லேபிள்கள்

வியாழன், 29 ஜூலை, 2021

அழகுபராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்...!!

அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றை பராமரிக்கப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை கழுவும்போது அரிசி கழுவிய நீரால் முகத்தை கழுவ வேண்டும். அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை இறுக செய்திடும்.

அரிசி கழுவிய நிறை தினமும் பேஷியல் க்ளிசராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை  துடைத்திடுங்கள். சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.

கூந்தல் அதிக வறட்ச்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அப்போது அரிசிகளுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து

பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

அரிசி கழுவிய நீரை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக  கிடைக்கும்.

அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள்  வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/rice-washing-water-for-beauty-care-120041500019_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 26 ஜூலை, 2021

குழந்தைகளின்உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் என்ன...?

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்,  இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால் நோய்கள் ஏற்படும்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை  சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். 

வைட்டமின் '' குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும்  இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின்

மஞ்சள்  கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் '' அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் 'பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக்  கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம்  உள்ளது.

வைட்டமின் 'சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்;  பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். 

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின்  சி அதிகம் உள்ளது.

வைட்டமின் 'டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத  குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் 'டி' அதிகம் உள்ளது.

வைட்டமின் '' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை  ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் '' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்

https://tamil.webdunia.com/article/child-rearing-feature/what-are-the-vitamins-needed-for-the-physical-development-of-children-120042500026_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வெள்ளி, 23 ஜூலை, 2021

தினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...!!

கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. 

தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.

கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்க விரும்புவார்கள் தினமும் கறிவேப்பிலையை உண்டு வரலாம்.

கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்  நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல்  தடுக்கும்.

முடியின்

வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. 

கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது.கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள்  வைக்கும் சக்தி உண்டு

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-10-curry-leaves-on-an-empty-stomach-everyday-120042700071_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

திங்கள், 19 ஜூலை, 2021

குடும்பதலைவிகளுக்கான உபயோகமுள்ள சில கிச்சன் டிப்ஸ்....!!

கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால்  மிகச் சுலபமாக தோல் நீங்கி விடும்.

* உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து, அதில் பச்சை கடுகு சேர்த்து  சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், இதை பொரித்த குழம்பு, கூட்டு இவைகளுடன் எண்ணெயில்  பொரித்துப் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய வெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.

* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். சுவை கூடும்.

* துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும். எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை

வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.

* நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.

* கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெயுடன் மிளகாய்  பொடி, உப்பு, பூண்டு,  கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்

https://tamil.webdunia.com/article/useful-home-tips/some-kitchen-tips-for-family-heads-120042900057_1.html    

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வெள்ளி, 16 ஜூலை, 2021

சின்னவெங்காயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது பலன் தரும்...?

வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை  சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. 

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3  வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.

வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை  முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். 

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். 

பாம்பு

கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். 

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப்  பயன்படுத்தலாம். 

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும். காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். 

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-use-small-onions-effective-120050800043_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

செவ்வாய், 13 ஜூலை, 2021

அடர்த்தியாகமுடி வளர என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

முடி கொட்டுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்று முதலில் பார்க்கலாம். அவற்றைத் தெரிந்து கொண்டால் மட்டுமே வேண்டியவற்றைத் தவிர்க்க இயலும்.

முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.

முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும். உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.

சராசரியாக ஒரு நாளுக்கு 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் முடி நிச்சயமாகக் கொட்டத் தொடங்கும்.

சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை அடுப்பிலேற்றி மிதமான அளவு சூடுபடுத்திக் கொள்ளவும். இதனை மிருதுவாக ஸ்கால்ப்பில்  விரல்களைக் கொண்டு சுழற்சி முறையில் தேய்க்கவும். இதனை சில நிமிடங்கள் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில்  தலைக்குக் குளிக்க வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மயிர்க்

கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். 

தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல  பலனைத் தரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க  துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். 

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி  அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும்,  பளபளப்பாக மாறி, அடர்த்தியாக வளரத் தொடங்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-to-do-to-grow-thick-hair-120051300028_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வெள்ளி, 9 ஜூலை, 2021

கர்ப்பகாலத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய காரணம் என்ன....?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. 

கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான  இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின்  உற்பத்தியும் குறையத் தொடங்கலாம். 

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து நிறைந்து உணவை அதிகம் பரிந்துரைக்கின்றார்கள்.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், கர்ப்பிணிப்  பெண்களுக்கு ஏற்படக் கூடும்.

கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும். உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. உடலில் இரும்புச் சத்து சரியாகக்  கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம். முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில்  ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-causes-hemoglobin-levels-during-pregnancy-120051300053_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

செவ்வாய், 6 ஜூலை, 2021

பெண்களுக்கானஇயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்....!!

பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு  அகலும்.

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறிவிடும். கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய்  கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில்  உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.

சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை

குறைக்கிறது.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன்  குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.  பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/let-s-look-at-some-of-the-natural-medicine-tips-for-women-120050800030_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

சனி, 3 ஜூலை, 2021

உடலைஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில எளிய டிப்ஸ்...!!

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லதாகும். 

காலை, மாலை என இரு நேரமும் ஒரு  மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும், சதைகளுக்கு பலம்  கிடைக்கும்.

நேரத்திற்கு சாப்பாடு உணவு உட்கொள்ளவது. ஒரு நாளில் நாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் இதில் காலை 9-9:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 1:30 - 2  மணிக்குள் சாப்பிட வேண்டும். மற்றும் இரவு 7-7:30 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அளவான சாப்பாடு. நாம் தினமும் சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு  உணவில் குறைந்த அளவு சாப்பாடு இருந்தால் செரிமானம் சீராக ஏற்படும்.

உடற்பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோக்கியம் கூடும்.

நமது தினசரி வேலையை நேரத்திற்கு செய்வது. ஒரு நாளைக்கு நாம் செய்யும் வேலையை நாம் மற்ற நாளிலும் அதே நேரத்திற்கு செய்ய வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது.  இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  முடிந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  நல்லதாகும்.

நாம் உட்கொள்ளும் உணவில் காயிகரிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்கள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.  அசைவ

உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/tips-for-keeping-the-body-healthy-120051400024_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts