லேபிள்கள்

திங்கள், 19 ஜூலை, 2021

குடும்பதலைவிகளுக்கான உபயோகமுள்ள சில கிச்சன் டிப்ஸ்....!!

கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால்  மிகச் சுலபமாக தோல் நீங்கி விடும்.

* உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து, அதில் பச்சை கடுகு சேர்த்து  சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், இதை பொரித்த குழம்பு, கூட்டு இவைகளுடன் எண்ணெயில்  பொரித்துப் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய வெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.

* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். சுவை கூடும்.

* துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும். எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை

வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.

* நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.

* கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெயுடன் மிளகாய்  பொடி, உப்பு, பூண்டு,  கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்

https://tamil.webdunia.com/article/useful-home-tips/some-kitchen-tips-for-family-heads-120042900057_1.html    

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts