே போதும் பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இது முந்நூறுக்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. இதன் உள் பகுதியில் காணப்படும் ஜெல்லை சருமத்திற்க்கு பயன்படுத்தும் போது சரும நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

12. வாடா மல்லி

இதன் பூக்கள் வாடாமல் இருப்பதினால் தான் இதற்க்கு வாடா மல்லி என்ற பெயர் வந்தது. இதை வாஸ்து பூ என்று பலரும் வீட்டின் முன் வளர்கின்றனர். இந்த பூக்களை அரைத்து சருமத்தில் தடவினால் சரும பிரச்சனைகள் குணமாகும். ஆகவே வீட்டின் முன் வளர்த்தால் பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த செடியை வளர்ப்பது சிறந்தது.

13. மருதாணி

வீட்டின் முன் மருதாணி செடி வளர்ப்பது மிகவும் நல்லது. இதை பல வழிகளில் நாம் பயன்படுத்துகிறோம். இதில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக நாம் தலை முடிக்காக அதிக அளவில் இதை நாம் பயன்ப்படுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் கைகளில் வைப்பதற்க்கும் நாம் உபயோகபடுத்துகிறோம். ஆனால் வீட்டின் முன் மருதாணி செடி வளர்ப்பது பல நண்மைகளை தருகிறதாம். ஆகவே தவறாமல் வளருங்கள்.

14.வெற்றிலை

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் அடிக்கடி பயன்படுத்துவது என்றால் வெற்றிலையை சொல்லலாம். நம் வீட்டில் இருந்தால் கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதை வீட்டின் ஒரு பகுதியில் கொடி ஏற்றி விட்டால் அது வளர்ந்து விடும் மேலும் பார்ப்பதர்கும் மிகவும் அழகாக இருக்கும்.

15. புதினா

நாம் வீட்டில் சமையலுக்காக வாங்க கூடிய ஒரு செடி தான் புதினா. இதை நாம் உபயோகப்படுத்திய பின்னர் மீதம் இருப்பதில் ஒரு சிறு குச்சியை ஒரு தொட்டியில் நட்டு விட்டாலே அது எளிமையாக வளர்ந்து விடும். திரும்ப திரும்ப வீட்டு பயன்பாட்டிற்க்காக இதை உபயோகப்படுத்தலாம். எளிமையாக வளரக்கூடிய செடி அது மட்டுமல்லாமல் மருத்துவ குணங்கள் வாய்ந்ததும் கூட. ஆகவே வீட்டில் தவறாமல் வளருங்கள்.

16. மணத்தக்காளி

மணத்தக்காளி பழத்தை எடுத்து மண்ணில் போட்டாலே எளிமையாக அது வளர்ந்து விடும். இதை கீரை பொரியலாகவோ அல்லது சம்மந்தி செய்தோ சாப்பிடலாம். இதன் இலைகளை பச்சையாக பறித்து சாப்பிட்டால் வாய் பகுதியில் காணப்படும் புண்கள் மற்றும் வயிற்று புண்கள் ஆகியவற்றை எளிதில் குணப்படுத்தும். ஆகவே மருத்துவ குணங்கள் வாய்ந்த மணத்தக்காளியை வீட்டில் வளர்த்தி பயனடையுங்கள்.

17. முசு முசுக்கை

இது கொடியாக படர கூடிய செடி. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது நெஞ்சு சளியை போக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இதை சம்மந்தி மற்றும் ரசம் வைத்து சாப்பிடலாம்.

18. கற்பூர வல்லி

கற்பூர வல்லி என்கிற ஓம வல்லி செடியின் கிளையை ஒடித்து வைத்தாலே அது எளிமையாக வளர்ந்து விடும். மேலும் இதை தொட்டிகளிலும் வளர்க்கலாம். இது முக்கியமாக காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை நிரந்தரமாக போக்க கூடியது. இதை நீங்கள் கசாயம் வைத்து குடித்தால் மிகவும் நல்லது நிறைய பயன்களை தரக் கூடியது.

19. தூது வளை

இதில் முள்கள் இருப்பதினால் வீட்டின் ஓரமாக வைத்து வளர்க்கலாம். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காய்ச்சல் , இருமல், சளி போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வை தரக்கூடியது. மார்பு சளியை முழுமையாக போக்க கூடியது. இதை சம்மந்தி செய்தும் சாப்பிடலாம்.

20. முருங்கை செடி

செடி முருங்கை என்ற ஒரு வகையும் இதில் உள்ளது. நீங்கள் கீரை ஆக உபயோகப்படுத்த விரும்பினால் முருங்கை மரத்தை உபயோகப்படுத்தாமல் முருங்கை செடியை பயன்ப்படுத்தலாம். முருங்கை செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இதை வீட்டில் வளர்த்தி கீரையாக பயன்படுத்துங்கள்.

21. நொச்சி செடி

நொச்சி செடி வீட்டின் அருகில் இருந்தால் கொசுக்கள் அதிகம் வர வாய்ப்பில்லை. அது மட்டுமல்லாமல் கொசுக்கள் அதிகம் இருந்தால் நொச்சி இலைகளை போட்டு புகை பிடித்தாலே கொசுக்கள் எல்லாம் ஓடி விடும். சளி தொல்லைகளுக்கு ஆவி பிடிக்கவும் இதன் இலைகளை பயன்படுத்தலாம்.

22. செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள், இலைகள் அதிக பயன் உள்ளதாக இருக்கிறது. இதன் இலைகள் மற்றும் பூக்களை அரைத்து தலை முடியில் தேய்த்தால் முடி வளருவதர்கும், முடி கொட்டுவதை தடுப்பதற்க்கும் மற்றும் முடி கருப்பவதற்கும் உபயோகப்படுத்தலாம். ஆகவே வீட்டில் செம்பருத்தி செடி வளருங்கள்.

23. துத்தி

கிராம பகுதிகளில் உள்ளவர்களுக்கு வீட்டின் வெளியே சென்றாலே எளிதில் கிடைத்து விடும் இந்த செடி. ஆனால் நகர் புறங்களில் உள்ளவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கலாம். இது மூலநோய் மற்றும் மலக்கட்டு சம்மந்தமான பிரச்சனைகளை போக்க வல்லது. ஆகவே இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது.

24. குப்பை மேனி

இதில் ஏராளாமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் கசாயம் சளி பிரச்சனைகளை போக்க வல்லது. மேலும் தோல் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை மஞ்சள் கலந்து தோலில் அரைத்து பூசினால் மிகவும் சிறந்தது.

25. முடக்கத்தான் கீரை

இது கொடியாக படர கூடிய ஒரு கீரை. இது மூட்டு சம்மந்த பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது.

ஏனென்றால் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த மூலிகை செடியை வளர்க்க தவறாதீங்க.

https://pettagum.blogspot.com/2020/04/25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts