லேபிள்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

வயிற்றுபோக்கினை ஏற்படுத்தும் மற்றும் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்....!!

பலர் உணவுகளால் வயிற்றுப் போக்கிற்கு ஆளாகியிருப்பார்கள். உதாரணமாக, காரமான உணவுகள், கடலைப் பருப்பு போன்றவற்றால் கூட சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

பானங்களில் பால், காப்ஃபைன் போன்றவையும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். ஏன் மாசுப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியாக்கள், வைரஸ்  மற்றும் நச்சுக்கள் அதிகம் இருப்பதாலும், முறையற்ற குடலியக்கம் ஏற்பட்டு, அவை இறுதியில் வயிற்றுப் போக்கினை உண்டாக்குகின்றன.

 வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வு என்றால், நீரில், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இப்போது அத்தகைய வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுப் பிரச்சனை அல்லது வயிற்றுப் போக்கினால், அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், இந்த உணவுப் பொருட்களையெல்லாம் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

 சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம்  மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. 

 சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை  இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

 முட்டைகோஸில் சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால், அவை வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் இவை கரையாத நார்ச்சத்து கொண்டிருப்பதால், அவை நேரடியாக குடலை அடைந்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.

 பூண்டிலும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவையும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வயிற்றுப்  பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

 பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.

 காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும்

இடையூறை  ஏற்படுத்திவிடும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-foods-that-can-cause-diarrhea-120053000047_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குதொடுப்பது எப்படி..??

ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும்.

இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.

இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி..?? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

=> நுகர்வோர் என்பவர் யார் :

ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.

உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.

=> யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்..??

ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.

ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.

=> ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்..??

காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.

நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.

=> எங்கே புகாரளிப்பது..??

நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள் :

=> புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

=> சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.

=> எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

=> என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்..??

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.

=> யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்..??

நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.

=> நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின்படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.

=> மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.

ஆன்லைனில் புகாரளிக்க :

=> consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ புகார் அளிக்கலாம்.
www.consumer.tn.gov.in என்கிற இத்தளத்திற்கும்

செல்லலாம்

http://nammaseithi.com/?p=30295


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

காலம் யாருக்காகவும் காத்திருக்காது…

"கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை " என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.

தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோஅவருக்கு நீங்கள் கொடுக்கிற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு.

ஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக் கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், "தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்" என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினிதான்.

'பங்சுவாலிடி' என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல்தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு.

ஜப்பானில் நேரத்துக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் . ஜப்பானில் ரயில் 5 நிமிடம் தாமதமாக வந்தால் கூட பெரும் தவறாக எண்ணி விடுவார்கள்.

பயணிகளிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்பார்கள். ஒரு காகிதத்தில் விளக்கியும் apology (மன்னிப்பும்) கேட்பார்கள் .அவ்வளவு மதிப்பு நேரத்துக்கு அங்கு .

TIME MANAGEMENT' என்பது எப்போதும் அவசியமான ஒன்று .அதை சிறு வயது முதலே கற்பிப்பதுதான் வளரும் தலைமுறை வளம் பெரும் வழி

http://nammaseithi.com/?p=30244


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

நமதுஉடலில் இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது....?

இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரும்பு சத்து மிகவும் அவசியம். 

சரிவிகித உணவை சரியாக சாப்பிடாமல் இருப்பதே இதற்கு காரணம். சாப்பிடாமல் இருப்பதால் உடம்பில் ஹீமோகுளோபின் குறைய ஆரம்பிக்கிறது. 

ஹீமோகுளோபின் குறைந்தால் உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாக இருக்கும். இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய  காரணிகளாக உள்ளன. 

உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும். சில பேருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் இரும்புச் சத்துக் குறைபாடே. இப்படி வாயின் உள்பக்கம்  இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுதல் எல்லாம் இரும்புச் சத்து உடம்பில் இல்லாமல்  இருத்தலே ஆகும்.

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையென்றால் பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு  இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போய்விடும்.

இரும்பு சத்து இல்லையென்றால் எலும்பு மஜ்ஜை பாதிப்படையும். மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்படும்.

உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சிவப்பணுக்கள்  போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்பட்டுவிடும்.

படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் சாதாரணமாக  இருக்காதீர்கள். அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.

வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணமாக உள்ளது. ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்ய வேண்டி வரும்.

ஒரு இடத்தில் நிலையாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வு வரும். அப்படி நீங்கள் அடிக்கடி  உணர்கிறீர்கள் எனில்

அது சாதாரண விஷயமல்ல. இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்றே அர்த்தம்.

https://tamil.webdunia.com/article/diseases-and-treatments/how-to-detect-iron-deficiency-in-our-body-120052200042_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இந்த25 மூலிகைகளும்கண்டிப்பா உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கணும் தெரியுமா ?

மூலிகைகள் எப்பொழுதும் நம்முடைய உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றன. எல்ல மூலிகைகளும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய உடலில் உள்ள நோய்களை குணமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
பொதுவாக ஒரு சில மூலிகைகள் அடிக்கடி நம்முடைய உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு உடனடி மருந்தாக அமைகின்றது. அப்படி நம்முடைய வீட்டை சுற்றை வளர்க்க வேண்டிய 25 மூலிகை செடிகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. துளசி

துளசி முதன்மையான ஒரு மூலிகை செடி. இதை நாம் வீட்டை சுற்றி வளர்பதினால் காலை வேளையில் நல்ல ஒரு காற்றை சுவாசிக்க முடியும். மேலும் நமக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய நல்ல மருந்தாக செயல்படுகிறது.

2.திருநீற்று பச்சிலை

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காய்ச்சலை குணப்படுத்த கூடிய ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்படும் போது நான்கு அல்லது ஐந்து இலைகளை சாப்பிட்டாலே காய்ச்சல் மற்றும் இருமல் விலகி விடும்.

3. வல்லாரை கீரை

இது எளிதில் வளர கூடிய செடி. இதில் ஒரு சிறு செடியை நட்டு வைத்தாலே அது படர்ந்து வளர்ந்து விடும். இந்த வல்லாரை கீரையை சமையல் செய்தோ அல்லது சம்மந்தி வைத்தோ குழந்தைகளுக்கு கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

4. ஆடா தோட

ஆடுகள் சாப்பிடாத ஒரு செடி என்பதால் இதற்க்கு ஆடா தோட என்ற பெயர் வந்தது. இதன் இலைகளை கசாயம் வைத்து குடிப்பதனால் சளி, இருமல், காய்ச்சல் குறையும். குறிப்பாக மார்பு சளி குறையும். இது எளிதில் வளர கூடிய செடி. இதில் உள்ள சிறு குச்சியை நட்டு வைத்தாலே எளிதில் வளர்ந்து விடும்.

5. நித்திய கல்யாணி

இது நித்தமும் பூக்க கூடிய செடி அதனால் தான் இதற்க்கு நித்ய கல்யாணி என்ற பெயர் வந்தது. இது நம் வீட்டின் முன் பூத்து நின்றாலே பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இதில் மருத்துவ குணங்களும் காணப்படுகிறது. இது சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இது நம் வீட்டில் வளர்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

6. அகத்திக்கீரை

அகத்தி விதையை போட்டாலே எளிதில் முளைத்து வளர்ந்து விடும். மேலும் இதை தொட்டிகளில் கூட வளர்க்கலாம். ஒரு குறிப்பிட்ட உயரம் வரை வளர்ந்தும் கட் பண்ணி விட்டு வளர்க்கலாம். இப்படி நாம் வளர்க்கும் போது இதை நாம் கீரையாக உபயோகப்படுத்தலாம். வாரம் ஒரு முறையாவது அகத்திக்கீரை சாப்பிட்டால் நமக்கு தேவையான இரும்பு சத்தை நமக்கு தரும்.

7. பிரண்டை

வீட்டின் ஒரு ஓரத்தில் இதை நாம் வளர்க்கலாம். இது வளர் வதர்கு வேண்டிய ஒரு சில கம்புகளையோ அல்லது கம்பிகளையோ நட்டு வைத்தால் போதும். அது அதன் மேல் படர்ந்து வளரும். இதை அடிக்கடி சாப்பிடுவதால் பசி ஏற்படும் தன்மை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இதில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதினால் எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது. ஆகவே வீட்டில் தவறாமல் வளருங்கள் பிரண்டை செடியயை.

8. ரண கள்ளி

கட்டிப்போட்டால் குட்டி போடும் செடி என்று சொல்வார்கள். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிது. இந்த செடி இலையின் முனை பகுதியிலிருந்து பல செடிகள் வளர்கிறது. இதன் இலைகளை சிறுநீரக கர்களை கரைப்பதற்க்கு உபயோகப் படுத்தலாம். இதை நாம் உபயோகப்படுத்தும் போது ஏழு நாள்கள் ஒரு இலை வீதம் எடுத்து கொண்டால் சிறுநீரக கல் முழுமையாக கரைந்து விடும்.

9. தொட்டால் சிணுங்கி

இச் செடியை தொட்டதும் சுருங்குவதால் இதை தொட்டால் சிணுங்கி என்று சொல்லுவார்கள். இதில் முள் இருப்பதினால் பலரும் வீட்டில் வளர்க கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. ஏன்னென்றால் வீட்டில் நாம் வளர்க்கும் போது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதை காலை வேளையில் சூரியன் உதிக்கும் போது தொட்டால் அதிலிருந்து காந்த சக்தி கிடைப்பதாக கூறுகின்றனர். மேலும் இதில் பல மருத்துவ குணங்களும் உள்ளது.

10. சுண்டைக்காய்

இதில் ஒரு செடியை வீட்டில் வளர்த்தாலே நமக்கு வேண்டிய காய்களை நமக்கு தந்து விடும். இது கசப்பாக இருப்பதினால் பலரும் உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் இதில் அனேக மருத்துவ குணங்கள் உள்ளது. இதை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தினால் வயிற்று புண், அல்சர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

11. கற்றாழை

ஒரு கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தினாலே போதும் பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இது முந்நூறுக்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. இதன் உள் பகுதியில் காணப்படும் ஜெல்லை சருமத்திற்க்கு பயன்படுத்தும் போது சரும நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

12. வாடா மல்லி

இதன் பூக்கள் வாடாமல் இருப்பதினால் தான் இதற்க்கு வாடா மல்லி என்ற பெயர் வந்தது. இதை வாஸ்து பூ என்று பலரும் வீட்டின் முன் வளர்கின்றனர். இந்த பூக்களை அரைத்து சருமத்தில் தடவினால் சரும பிரச்சனைகள் குணமாகும். ஆகவே வீட்டின் முன் வளர்த்தால் பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த செடியை வளர்ப்பது சிறந்தது.

13. மருதாணி

வீட்டின் முன் மருதாணி செடி வளர்ப்பது மிகவும் நல்லது. இதை பல வழிகளில் நாம் பயன்படுத்துகிறோம். இதில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக நாம் தலை முடிக்காக அதிக அளவில் இதை நாம் பயன்ப்படுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் கைகளில் வைப்பதற்க்கும் நாம் உபயோகபடுத்துகிறோம். ஆனால் வீட்டின் முன் மருதாணி செடி வளர்ப்பது பல நண்மைகளை தருகிறதாம். ஆகவே தவறாமல் வளருங்கள்.

14.வெற்றிலை

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் அடிக்கடி பயன்படுத்துவது என்றால் வெற்றிலையை சொல்லலாம். நம் வீட்டில் இருந்தால் கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதை வீட்டின் ஒரு பகுதியில் கொடி ஏற்றி விட்டால் அது வளர்ந்து விடும் மேலும் பார்ப்பதர்கும் மிகவும் அழகாக இருக்கும்.

15. புதினா

நாம் வீட்டில் சமையலுக்காக வாங்க கூடிய ஒரு செடி தான் புதினா. இதை நாம் உபயோகப்படுத்திய பின்னர் மீதம் இருப்பதில் ஒரு சிறு குச்சியை ஒரு தொட்டியில் நட்டு விட்டாலே அது எளிமையாக வளர்ந்து விடும். திரும்ப திரும்ப வீட்டு பயன்பாட்டிற்க்காக இதை உபயோகப்படுத்தலாம். எளிமையாக வளரக்கூடிய செடி அது மட்டுமல்லாமல் மருத்துவ குணங்கள் வாய்ந்ததும் கூட. ஆகவே வீட்டில் தவறாமல் வளருங்கள்.

16. மணத்தக்காளி

மணத்தக்காளி பழத்தை எடுத்து மண்ணில் போட்டாலே எளிமையாக அது வளர்ந்து விடும். இதை கீரை பொரியலாகவோ அல்லது சம்மந்தி செய்தோ சாப்பிடலாம். இதன் இலைகளை பச்சையாக பறித்து சாப்பிட்டால் வாய் பகுதியில் காணப்படும் புண்கள் மற்றும் வயிற்று புண்கள் ஆகியவற்றை எளிதில் குணப்படுத்தும். ஆகவே மருத்துவ குணங்கள் வாய்ந்த மணத்தக்காளியை வீட்டில் வளர்த்தி பயனடையுங்கள்.

17. முசு முசுக்கை

இது கொடியாக படர கூடிய செடி. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது நெஞ்சு சளியை போக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இதை சம்மந்தி மற்றும் ரசம் வைத்து சாப்பிடலாம்.

18. கற்பூர வல்லி

கற்பூர வல்லி என்கிற ஓம வல்லி செடியின் கிளையை ஒடித்து வைத்தாலே அது எளிமையாக வளர்ந்து விடும். மேலும் இதை தொட்டிகளிலும் வளர்க்கலாம். இது முக்கியமாக காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை நிரந்தரமாக போக்க கூடியது. இதை நீங்கள் கசாயம் வைத்து குடித்தால் மிகவும் நல்லது நிறைய பயன்களை தரக் கூடியது.

19. தூது வளை

இதில் முள்கள் இருப்பதினால் வீட்டின் ஓரமாக வைத்து வளர்க்கலாம். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காய்ச்சல் , இருமல், சளி போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வை தரக்கூடியது. மார்பு சளியை முழுமையாக போக்க கூடியது. இதை சம்மந்தி செய்தும் சாப்பிடலாம்.

20. முருங்கை செடி

செடி முருங்கை என்ற ஒரு வகையும் இதில் உள்ளது. நீங்கள் கீரை ஆக உபயோகப்படுத்த விரும்பினால் முருங்கை மரத்தை உபயோகப்படுத்தாமல் முருங்கை செடியை பயன்ப்படுத்தலாம். முருங்கை செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இதை வீட்டில் வளர்த்தி கீரையாக பயன்படுத்துங்கள்.

21. நொச்சி செடி

நொச்சி செடி வீட்டின் அருகில் இருந்தால் கொசுக்கள் அதிகம் வர வாய்ப்பில்லை. அது மட்டுமல்லாமல் கொசுக்கள் அதிகம் இருந்தால் நொச்சி இலைகளை போட்டு புகை பிடித்தாலே கொசுக்கள் எல்லாம் ஓடி விடும். சளி தொல்லைகளுக்கு ஆவி பிடிக்கவும் இதன் இலைகளை பயன்படுத்தலாம்.

22. செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள், இலைகள் அதிக பயன் உள்ளதாக இருக்கிறது. இதன் இலைகள் மற்றும் பூக்களை அரைத்து தலை முடியில் தேய்த்தால் முடி வளருவதர்கும், முடி கொட்டுவதை தடுப்பதற்க்கும் மற்றும் முடி கருப்பவதற்கும் உபயோகப்படுத்தலாம். ஆகவே வீட்டில் செம்பருத்தி செடி வளருங்கள்.

23. துத்தி

கிராம பகுதிகளில் உள்ளவர்களுக்கு வீட்டின் வெளியே சென்றாலே எளிதில் கிடைத்து விடும் இந்த செடி. ஆனால் நகர் புறங்களில் உள்ளவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கலாம். இது மூலநோய் மற்றும் மலக்கட்டு சம்மந்தமான பிரச்சனைகளை போக்க வல்லது. ஆகவே இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது.

24. குப்பை மேனி

இதில் ஏராளாமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் கசாயம் சளி பிரச்சனைகளை போக்க வல்லது. மேலும் தோல் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை மஞ்சள் கலந்து தோலில் அரைத்து பூசினால் மிகவும் சிறந்தது.

25. முடக்கத்தான் கீரை

இது கொடியாக படர கூடிய ஒரு கீரை. இது மூட்டு சம்மந்த பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது.

ஏனென்றால் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த மூலிகை செடியை வளர்க்க தவறாதீங்க.

https://pettagum.blogspot.com/2020/04/25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

சிறந்தஇயற்கை மருந்தாக பயன்படும் புதினா...!!

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும்,  தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி  வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும்  நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும்  புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். 

இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி  ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு  நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.  இதைத் தினசரி

உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/mint-is-the-best-natural-medicine-120053000022_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

குர்ஆன்ஏன் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது

அகிலங்களைப் படைத்த அல்லாஹ் நுட்பமான ஞானமிக்கவன் இன்னும் அவன் நூண்ணறிவாளன். அவனது செயல்கள் அனைத்திலும் அதிநுட்பமான அவனது ஞானம் நிறைந்துள்ளது. அதில் சிலவற்றை மனிதர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான் அதில் ஒன்று தான் குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியதில் உள்ள ஹிக்மத்.

குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மொத்தமாக இறங்கியது என்பது தான் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து. குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது தொடர்பாக இணைவைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது அதனை அல்லாஹ் தெளிவுபடுத்திகூறினான்

மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: "இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம். (அல்குா்ஆன்:- 25:32)

நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் சன்னம் சன்னமாக குர் ஆன் இறங்கியதில் ஏராளமான ஹிக்மத்துகள் அடங்கியுள்ளது அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிபடுத்துவது
நபி (ஸல்) அவர்கள் தமது அழைப்பை மக்களுக்கு முன் வைத்தபோது அவர்களிடம் வெறுப்பையும், வெருண்டோடுதலையும் கண்டார். முரட்டுத்தனத்தையும் பிடிவாதத்தையும் இயல்பாகக்கொண்ட அம்மக்கள் அவரது அழைப்பிற்கு முட்டுக்கட்டையானார்கள். அவர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். தான் சுமந்துகொண்டிருக்கின்ற நன்மையை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அவரது விருப்பத்திற்கு தடை ஏற்படுத்தினார்கள். அதைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்

(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (அல்குா்ஆன்:- 18:6)

சத்தியத்திய மார்க்கத்தில் நபியவர்களின் உள்ளம் உறுதியாக இருப்பதற்காக வஹி நபி (ஸல்) அவர்களுக்கு கட்டம் கட்டமாக இறங்கியது, அதன் மூலம் அறிவீலிகளின் அக்கிரமங்களை பொருட்ப்படுத்தாமல் சத்திய பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றும் இதற்கு முந்திய இறைதூதர்களும் இவ்வாறு தான் பொய்ப்படுத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள் ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை பொறுமைகாத்தார்கள் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன. (அல்குா்ஆன்:- 6:33-34)

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். (அல்குா்ஆன்:- 3:184)

இதுபோன்ற நிலையில் முன் சென்ற நபிமார்கள் பொறுமைகாத்ததைப்போன்று பொறுமைகாக்கவேண்டுமென்று நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்
"நபியே! நம் தூதர்களில் மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! (அல்குா்ஆன்:- 46:35)

நபிமர்களின் வரலாறை கூறுவதிலுள்ள ஹிக்மத் நபியவர்களுக்கு ஆறுதல் வழங்குவது தான்

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. (அல்குா்ஆன்:- 11:120)

குர்ஆனில் கூறப்படும் வரலாறும் நிகழ்வுகளும் நபியவர்களின் கவலையைப்போக்கி அவரை ஆறுதல்படுத்தவும் அவரது அழைப்புப் பணியில் உறுதியாக இருக்கச்செய்து அல்லாஹ்வின் உதவியின் மீது நம்பிக்கைகொள்வதற்கும் தான் எனவே தான் அல்லாஹ் குர்ஆன் ஏன் சிறுக சிறுக இறங்கியது என்று கேள்வி எழுப்பிய முஷ்ரிக்கீன்களுக்கு இவ்வாறு மறுப்புக்கூறுகிறான்

இன்னும்: "இவருக்கு இந்த குர்ஆன் மொத்தமாக ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (அல்குா்ஆன்:- 25:32)

2.  குர்ஆனின் அற்புதத்தை நிலைநாட்டுவது, அதன் மூலம் சவால் விடுவது.
தங்களது வழிகேட்டில் பிடிவாதமாக இருந்த இனைவைப்பாளர்கள் நபியவர்களை சோதிப்பதற்காக ஆச்சரியமான சவாலான பல கேள்விகளை கேட்டார்கள் மறுமை எப்போது,அல்லாஹ்வின் வேதனை உடனே வரவேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள் இதற்கெல்லாம் பதிலாகவும் விளக்கமாகவும் அல்லாஹ் இவ்வாறு கூறினான்

இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான விளக்கத்தையும் நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை. (அல்குா்ஆன்:- 25:33)

3. குர்ஆன் மனனம் செய்வதை எளிதாக்குவது எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயத்திற்கு அதனை விளங்குவதை எளிதாக்குவது
எழுதவும் படிக்கவும் தெரியாத உம்மி சமுதாயத்திற்கு தான் குர் ஆன் இறங்கியது அம்மக்கள் அதனை தங்களது நினைவில் பதியவைத்துக் கொண்டார்கள்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குா்ஆன்:- 62:2)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ (அல்குா்ஆன்:- 7:157)

எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்திற்கு குர்ஆன் மொத்தமாக ஒரே நேரத்தில் இறக்கியிருந்தால் அதனை மனனம் செய்வது இயலாத காரியமாகும் எனவே அந்த சமுதாயத்தின் நிலைக்கேற்ப அவர்கள் இக்குர்ஆனை புரிந்துகொண்டு மனனம் செய்வதற்கு தோதுவாக சிறுக சிறுக இறக்கப்பட்டது அவ்வாறு இறங்கிய குர்ஆனை ஸஹாபாக்கள் மனனம் செய்தார்கள் அதன் பொருளை விளங்கினார்கள் இன்னும் அதன் சட்டங்களையும் புரிந்துகொண்டார்கள் இதுவே தாபியீன்களுக்கான பயிற்றுவிப்பு முறையாகவும் இருந்தது

عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: " تَعَلَّمُوا الْقُرْآنَ خَمْسًا خَمْسًا، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ نَزَلَ بِالْقُرْآنِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسًا خَمْسًا " قَالَ عَلِيُّ بْنُ بَكَّارٍ: " قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ: مَنْ تَعَلَّمَ خَمْسًا خَمْسًا لَمْ يَنْسَهُ " البيهقيُّ في شعب الإيمان1807

உமர் அவர்கள் கூறினார்கள் குர் ஆனை ஐந்து ஐந்து வசனங்களாக கற்றுக்கொள்ளுங்கள் நிச்சயமாக ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடத்தில் ஐந்து ஐந்து வசனங்களைக்கொண்டு இறங்கினார்கள் இதை இமாம் அபுல் ஆலியா அவர்கள் அறிவித்தார்கள் நூல் அல்பைஹகி 1807

அபூ ஸஈத் அல் குத்ரி அவர்கள் காலையில் ஐந்து வசனம் மாலையில் ஐந்து வசனம் என கற்றுக்கொடுக்கக்கூடியவராக இருந்தார்கள் மேலும் மேலும் ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடத்தில் ஐந்து ஐந்து வசனங்களைக்கொண்டு இறங்கினார்கள் என்றும் கூறினார்கள் நூல் இப்னு அஸாகிர்

4, சட்டங்களை படிப்படியாக கடமையாக்குவது
முதலாவதாக குர்ஆன் ஈமானின் அடிப்படைகளை தெளிவுபடுத்தியது அல்லாஹுவை நம்புவது மலாயிக்காவை,வேதங்களை,தூதர்களை, மற்றும் மறுமையை நம்புவது மறுமையில் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது,விசாரணை,கூலி வழங்குதல்,சொர்க்கம், நரகம் என்று இதற்கான ஆதாரங்களை நிறுவி முஷ்ரிக்கீன்களின் உள்ளங்களில் குடிகொண்டிருந்த சிலைவழிபாட்டை வேரறுத்து இஸ்லாமிய அகீதாவை நிலை நாட்டியது இன்னும் நற்பண்புகளை ஏவியது அதன் மூலம் தான் உள்ளங்கள் தூய்மையாகி சீர்பெறும் அத்துடன் மானக்கேடான அருவருப்பான செயல்களை விலக்கவும் செய்தது. இதன் பின்னர் படிப்படியாக ஏனைய சட்டங்களும் கடமையாக்கப்பட்டன. எடுத்த எடுப்பிலேயே இச்சட்டங்கள் கடமையாக்கப் பட்டிருந்தால் மக்கள் அதனை ஏற்றிருக்கமாட்டார்கள். எனவே தான் சட்டங்கள் படிப்படியாக கடமையாக்கப்பட்டன. இதனை அன்னை ஆயிஷா அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

ஒசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, '(இறந்தவருக்கு அணிவிக்கப்படும்) 'கஃபன்' துணியில் சிறந்தது எது? (வெள்ளை நிறமா? மற்ற நிறமா?)' என்று கேட்டார். ஆயிஷா(ரலி), 'அடப்பாவமே! (நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கப்பட்டாலும்) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்?' என்று கூறினார். (அன்னை) அவர்கள், 'ஏன்?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அதனை (முன்மாதிரியாக)க் கொண்டு நான் குர்ஆனை (வரிசைக் கிரமமாக) தொகுக்க வேண்டும். ஏனெனில், (தற்போது) வரிசைப் பிரகாரம் தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது' என்று கூறினார். ஆயிஷா(ரலி), '(வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில்) எதை நீங்கள் முதலில் ஓதினால் (என்ன? எதை அடுத்து ஓதினால்) என்ன கஷ்டம் (ஏற்பட்டு விடப்போகிறது?)' என்று கேட்டார்கள்.

'முஃபஸ்ஸல்' (எனும் ஓரளவு சிறிய) அத்தியாயங்களில் உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது. அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைகளின் மீது திருப்தியடையத் தொடங்கி)யபோது அனுமதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை குறித்த வசனங்கள் அருளப்பட்டன.

எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் மது அருந்தாதீர்கள்' என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள், அல்லது, 'விபச்சாரம் செய்யாதீர்கள்' என்ற (முதன் முதலில்) வசனம் அருளப்பட்டிருக்குமானால், நிச்சயம் அவர்கள், 'நாங்கள் ஒருபோதும் விபசாரத்தைக் கைவிடமாட்டோம்' என்று கூறியிருப்பார்கள். (எனவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க '(இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில்) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மேலும், அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும், கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:56 வது) வசனம் அருளப்பட்டது.

(சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள) அல்பகரா (2 வது) அத்தியாயமும், அந்நிஸா (4 வது) அத்தியாயமும் நான் (மதீனாவில்) நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மனைவியாக) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி) தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை (இராக் நாட்டவரான) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள்.ஸஹீஹுல்

புஹாரி4993

இவையல்லாத இன்னும் பல ஹிக்மத்துகள் உள்ளன (அல்லாஹ் அளம்)

http://www.islamkalvi.com/?p=124186


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts